தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

3 Jul 2026, 9:29 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

கொலம்பியா புதிய ஜனாதிபதி அமெரிக்காவுடன் ரகசிய தொடர்பு

கொலம்பியா ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள அபிலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லாவுக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு துறையுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம்எழுப்பப்பட்டுள்ளது. முற்போக்கு வேட்பாளரான இவான் செபெடா புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தீவிரவலதுசாரி வேட்பாளர் எஸ்ப்ரியெல்லா பதவியேற்பதற்கு முன்பாக தனது அமெரிக்கக் குடியுரிமையை கைவிட வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக வலியுறுத்தியுள்ளார். மேலும் அவருக்கு அமெரிக்கப் பாதுகாப்பு முகமை யுடன் தொடர்பு (உறுப்பினராக கூட) இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் இவான் செபெடா எழுப்பியுள்ளார்.

ஹண்டாவைரஸ் தொற்று முழுமையாக முடிவுக்கு வந்தது

சொகுசு கப்பலில் பரவிய ஹண்டாவைரஸ் தொற்று முழுமையாக முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த மே 25-ஆம் தேதிக்குப் பிறகு புதிய பாதிப்புகள் ஏதும் பதிவாகவில்லை.மேலும், இத்தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடைசி நபருக்கும் பரிசோதனையில் ‘நெகட்டிவ்’ என முடிவுகள் வந்து அவர் வீடு திரும்பியதைத் தொடர்ந்து, இந்தத் தொற்று பரவல் அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தகவலை உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் தெரிவித்தார்.

லெபனான் பள்ளிக்கூடங்கள்: இஸ்ரேல் ராணுவம் அழிப்பு

இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது குண்டு வீசி 340 கல்வி நிறுவனங்களை சிதைத்துள்ளது. இந்த பள்ளிகளை செப்டம்பர் மாதத்திற்குள் சீரமைக்காவிட்டால், சுமார் 1,00,000 குழந்தைகள் கல்வி பெற முடியாத நிலை உருவாகும் அபாயம் எழுந்துள்ளது என ஐ.நா குழந்தைகள் நிதியம் எச்சரித்துள்ளது. இதில் 17 கல்வி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் நீண்ட நாட்களாகப் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது, குழந்தைத் தொழிலாளர் முறை மற்றும் குழந்தைத் திருமணம் போன்ற அபாயங்களை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பிரான்சில் வெப்ப அலை : 30 சதவிகிதம் அதிகரித்த உயிரிழப்பு

பிரான்ஸ் வரலாற்றில் இல்லாத அளவுக்கு வீசி வரும் வெப்ப அலை காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை அந்நாட்டுப் பொதுச் சுகாதார அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. ஜூன் இரண்டாம் வாரத்துடன் ஒப்பிடுகையில் உயிரிழப்புகள் 29.1 சதவீதம் அதிகரித்துள்ளன. அதாவது வழக்கத்தை விட கூடுதலாக 2,025 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை “உண்மையான பாதிப்பை விடக் குறைவாகவே மதிப்பிடப்பட்டிருக்கலாம்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பாகிஸ்தானில் 40 பேர் பலி

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் காயமடைந்தனர். பலூசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களின் எல்லைக்கு அருகிலுள்ள டானா சாரில், அதிக பயணிகளுடன் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததாக கூறப்பட்டுள்ளது. வழியில் பழுதடைந்து நின்ற மற்றொரு பேருந்தின் பயணிகளையும் ஏற்றிச் சென்ற நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகளிலும், காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் பணிகளிலும் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுலா நிலநடுக்கம்: 2,500-ஐத் தாண்டிய உயிரிழப்புகள் 7 நாட்கள் தேசிய துக்கம் பிரகடனம்

காரகஸ்,ஜூலை 3- வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அச்சமூட்டும் வகை யில் உயர்ந்து வருகிறது. தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,595 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடு களுக்குள் சிக்கியவர்களைக் கண்ட றிய இரவு பகலாக தீவிரமான மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுவாக நிலநடுக்கத்திற்குப் பிறகு இடிபாடுகளுக்குள் மனிதர்கள் உயிர் பிழைத்திருக்க 5 முதல் 10 நாட்கள் வரை மட்டுமே வாய்ப்புள் ளது. இதனால் மீட்புக் குழுவினர் நேரத்தோடு போட்டி போட்டுக் கொண்டு மிக வேகமாகச் செயல்பட வேண்டியுள்ளது.

இடைக்கால ஜனாதிபதி அறிவிப்பு

நாட்டின் இந்த மிக மோசமான இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வெனிசுலாவின் இடைக் ்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் ஜூலை 1 முதல் 7 நாட்களுக்குத் தேசிய துக்க தினமாகப் பிரகடனம் செய்துள் ளார். தலைநகர் காரகஸில் உள்ள மருத்துவமனைகளில் இதுவரை 11,000-க்கும் மேற்பட்டவர்கள் அனும திக்கப்பட்டுள்ளனர். எனினும், அமெ ரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் மருத்துவ மற்றும் மீட்பு உபகரணங்களை வாங்குவதில் ஏற்பட்டுள்ள முடக்கத்தால், மருத்துவ மனைகள் மிகவும் மோசமான மற்றும் நெருக்கடியான சூழலில் இயங்கி வருகின்றன.

தொடரும் மீட்புப் போராட்டம்

நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ள நிலை யிலும், உள்ளூர் மீட்புக் குழுக்கள், ஆயுதப் படைகள் மற்றும் பொது மக்கள் தங்களின் மக்களை மீட்கத் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இதுவரை 6,400-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளிலிருந்து உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர் என சட்டமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் தெரி வித்துள்ளார்.

இருப்பினும், இந்த இயற்கை சீற்றத்தால் கிட்டத்தட்ட 16,000 மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை யும் வீடுகளையும் இழந்து பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு உடனடி உதவிகள் தேவைப்படுகின்றன. 30 நாடுகளிலிருந்து உதவி வெனிசுலாவின் அவசர உத விக்கான கோரிக்கையை ஏற்று சர்வதேச சமூகம் மிக வலுவான ஆத ரவை வழங்கி வருகிறது. 30 நாடுகளிலிருந்து 53 சிறப்பு மீட்புக் குழுக்களைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட சர்வதேச மீட்புப் பணியா ளர்கள் வெனிசுலாவில் மீட்புப்பணி யில் ஈடுபட்டுள்ளனர்.

கியூபா, எல் சல்வடோர், வியட் நாம், கொலம்பியா, கத்தார், அமெரிக்கா, ஜெர்மனி, மெக்சிகோ, பிரேசில், சிலி, ஈக்வடார், டொமினிகன் குடியரசு, பெரு, பராகுவே, ஸ்பெ யின், சுவிட்சர்லாந்து மற்றும் நெதர் லாந்து உள்ளிட்ட நாடுகள் தங்களின் மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளன. அத்துடன் உணவு, மருத்துவப் பொ ருட்கள் மற்றும் கனரக மீட்பு உபகர ணங்களையும் வழங்கி வருகின்றன.

தற்போது நிலவி வரும் மிகக் கடுமையான வெப்ப நிலை (சுமார் 34 டிகிரி செல்சியஸ்) மற்றும் 80% காற்று ஈரப்பதம் (Humidity) மீட்புப் பணி களைப் பெரிதும் பாதித்து வரு கின்றன. இந்த வெப்பமான சூழல் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்ப வர்கள் தொடர்ந்து உயிர் வாழ்வதை யும் கடினமாக்கியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.