தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

8 Sept 2026, 9:12 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

எல் நினோ தாக்கம் : இலங்கையில் குடிநீர் தட்டுப்பாடு

எல் நினோ காரணமாக, இலங்கையில் அதிக வெப்பநிலை மற்றும் குறைவான மழைப்பொழிவு ஆகியவற்றுடன் சேர்ந்து வறட்சியான வானிலையை தீவிரமாகியுள்ளது. இதனால் இலங்கையில் 1,15,000-க்கும் அதிகமான மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். எல் நினோ, வெப்பநிலை முறைகளை மாற்றியமைக்கும். வறட்சி தொடர்ந்து நீடிப்பதால், இலங்கையில் இதன் தாக்கங்கள் மேலும் அதிகரிக்கலாம் எனவே அது குறித்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

லாபத்திற்காக ஆயுத உற்பத்தி : வோக்ஸ்வோகன் நிறுவனம் முடிவு

‘வோக்ஸ்வேகன்’ வாகன உற்பத்தி நிறுவனமானது தனது தொழிற்சாலை ஒன்றை ராணுவ ஆயுத உற்பத்தி மையமாக மாற்ற உள்ளது. வரும் நாட்களில் இஸ்ரேலின் ‘ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ்’ ஆயுத தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இந்த நிறுவனம் ஆயுதங்களை உற்பத்தி செய்ய உள்ளது. உலகம் முழுவதும் போர்கள் நடந்து வரும் நிலையில் வாகன உற்பத்தியை விட ஆயுத உற்பத்தியில் அதிக லாபம் பார்க்கும் நோக்கத்துடன் அந்நிறுவனம் ஆயுத உற்பத்திக்கு செல்வதாக கூறப்படுகின்றது.

ஓமன்-ஈரான் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

எண்ணெய் கப்பல் போக்குவரத்திற்கு ஹோர்முஸ் நீரிணையில் ‘தற்காலிக, பாதுகாப்பான பாதை’ அமைப்பது தொடர்பாக ஓமனுடன் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தை இறுதி செய்து வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே எட்டப்பட உள்ள புரிந்துணர்வில், கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு மிக முக்கியமான போக்குவரத்துப் பாதையாக திகழும் ஹோர்முஸ் நீரிணை வழியே ஒரு தற்காலிகப் பாதுகாப்பான கப்பல் பாதை குறித்த விவரங்கள் இடம்பெறும். இந்த ஒப்பந்தம் வரும் நாட்களில் சர்வதேச கடல்சார் அமைப்பில் (IMO) முறைப்படி பதிவு செய்யப்படும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி தெரிவித்துள்ளார்.

முதலாளித்துவத்தின் இழிவான முகம் ஜெலென்ஸி அரசு போருக்கான பணத்திற்காக பாலியல் சுரண்டலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடிவு

கீவ்,செப்.8-ரஷ்யாவுடனான போருக்கு அதிகபணம் தேவைப்படுவதால் (இணையவழி) ஆபாசப் படங்களின் தயாரிப்புகளை சட்டப்பூர்வமாக மாற்ற ஜெலன்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு முயற்சித்து வருகின்றது. ரஷ்யா மீது உக்ரைன் நடத்தி வரும் போருக்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ஆயுதங்கள் மற்றும் பணம் கொடுத்து உதவி செய்து வருகின்றன. நாளுக்கு நாள்போர் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைன் ராணுவத்திற்கு அதிக பணம் தேவைப்படுகின்றது. இதனால் மேலும் அதிக பணம் பெறுவதற்கு புதிய வழிகளை உக்ரைன் தேடி வரும் பிண்ணனியில் பாலியல் சுரண்டலான ஆபாசப் படங்களின் தயாரிப்புமற்றும் வெளியீட்டை சட்டப்பூர்வமாக்கி ஆபாச படங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வரிகள் விதித்து பணம் பெருவதற்கு திட்டமிட்டு வருகின்றது.

சோவியத் இருந்த போது ஆபாசப் படங்களை தயாரிப்பது, விநியோகிப்பது மற்றும் வைத்திருப்பதை குற்றமாகக் கருதும் சட்டம் இருந்தது. அந்த சட்டங்கள் சோவியத் சிதைவுக்கு பிறகு பிரிந்த சில நாடுகளில் நடைமுறையில் இருந்தது.

உக்ரைனிலும் அச்சட்டம் உள்ளது. எனவே ஆபாசப் படங்களின் தயாரிப்பு மற்றும் விநியோகத்தை குற்றமற்றதாக்கி, அத்துறையை நாட்டின் முறையான வரி அமைப்பிற்குள் கொண்டுவர நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய சட்டம் மூலமாக அத்துறையை வரி கட்டமைப்புக்குள் கொண்டு வந்தால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.5 கோடி டாலர் (236.25 கோடி ரூபாய்) வருவாய்கிடைக்கக்கூடும் என்றும், அது ஆயிரக்கணக்கான ராணுவ டிரோன்களுக்கு நிதியளிக்க உதவும் என்றும் இந்த மசோதாவுக்கு ஆதரவான எம்.பி.,க்கள் கூறுகின்றனர்.தற்போதும் நடைமுறையில் உள்ள சோவியத் கால சட்டத்தின் படிஆபாசப் படங்களை தயாரிப்பதோவிநியோகிப்பதோ குற்றமாக கருதப்படும் அதே வேளையில், ‘ஒன்லிஃபேன்ஸ்’ (OnlyFans) போன்ற வெளிநாட்டு தளங்கள் மூலம் தனிநபர்கள் (உக்ரைன் குடிமக்கள்) கணக்கு துவங்கிஆபாச படங்கள் நடித்து வருமானம் பார்க்கின்றனர். இந்த வருமானத்தை கணக்கு காட்டி அதற்கு வரிசெலுத்துங்கள் என உக்ரைன் அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர்.

‘ஒன்லிஃபேன்ஸ்’ (OnlyFans) தளத்தின் தாய் நிறுவனமான பிரிட்டனைச் சேர்ந்த ‘ஃபெனிக்ஸ் இன்டர்நேஷனல்’ (Fenix International) தரவுகளின்படி, 2023-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 7,900 உக்ரேன் குடிமக்கள் இந்தத் தளத்தின் மூலம் 13.1 கோடி டாலருக்கும் (சுமார் 1,237.95 கோடி ரூபாய்) மேல் வருமானம்ஈட்டியுள்ளனர்.

இந்நிலையில் தான் அதிக பணம் புழங்குகின்ற இந்த துறையை சட்டப்பூர்வமாக்கி அதன் மூலம்கோடிக்கணக்கில் வரி வருவாய் பெற்று ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு பயன்படுத்த ஜெலென்ஸ்கி அரசுதிட்டமிட்டுள்ளது.

மனித குலத்திற்கு எதிரான போரை நிறுத்துவதற்கோ, வறுமையில் இருந்து மீளவும், வாழ்வாதாரத்திற்காகவும் இணைய வழி பாலியல் தொழிலில் ஈடுபடும் குடிமக்களைஅதிலில் இருந்து மீட்கவோ திட்டம் வகுக்காமல் மேலும் அதிக மக்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருமானம் பார்க்க துடிக்கிறது ஜெலன்ஸ்கி அரசு. இது தான் முதலாளித்துவத்தின் அசிங்கமான முகம் என கடும் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.