தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

24 Sept 2026, 9:05 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

உக்ரைன் போர் : உடனடியாக நிறுத்த வேண்டும்

உக்ரைனில் உடனடியாக, முழுமையான எவ்வித நிபந்தனையுமற்ற போர்நிறுத்தத்தை கொண்டு வர உலக நாடுகள் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா அவை அவசர அழைப்பு விடுத்துள்ளது. உக்ரைன் போர் ஐந்தாவது ஆண்டை நெருங்கும் வேளையில், ரஷ்யாவும் உக்ரைனும் மேலும் ஒரு பெரிய போரையோ அல்லது அமைதியை நோக்கிய பாதையையோ தேர்ந்தெடுக்க வேண்டிய முக்கியமான கட்டத்தில் இருக்கின்றன. இந்தத் தாக்கம் நம் அனைவர் மீதும் இருக்கும். தூதரக பேச்சுவார்த்தைகளுடன் களத்தில் போரின் தீவிரத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் சர்வதேச அமைதிக்கான ஆபத்துகள் மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவால் சிறுவர்களுக்கு அதிக ஆபத்து

சமூக ஊடகங்களை விடச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சிறுவர்களுக்கு மிக அதிகமான ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என்று கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி டாம் சீகல் எச்சரித்துள்ளார். தொழில்நுட்ப நிறுவனங்கள் போதிய பாதுகாப்பு வழிமுறைகளை அமல்படுத்தாமல் உள்ளதால் இந்த பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் அறிமுகமான காலத்தில் செய்யப்பட்ட தவறுகளையே தொழில்நுட்பத் துறை மீண்டும் செய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

எபோலா பரவலைக் கட்டுப்படுத்த அமெரிக்கா கூடுதல் நிதி உதவி

காங்கோவில் தீவிரமாகப் பரவி வரும் கொடிய எபோலா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த, 2,500 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. இந்த நோயைக் கட்டுப்படுத்த மொத்தம் 16,600 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. இந்த இலக்கை அடைய மற்ற நாடுகளும் தங்களால் இயன்ற நிதியை வழங்க முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் கண்டறியப்பட்ட இந்த எபோலா பரவல், வரலாற்றிலேயே இரண்டாவது மிகப்பெரிய மற்றும் கொடூரமான நோய்த்தொற்றாக மாறியுள்ளது.

அடிமை வர்த்தகத்திற்கு நஷ்டஈடு : கானாவுக்கு அதிகரிக்கும் ஆதரவு

ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகளாக நடைபெற்ற அடிமை வர்த்தகத்திற்காக இழப்பீடு வழங்க வேண்டும் என கானா அரசு கோரி வருகிறது. இம்முயற்சிக்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கொள்ளையடிக்கப்பட்ட கலைப்பொருட்களை திரும்பப்பெறுவதே எங்களின் முதற்கட்ட கவனம். இதன் அடுத்த கட்டங்களாக முறையாக மன்னிப்புக் கோருவது, கடன்களைத் தள்ளுபடி செய்வது, இழப்பீடு வழங்குவது ஆகியவை இடம்பெறும் என கானா வெளியுறவு அமைச்சர் சாமுவேல் ஒகுட்செட்டோ அப்லக்வா கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் ஐ.நா. பொதுச் அவையில் அட்லாண்டிக் அடிமை வர்த்தகம் ‘மனிதகுலத்திற்கு எதிரான மிகக் கொடூரமான குற்றம்’ என அங்கீகரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 123 நாடுகள் வாக்களித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

‘கொலை செய்வதற்கு உரிமமா?’பிரான்சில் மக்கள் போராட்டம்

பாரிஸ்,செப்.24-பிரான்சில் காவலர்கள் துப்பாக்கி சூடுநடத்துவதை எளிமையாக மாற்றுவதுடன் அதனை நியாயப்படுத்தும் வகையில் புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கு எதிராக மக்கள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இடதுசாரி கட்சிகள், முற்போக்கு அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் இந்த மசோதாவை “காவலர்கள் கொலை செய்வதற்கு அரசு கொடுக்கும்உரிமம்” என்று விமர்சித்து வருகின்றனர்.

முந்தைய நடைமுறைப்படி, காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினால், அது “நியாயமான தற்காப்புக்காகவே நடத்தப்பட்டது” என்பதை அரசாங்கம் நீதிமன்றத்தில் நிரூபிதாக வேண்டும். ஆனால், புதிய சட்டப்படி, ஒரு காவலர் துப்பாக்கியைப் பயன்படுத்தினாலே, “அவர் தன்தற்காப்பிற்காக நியாயமாகவே செய்தார்” என்று சட்டப்பூர்வமாக முதல் கட்டத்திலேயே எடுத்துக்கொள்ளப்படும்.அது தவறு அல்லது தேவையற்ற துப்பாக்கிச் சூடு என்பதைப் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது அரசுத் தரப்போதான் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என மாற்றப்பட்டு விட்டது.மக்கள் போராட்டத்தை கவனத்தில் கொள்ளாத மக்ரோன் தலைமையிலான பிரான்ஸ் அரசு தீவிர வலதுசாரி கட்சியான ‘தேசிய பேரணி’ ஆதரவுடன் ஜூலை 7 அன்று நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் (National Assembly) இந்தமசோதாவை வலுக்கட்டாயமாக நிறைவேற்றியது. இந்தச் சட்டம் இப்போது செனட் பரிசீலனைக்குச் செல்லஉள்ளது.

இந்தச் சட்டத்திற்கு எதிராகப் பிரான்ஸ் மக்கள் நடத்திய கையெழுத்துஇயக்கத்தில் 7,30,000க்கும் அதிகமானவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.இடதுசாரி கட்சிகள், முற்போக்கு அமைப்புகள் மற்றும் சட்ட நிபுணர்கள் இந்த மசோதாவால் பல ஆபத்துகள் உருவாகும் என எச்சரித்துள்ளனர். காவல்துறையினருக்கு எல்லைமீறிய அதிகாரம் கிடைப்பதால், துப்பாக்கிப் பயன்பாடு இயல்பான ஒன்றாக மாறிவிடும்.சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து விடும்.

அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பியநாடுகளில் இனவெறி காரணமாக கறுப்பின மக்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மீது காவலர்களே தாக்குதலை கட்டவிழ்த்து விடுகிறார்கள். பிரான்சில் ஏற்கெனவே கருப்பின மக்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் ஏழை/உழைக்கும்வர்க்க மக்கள் மீது சந்தேகம் என்ற பேரில் காவல்துறை தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் இந்த சட்டம்காவல்துறையினரது வன்முறைகளுக்கு சட்டப்பாதுகாப்பை கொடுக்கும். புலம்பெயர்ந்தவர்கள் அல்லது பிறமக்கள் மீது தாக்குதல்கள் நடத்தி விட்டு இந்த சட்டத்தை பயன்படுத்தி காவலர்கள்தப்பிவிடுவார்கள் என இச்சட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. சென்ட் சபையிலும் இந்த சட்டம்நிறைவேற்றப்பட்டால், நாட்டின் கருப்பின, புலம்பெயர்ந்த மற்றும் உழைக்கும்வர்க்க சமூகங்களுக்குப் பேரழிவுகரமான விளைவுகளை உருவாக்கும் என போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.