தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

29 Sept 2026, 8:16 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

ஈரான் சொத்துக்களை விடுவிக்க முடியாது-டிரம்ப்

ஈரான் மீது விதிக்கப்பட்ட தடைகளை குறைப்பதாகவும் அந்நாட்டின் முடக்கப்பட்ட நிதியை வழங்கவும் ‘டிரம்ப்’ சம்மதித்ததாக ஆக்சியோஸ் நிறுவனம் செய்திவெளியிட்டுள்ளது. இச்செய்தியை டிரம்ப் மறுத்துள்ளார்.மேலும் அச்செய்தி உண்மையல்ல. ஒரு பொய் பிரச்சாரம். நான் ஈரானுக்கு எதையும் வழங்க முன்வரவில்லை. அந்நிறுவனம் இந்த செய்தியை நீக்க வேண்டும் என கூறியுள்ளார். போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக ஈரான் கூறும் நிலையில் அந்நாட்டின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் பேச்சுவார்த்தைக்கும் அமெரிக்கமறுத்து வருகின்றது.

ரஷ்ய மக்களை தோற்கடிக்க முடியாது - புடின்

ரஷ்யாவின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளானது, மக்களைப் பயமுறுத்தவோ தோற்கடிக்கவோ முடி

யாது என்பதையே காட்டுகின்றன என்று அந்நாட்டு ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை மக்கள் மிக நன்றாகப்புரிந்து வைத்துள்ளனர். தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாத மற்றும் வெளிநாட்டு உளவு அமைப்புகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இந்த சீர்குலைவு நடவடிக்கைகளும் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோற்றுவிட்டது என புடின் குறிப்பிட்டுள்ளார்.

மக்களை ஏமாற்றும் ஏஐ வெளியீடு நிறுத்தம்

ஓபன்ஏஐ நிறுவனம் ஜிபிடி-6.1 ஆஸ்ட்ரா எனும்புதிய செயற்கை நுண்ணறிவு மாடலை உருவாக்கியுள்ளது. அதை பரிசோதனை செய்த போது முந்தையமாடல்களை விட அதிகஏமாற்றுத் திறன் கொண்டதாகவும், நிறுவனத்தின் பாதுகாப்புத் தரத்திற்குக் குறைவாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதன்திட்டமிடப்பட்ட வெளியீட்டைநிறுவனம் ரத்து செய்துள்ளதாக வால்ஸ்ட்ரீட் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இம்மாடல் மனிதர்களின் குறைந்தபட்ச கண்காணிப்புடன் மிகவும் சிக்கலான பணிகளைச்செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெளியுறவுத்துறை அதிகாரியை பாகிஸ்தானுக்கு பயணம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் பாகிஸ்தானில் நடை

பெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் அலோக் திம்ரி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். 2027 ஆகஸ்ட் மாதம் அந்நாட்டு தலைநகர் இஸ்லாமாபாத்தில் இவ்வமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் உறுப்பு நாடுகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த இக்கூட்டம் நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு போப் லியோ எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவால் உலகம் அழியக்கூடும் என்றபயம் வெறும் “போலிச் செய்திகள்” அல்ல. அதைத்தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என போப் லியோ எச்சரித்துள்ளார். கடந்த வாரம்

மனிதகுலத்திற்கு செயற்கை நுண்ணறிவால் ஏற்படும்ஆபத்துகள் குறித்த அச்சங்கள் ஒரு “பொய் பிரச்சாரம்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் போப்பின் கருத்து டிரம்ப்பிற்கு நேரடியாக விடுக்கப்பட்ட கண்டனமாகப் பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவின் ஆபத்துகள் குறித்து எச்சரித்து வரும் போப், தொழில்நுட்பத்தின் மீது எந்தவிதக் கட்டுப்பாடுகளும்இருக்கக்கூடாது என்று வாதிடும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளையும் நேரடியாகவிமர்சித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.