தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

18 Jul 2026, 9:10 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

உக்ரைன் தாக்குதல் : ரஷ்யாவில் ஏழு பேர் பலி

சனிக்கிழமை அதிகாலை ரஷ்யாவின் தம்போவ் மாகாணத்தின் கோடோவ்ஸ்க் பகுதியில் உள்ள ஒரு ஆயுத தளவாட மையத்தின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் ஏழு தொழி லாளர்கள் படுகொலையாகியுள்ளனர். மற்றும் 24 பேர் படுகாயமடைந்தனர் இந்தத் தாக்குதல் தொடர்பான தகவலை அம்மாகாண ஆளுநர் எவ்ஜெனி பெர்விஷோவ் உறுதிப்படுத்தினார். தாக்குதல் காரணமாக அத்தள வாட மையத்தின் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வெனிசுலா பலி எண்ணிக்கை 5,069 ஆக உயர்வு

வெனிசுலாவில் ஜூன் 24 அன்று ஏற்பட்ட நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,069 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டின் நாடாளுமன்றத் தலைவர் ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் இத்தகவ லை உறுதிப்படுத்தியுள்ளார். இதுவரை 6,462 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களின் எண் ணிக்கை 16,740 ஆகத் தொடர்கிறது. தற்போது வெனிசுலா தலைநகரான காரகஸ், லாகுவைரா, மிராண்டா, அராகுவா ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள 107 தற்காலிக முகாம்களில் 21,235 பேர் தங்கி யுள்ளனர். அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு மூன்று வாரங்களுக்கு மேலான நிலையில், இதுவரை 1,331 தொடர் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.

பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் அச்சுறுத்தலுக்குள்ளான பகுதிகள்

உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில், போர் மற்றும் காலநிலை மாற்றங்களால் அச்சுறுத்தலுக் குள்ளாகியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை இணைக்க யுனெஸ்கோ திட்டமிட்டுள்ளது. பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் ஆபத்தில் உள்ள இடங்களின் பட்டியலில் ஒரு இடத்தைச் சேர்ப்பது, அந்த இடத்தைப் பாதுகாக்கத் தேவையான நிதியையும், கவனத்தையும் ஈர்ப்பதற்கான ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் உள்ள செபாஸ்டியா தொல்பொருள் தளம். தெற்கு லெபனானில் உள்ள ஐந்து கோட்டைகள் தெற்கு சூடானில் உள்ள போமா-பாடிங்கிலோபுல்வெளி மற்றும் காடு சார்ந்த பகுதி முன்னுரிமை பட்டியலில் உள்ளது.

காட்டுத் தீ ஏற்பட்டதால் கனடாவுக்கு வரி - டிரம்ப்

கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் உருவான புகை, அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வரை பரவியுள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கனடா தனது காடுகளைச் சரியாகப் பராமரிக்கவில்லை என்றும், அதன் விளைவாக அமெரிக்கா அசுத்தமான மற்றும் ஆரோக்கியமற்ற காற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா விற்கு ஏற்படும் பில்லியன் கணக்கான டாலர் செலவை, கனடா மீது ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள வரி களுடன் சேர்ப்பேன் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

சீனாவில் நிலச்சரிவு : 8 பேர் பலி

சீனாவின் சோங்கிங் நகருக்கு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். 34 பேர் காணாமல் போயுள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கிய 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு நடந்த பகுதியில் இருந்து சுமார் 1,100-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். 800-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை ஆய்வு செய்ய டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. நிலச்சரிவை முன்கூட்டியே உள்ளூர் அதிகாரிகள் கணித்து மக்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்ட நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

உலக செயற்கை நுண்ணறிவு போட்டி: முதல் இடத்தை பிடிக்கும் சீனா

பெய்ஜிங், ஜூலை 18- அமெரிக்காவின் “பாக்ஸ் சிலிகா” (Pax Silica) முயற்சிக்கு மாற்றாக, சீனா ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கூட்டணியை முன்மொ ழிந்துள்ளது. ஷாங்காயில் நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் (WAIC) ‘உலக செயற்கை நுண்ண றிவு ஒத்துழைப்பு அமைப்பை’ (WAI CO) சீனா உருவாக்கியுள்ளது.

