தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

24 Jun 2026, 12:01 am
தீக்கதிர்  உலக செய்திகள்

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த ராணுவத்தை களமிறக்கிய இலங்கை

இலங்கையில் டெங்கு பரவல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. தினமும் 1,000-க்கும் அதிகமானோர் காய்ச்சலால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் டெங்கு காய்ச்ச லைக் கட்டுப்படுத்த இலங்கை அரசு ராணுவத்தை களமிறக்கி வருகிறது. கொசுக்கள் உற்பத்தி ஆகும் இடங்க ளைக் கண்டறிந்து அவற்றை அழிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பிரிவில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் இணைவார்கள் என்று அந்நாட்டு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேகமாக செயல்பட வேண்டும்

புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் இன்னும் மிக வேகமாக செயல்பட வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளார். புதைபடிவ எரிபொருட்க ளானது காலநிலை மாற்றம், எரிசக்தி ஆகிய இரட்டை நெருக்கடிகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன. மேலோட்டமாகப் பார்க்கும்போது, இந்த நெருக்கடிகள் தனித்தனியாகத் தோன்றலாம். ஆனால், அவை இரண்டுமே புதைபடிவ எரிபொருட்கள் என்ற ஒன்றால் தான் உருவாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதக்கும்பல் தாக்குதல் : நைஜீரியாவில் 20 பேர் பலி

நைஜீரியாவின் மத்திய பிளாட்டோ மாகாணத்தில் ஒரு சமூகக் குடியிருப்பின் மீது அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் 20 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியது மட்டுமின்றி அரிவாள் போன்ற கூரிய ஆயுதங்களாலும் மக்களைத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இம்மாகாணத்தில் வளக்கொள்ளை தொடர்பாக பல்வேறு குழுக்களுக்கிடையே நிலவும் மோதல்கள் காரணமாக, சமீபத்திய ஆண்டுகளில் இத்தகைய வன்முறைகள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ராணுவ நடவடிக்கை தொடரும் : இஸ்ரேல் அறிவிப்பு

அமெரிக்கா-ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், தெற்கு லெபனானில் தாக்கு தல்கள் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. அப்பகுதியில் அச்சுறுத்தல்கள் நிலவுவதாகவும், அதனை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று இஸ்ரேல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பின் உள்கட்டமைப்புகளை அழிப்பதற்கும், இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை பராமரிப்பதற்கும் அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என கூறப் படுகிறது.

சூடானின் உள்நாட்டுப்போர் : ஐ.நா பாதுகாப்பு அவை கவலை

சூடானின் எல் ஒபெய்ட் (El Obeid) நகரைச் சுற்றி அந்நாட்டின் துணை ராணுவம் தனது படைகளை குவித்து வருகிறது. இது அந்நகரத்தின் மீது அவர்கள் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளாக இருக்கலாம் என ஐ.நா பாதுகாப்பு அவை அச்சம் தெரிவித்துள்ளது. அந்நாடு முழுவதும் பொதுமக்களை அப்படி கொன்று குவித்து வரும் நிலையில் எல் ஒபெய்ட் நகரத்திலும் இதுபோன்ற படுகொலைகள் நடக்கலாம் என பாதுகாப்பு அவை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்நகரின் மீதான தாக்குதலை துணை ராணுவம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் ‘ரகசிய’ ராணுவ பட்ஜெட் 190 லட்சம் கோடி?

