தீக்கதிர் உலக செய்திகள்
12 Jun 2026, 8:46 pm

சீனச் சந்தையை விரும்பும் ஐரோப்பிய உணவு நிறுவனங்கள்

போலந்தில் நடைபெற்ற ‘வார்சா உணவு கண்காட்சியில்’ கலந்துகொண்ட பல ஐரோப்பிய நிறுவனங்கள், சீனாவுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளன. சீன வாடிக்கையாளர்களுக்குத் தரமான பொருட்களைப் பற்றி நன்றாகத் தெரிகிறது. அவர்கள் சிறந்ததையே விரும்புகிறார்கள்; அதற்காக நல்ல விலையைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். இதுவே நாங்கள் சீனச் சந்தையில் காலடி வைக்கப் பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது என போலந்து நாட்டின் ‘ஜியோட்டோ’ (Giotto) நிறுவன பொது மேலாளர் என்ரி காரன்ஸ் கூறியுள்ளார்.

மாலத்தீவில் தட்டம்மை பாதிப்புக்கு இந்திய மருத்துவப் பொருட்கள்

மாலத்தீவில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்து வருக்கிறது. இந்த பரவலை கட்டுப்படுத்தவும், அந்நாட்டின் நோய் எதிர்ப்புத் தடுப்பூசித் திட்டத்தை வலுப்படுத்தவும் இந்தியா 20,000 தட்டம்மை தடுப்பூசிகளையும், சுமார் மூன்று டன் மருத்துவப் பொருட்களையும் அனுப்பியுள்ளது. இந்த உதவியை இந்திய வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது. மேலும் இந்தியாவின் இந்த “சரியான நேரத்து உதவிக்கு நன்றி” என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

வறுமை 7 சதவிகிதம் அதிகரிப்பு : பாக்.கில் 2.7 கோடி ஏழைகள்

பாகிஸ்தானில் கடந்த ஆறு ஆண்டுகளில் வறுமை 7 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக 2.7 கோடி மக்கள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என அந்நாட்டின் தேசியப் பொருளாதார ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. இதன் மூலம், அந்நாட்டின் ஒட்டுமொத்த ஏழை மக்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்துள்ளது. அந்நாட்டின் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னால் ‘பாகிஸ்தான் பொருளாதார ஆய்வு 2025-26’ என்ற ஆவணம் வெளியிடப்பட்டது. அதில் 2018-19 ஆம் ஆண்டில் 21.9 சதவீதமாக இருந்த வறுமை விகிதம், 2024-25 ஆம் ஆண்டில் 28.9 சதவீதமாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

ஜி7 மாநாட்டில் மோடி - மக்ரோன் சந்திப்பு

ஜி 7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்தியாவுடன் கடல்சார் பாதுகாப்புக் கூட்டணியை ஏற்படுத்த பிரான்ஸ் முன்மொழிந்துள்ளது. இது ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட பன்னாட்டு முயற்சி எனவும் அதில் இந்தியா பங்கேற்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இது ராணுவக் கூட்டணியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மனித கண்ணியத்துக்கு முதலிடம் : போப் லியோ வலியுறுத்தல்

போர், வறுமை உள்ளிட்டவற்றால் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் மக்கள் குடியேறுவது தொடர்பான பிரச்சனையில் எடுக்கப்படும் சமூக மற்றும் அரசியல் முடிவுகளில் மனித கண்ணியத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என போப் வலியுறுத்தியுள்ளார். ஸ்பெயினுக்கான தனது அரசுமுறைப் பயணத்தை போப் லியோ நிறைவு செய்ய உள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பாவிற்கு புலம் பெயர்ந்து வரும் மக்கள் முதலில் கேனரி தீவுகளுக்கே வருவார்கள். அத்தீவுக்கு செல்லவுள்ள நிலையில் போப் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட தாக்குதல் ரத்து : டிரம்ப் தகவல்

வாஷிங்டன், ஜூன் 12- ஈரான் மீது மீண்டும் நடத்த திட்டமிடப் பட்டிருந்த வான்வழித் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகளை நான் ரத்து செய்துள்ளேன் என டிரம்ப் கூறியுள்ளார். மேலும் ஈரான் உடனான போரை முடிவு க்குக் கொண்டு வருவதற்காக வரும் நாட்க ளில் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் “ஈரான் தலைமையிடம் கொண்டு செல்லப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது” என்று கூறிய டிரம்ப், “ஈரான் மீது மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டிருந்த வான்வழித் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகளை நான் ரத்து செய்துள்ளேன்” எனவும் கூறியுள்ளார். மேலும் வரும் வாரம் ஒப்பந்தம் ஐரோப்பாவில் கையெழுத்தா கலாம். அதில் துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் பங்கேற்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஒப்பந்தம் தொடர்பான ஆவணங் கள் “இறுதி வடிவில்” இருப்பதாகவும், ஒப்பந்தம் “மிக விரைவாக” நிறைவடை யும் என்றும் செய்தியாளர்களிடம் தெரி வித்துள்ளார். ஈரானின் மதத் தலைவர் மொஜ்தபா கமேனி இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ‘ஆம்’ என்றே நான் புரிந்து கொள்கிறேன் என்று டிரம்ப் கூறியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் ஒப்பந் தம் கையெழுத்தாகிவிடும் என டிரம்ப் 38 முறை அறிவித்துள்ளார். அவர் அறி விக்கும் போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல பதற்றங்கள் சற்றே தணிகின்றன. மீண்டும் ஈரானை டிரம்ப் தாக்க துவங்கி விடுகிறார் என டிரம்ப்பின் அறிவிப்புக்கு கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவே ஒப்பந்தம் கையெழுத்தா வதில் உள்ள சாத்தியக் கூறுகள் குறித்து ஈரான் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ மான அறிவிப்பு வரும் வரை, இந்த விவகாரத்தில் டிரம்ப் கூறும் எந்தவொரு செய்தியும் அவரது முந்தைய அறிவிப்புக ளைப் போல தான் இருக்கும் என ‘தஸ்னிம்’ (Tasnim) செய்தி நிறுவனம் விமர்சித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகேயி (Esmaeil Baghaei) வியாழக் கிழமை பேசியபோது, அமெரிக்கா உடனான ஒப்பந்தம் குறித்து ஈரான் இதுவரை எந்தவொரு இறுதி முடிவுக்கும் வரவில்லை. ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் தொடர்பாகக் கூறப்படும் அனைத்தும் வெறும் யூகங்களே என்றும் தெரிவித்தார். அதேபோல அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து இஸ்ரேலுக்கு எந்தவொரு அறி விப்பும் வரவில்லை என்று அந்நாட்டின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பங்குச் சந்தை எழுச்சி

ஈரான் மீது திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களைத் தான் ரத்து செய்துவிட்டதாகவும், அமைதி ஒப் பந்தம் விரைவில் எட்டப்படவுள்ளதா கவும் டிரம்ப் அறிவித்ததைத் தொ டர்ந்து உலக பங்குச்சந்தைகள் பெரும் எழுச்சியைக் கண்டுள்ளன. டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பும் போரும் முதலாளிகளின் லாபத்தை பெருக்கும் நிகழ்ச்சியாக மட்டுமே உள்ளது என விமர்சனங்கள் எழுந் துள்ளன.