29 உறுப்பு நாடுகள் கையெழுத்திட்டுள்ள இந்த அமைப்பை, “உலகளாவிய செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் ஒரு மைல்கல்” என்று ஜி ஜின்பிங் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். பாக்ஸ் சிலிகா மூலம் பிற நாடுகளின் இறையாண்மை மற்றும் குடிமக்களின் தரவுகளை அமெரிக்கா சூறையாட திட்டமிடும் நிலையில் உலக நாடுகள் திறந்தநிலை செயற்கை நுண்ணறிவு (open-sou rce AI) தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.

இது தொழில் நுட்ப பகிர்வை ஊக்குவித்து வளரும் நாடுகளை இத்துறையில் மேம்படுத்த உதவி செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது. உலகளவில் அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத் துறை போட்டியில் சீனா முதல் இடத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. சமீபத்தில் சீனாவைச் சேர்ந்த ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனமான மூன்ஷாட் (Moonshot AI) உலகின் மிகப்பெரிய திறந்த வடிவிலான (Open-weight) ஏஐ மாடல் கிமி கே3 (Kimi K3)-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த மாடல், ஓபன் ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் போன்ற நிறுவனங்களின் முன்னணி செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களுக்கு இணையாக செயல் படுகிறது.

இதில் குறிப்பிட வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென் றால் அமெரிக்க நிறுவனங்கள் செய்யு முதலீட்டை விட குறைந்த அள விலான முதலீட்டில் மிகத்தரமான செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களை சீனாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களே உருவாக்குகின்றன. இந்நிலையில் தான் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சீனா தனது எதிர்கால திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது. ஷாங்காயில் நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் (WAIC) உரையாற்றிய சீன ஜனாதி பதி ஜி ஜின்பிங், புதிய உலகளாவிய செயற்கை நுண்ணறிவுக் கட்ட மைப்பில் சீனா ஒரு முக்கிய தலைமை நாடாக செயல்படும் என்பதை உறு திப்படுத்தியுள்ளார்.

தொழில்நுட்பங்கள் சமமற்ற முறையில் பகிரப்படுவதால் “வர லாற்று அநீதிகள்” ஏற்படும் என்பதனை சுட்டிக்காட்டிய ஜி ஜின் பிங் வளரும் நாடுகள் செயற்கை நுண்ணறிவுத் திறன்களைக் கட்டமைக்க சீனா உதவும் என்று உறுதியளித்துள்ளார். இந்தத் துறையில் அமெரிக்கா வின் கட்டுப்பாடுகள் மற்றும் ஆதிக் ்கத்திற்குப் போட்டியாக, சீனா தனது சொந்த தரநிலைகளை உருவாக்கி வருகிறது. குறிப்பாக, பிரிக்ஸ் (Brics), ஆசியான் (Asean) மற்றும் ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகளுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு மையங்களை உரு வாக்க சீனா திட்டமிட்டுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியில் கவனம் செலுத்துவதுடன், பாது காப்பு விவகாரங்களிலும் சீனா தீவிர மாக உள்ளது. மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் செயற்கை நுண்ண றிவு மாடல் அமைப்புகளின் ஆபத்து குறித்து எச்சரித்த ஜி ஜின்பிங், செயற்கை நுண்ணறிவு அபாயங்க ளைக் கண்டறிந்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்புகள் மற்றும் கடுமையான கண்காணிப்பு வழிமுறைகள் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க நிறுவனங்களின் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், சர்வ தேச அளவில் தொழில்நுட்ப விதி களை வகுக்கும் சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் சீனா மேற் கொள்ளும் ஒரு இராஜதந்திர முயற்சி யாகவே இது பார்க்கப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.