வாஷிங்டன்,ஜூன் 23- அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வரும் 2027 ஆம் நிதி யாண்டிற்காக 125 லட்சம் கோடி ரூபாய் (1.5 டிரில்லியன் டாலரை) ராணுவ பட்ஜெட்டாக முன் மொழிந்துள்ளார். இது முந்தைய ஆண்டை விட 44 சதவீதம் அதிகம். அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட் தற்போதுதான் 1 டிரில்லி யன் டாலரைத் கடந்ததா? என்று கேட்டால். இல்லை முன்னரே அது ரகசியமாக நடந்துவிட்டது என ஒரு அதிரடி ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. போகோ என்ற புகழ்பெற்ற அமெரிக்க அமைப்பு வெளி யிட்டுள்ள புதிய அறிக்கையானது , ஊடகங்களில் வெளியாகும் எண்கள் கண்கட்டி வித்தை என்றும், அமெரிக்காவின் உண்மை யான ராணுவச் செலவு பல ஆண்டுகளாகவே 1 டிரில்லியன் டாலரைத் தாண்டி, விண்முட்ட உயர்ந்து நிற்பதாகவும் அம்பலப்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் அதிகாரப்பூர்வ பாதுகாப்புத் துறை பட்ஜெட் ஒரு பக்கம் உள்ள நிலையில், மேலும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் ராணுவத்திற்காக ரகசியமாகச் செலவழிக்கப்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவிடம் இருக்கும் அணு ஆயுதங்களை நவீ னப்படுத்த செலவிடப்பட்ட 33.5 பில்லியன் டாலர், ராணுவ பட்ஜெட்டில் வராமல் ‘எரிசக்தித் துறை’ கணக்கில் ஒதுக்கி மறைக்கப்படுகிறது. பிற நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் ராணுவ நிதியுதவிகள், ஆயுதக் கடன்கள் ஆகியவை உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை பட்ஜெட்டு களுக்குள் ரகசியமாக வைக்கப்படுகின்றன. ‘

கிரெடிட் கார்டு’ போர்கள்

2001 செப்டம்பர் 11 இரட்டைக்கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா உலகெங்கும் நடத்திய போர்கள் அனைத்தும் மக்க ளின் வரிப் பணத்தில் மட்டுமே நடத்தப்படவில்லை. சர்வதேசச் சந்தையில் கடன் வாங்கி நடத்தப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆராய்ச்சியாளர்கள் இதனை “கிரெடிட் கார்டு போர்கள்” என்று குறிப்பிடுகிறார்கள். இந்த பிரம்மாண்ட கடனுக்காக அமெரிக்க அரசு கட்டும் வட்டித் தொகையை இந்த ராணுவ பட்ஜெட் கணக்கில் சேர்த்தால், அமெரிக்காவின் உண்மையான ராணுவச் செலவு இந்திய மதிப்பில் சுமார் 190 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் செல்லும் (2.3 டிரில்லியன் டாலர்) என்று இந்த அறிக்கை அதிர்ச்சியைக் கிளப்புகிறது. இந்த உண்மைகளைக் கண்டறிய போகோ அமைப்பு ஐந்து வெவ்வேறு உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி முறைகளைப் பயன்படுத்தியுள்ளது. இதில் ஹார்டுங்/ஸ்மித்பெர்கர் மற்றும் வீலர் போன்ற ஆராய்ச்சி முறைகள் அமெரிக்காவின் அடிப்படை ராணுவச் செலவே 1.7 டிரில்லி யன் டாலருக்கும் அதிகம் என்று சுட்டிக்காட்டுகின்றன. உலகப் புகழ்பெற்ற ‘ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்’ (SIPRI) கூட அமெரிக்காவின் இந்த மறைமுகச் செலவுகளைக் கணக்கிடத் தவறிவிடுகிறது. “மக்க ளின் வரிப்பணம் எங்கே போகிறது என்ற முழு விவரமும் தெரியா மல், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு போன்ற மக்கள் நலத் திட்டங்களையும், ராணுவச் செலவுகளையும் பொதுமக்களால் எப்படி ஒப்பிட்டுப் பார்க்க முடியும்? இது ஜனநாயகப் பொறுப்புக் கூறலையே கேள்விக்குறியாக்குகிறது” என்று அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. மேலும் அமெரிக்க நாடாளுமன்றம் அனைத்துத் துறைகளி லும் சிதறிக் கிடக்கும் ராணுவச் செலவுகளை ஒன்றிணைத்து, நேர்மையான ‘மொத்த ராணுவ பட்ஜெட்டாக’ அறிவிக்க வேண் டும் என்றும், பிற துறைகளில் ராணுவ நிதியை மறைப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.