தீக்கதிர் உலக செய்திகள்
13 May 2026, 9:31 pm

காலனி நாடுகளில் உயர்கல்வி சேர்க்கை குறைவு

கடந்த இருபது ஆண்டுகளில் உலகளவில் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது என யுனெஸ்கோ சுட்டிக்காட்டியுள்ளது. 146 நாடுகளின் தரவுகளின் அடிப்படையில் அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் உயர்கல்வியில் உலகளாவிய மாணவர் சேர்க்கை 2000 இல் 100 மில்லியனாக இருந்தது. இது 2024 இல் 269 மில்லியனாக உயர்ந்துள்ளது. மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் 80 சதவீத இளைஞர்கள் உயர்கல்வியில் சேருகின்றனர். ஐரோப்பா, அமெரிக்காவால் சுரண்டப்பட்ட துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் வெறும் 9 சதவீதமாக மட்டுமே உள்ளது.

ஈரான் மீதான போருக்கு 2.7 லட்சம் கோடி செலவு

ஈரான் மீது நடத்திய போருக்காக இதுவரை சுமார் 2.7 லட்சம் கோடி ரூபாயை (29 பில்லியன் டாலர்) செலவு செய்துள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகம் பெண்டகன் தெரி வித்துள்ளது. இது கடந்த மாத இறுதி யில் அளிக்கப்பட்ட மதிப்பீட்டை விட 4 பில்லியன் டாலரை விட பல மடங்கு அதிகமாகும். அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில்,இந்தப் போர்ச் செலவுகளை மக்களின் வாழ்க்கைச் செலவுப் பிரச்சனைகளுடன் இணைத்துப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. போரின் முதல் ஆறு நாட்களில் மட்டும் குறைந்தது 11.3 பில்லியன் டாலர் செலவாகும் என்று மார்ச் மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சீன-அமெரிக்க அதிகாரிகள் தென்கொரியாவில் ஆலோசனை

சீன-அமெரிக்க அதிகாரிகள் தென்கொரியாவில் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். டிரம்ப் சீனாவிற்கு அரசுமுறைப் பயணமாக செல்லும் நிலையில் அதற்கு முன்னதாக தென்கொரியாவில் இரு நாட்டு அதிகாரிகளும் ஆலோசனை நடத்தியுள்ளனர். அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், சீனத் துணைப் பிரதமர் ஹீ லிஃபெங் ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். டிரம்ப், ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பின் போது வெளியிடப்படவுள்ள அறிவிப்புகளுக்கு இறுதி வடிவம் கொடுக்க இந்த ஆலோசனைகள் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இலங்கையில் சைபர் குற்றங்கள் 173 இந்தியர்கள் கைது

இலங்கையில் சைபர் குற்றங்க ளில் ஈடுபட்டதாக 198 வெளிநாட்டினரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது. மிதிகம, ஹிக்கடுவ, காலி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சோதனைகளில் 173 இந்தியர்கள், 25 நேபாளி கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சோதனை யில் மொத்தம் 83 கணினிகள் மற்றும் 198 மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை தற்போது குற்றப்புலனாய்வுத் துறையினரால் (CID) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது கணினி குற்றச் சட்டம், முறையான விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தது, சுற்றுலா விசாவில் வந்து வேலை பார்த்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.