தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

6 Jul 2026, 9:28 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

100 மில்லியன் டாலர் அவசர கால மீட்பு நிதி

ஈரான் உடனான போரில் சேதமடைந்த உள் கட்டமைப்புகளைச் சீரமைக்கும் பணியை குவைத் துவங்கியுள்ளது. இதற்காக குவைத் அரபு பொருளாதார மேம்பாட்டு நிதியத்தின் கீழ் இந்த ‘குவைத் அவசரக்கால மீட்பு நிதியம்’ தொடங்கப்பட்டுள்ளது. அந்த நிதியத்திற்கு 100 மில்லியன் டாலர் பணமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது மேற்கு ஆசிய நாடுகளில் அமெரிக்க ராணுவத்தலங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அதில் அந்நாடுகள் பாதிப்புகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலையில் கலவரம்: இலங்கையில் 25 பேர் பலி

இலங்கையின் மேற்கு நகரமான நீர்கொ ழும்பில் உள்ள சிறைச்சாலையில் கலவரம் வெடித்தது. இதில் 25 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 100 பேர் காயமடைந்துள்ளனர். காயம டைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் சிறைக் கைதிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரவு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் பட்ட போதிலும், திங்கட்கிழமை காலை மீண்டும் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

எபோலா பாதிப்பு: 500 ஐ கடந்த உயிரிழப்பு

காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தொ டர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 1,600 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொற்றினால் இதுவரை 500 க்கும் மேற் பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொற்று தொடர்ந்து சமூகப் பரவலாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள் ளது. உயிரிழந்தவர்களின் உடல்களைப் பரிசோ தனை செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது. சிகிச்சை மையங்களில் போதிய இடவசதி இன்மை. நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணியில் உள்ள சிக்கல்கள். ஆய்வகப் பரிசோ தனை முடிவுகளில் ஏற்படும் தாமதம் காரணமாக தொற்று கட்டுப்படுத்துவதில் சவால் நீடித்து வருகிறது.

102 கிலோ கஞ்சா: நேபாளத்தில் இந்தியர் கைது

நேபாளத்தின் பார்சா மாவட்டத்தில் 32 வயதான இந்தியர் ஒருவர் தனது காரில் 102 கிலோ கஞ்சா கடத்தி சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் இந்தியா வின் குடியுரிமை பெற்ற குட்டு வர்மா என்று அடை யாளம் காணப்பட்டுள்ளார். அவர் இந்தியா நோக்கிச் சென்ற போது வழிமறித்து இந்த கைது நட வடிக்கை நடந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. அண்டை நாடுகளின் எல்லை வழியாக இந்தியாவிற்குள் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வரும் பிரச்சனை தீவிரமடைவது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா கடும் தாக்குதல்

திங்கள்கிழமை அதிகாலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் அதன் புறநகர்ப் பகுதி கள் மீது, ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் ரஷ்ய ராணுவம் கடும் தாக்குதலை நடத்தி யுள்ளது. உக்ரைனின் ஆயுதக் கிடங்கு, ஆயுத உற்பத்தித் தொழிற்சாலை, வான் பாதுகாப்பு அமைப்பு தாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படு கிறது. இத்தாக்குதலில் 9 பேர் வரை கொல்லப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பொது சொத்துக்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்திய நிலையில் இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியதாக கூறப்படுகிறது.

துருக்கியில் துவங்குகிறது நேட்டோ உச்சி மாநாடு : மக்களின் வரிப்பணம் வீணடிப்பு, அடிப்படை உரிமைகள் பறிப்பு

அங்காரா,ஜூலை 6- துருக்கியின் தலைநகர் அங்காராவில் ஜூலை 7 - 8 நேட்டோ உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதன் காரணமாக அந்நகரத்தை பாதுகாப்பு மண்ட லத்திற்குள் கொண்டு வந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது அந்நாட்டு அரசு. இதற்கு எதிராக துருக்கி கம்யூனிஸ்ட் கட்சியும் தொழிற்சங்கங்களும் போராடி வருகின்றன. துருக்கி ஜனாதிபதி அலுவலகம் ஜூன் 28 முதல் ஜூலை 10 வரை, இரண்டு வாரங்களுக்குப் பொது அரசியல் செயல்பாடுகள் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் நடவடிக்கைகளை தடை செய்து மக்களின் நியாயமான போராட்டங்களை முடக்கி உள்ளது. ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் மட்டு மின்றி ஜனநாயக நடவடிக்கையான செய்தியாளர் சந்திப்புகள், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம், சுவரொட்டிகள் ஒட்டுதல், கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் கூட தடை செய்யப்பட்டுள்ளன. கைது நடவடிக்கைகள் இந்தத் தடைகள் பின்னணியில் இடதுசாரி அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த 225 பேரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு, போர் எதிர்ப்பு, நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றம் குறித்தும் மார்க்சிய கருத்துகளைப் பரப்பும் சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் செய்தி நிறுவனங்களை துருக்கி அரசு முடக்கிவிட்டது. மாநாட்டிற்காக சுமார் 2000 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவிடப்படுகிறது. மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களின் போக்கு வரத்துக்காகச் சாலைகளை மேம்படுத்துவது, விமான நிலையத்தைச் சீரமைப்பது, தோட்டங்கள் அமைப்பது போன்ற பணிகளுக்காக இந்தத் தொகை செலவிடப்படுகிறது. மேலும் மக்கள் பணத்தின் மூலமாக தலை நகரில் ஏழை மக்கள் வாழும் குடியிருப்பு பகுதி களைத் தடுப்புகளைக் கொண்டு மறைக்கும் செயலையும் அந்நாட்டு அரசு மேற்கொண்டுள் ளது. இத்தனை ஒடுக்கு முறைகளுக்கு மத்தியிலும், இஸ்தான்புல், அங்காரா மற்றும் இஸ்மிர் ஆகிய நகரங்களில் நேட்டோவிற்கு எதிரான போராட்டங் கள் நடைபெற்று வருகின்றன. இஸ்தான்புல்லில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேட்டோ மாநாட்டின் பாதுகாப்பு என்பது, போரு க்கு எதிரானவர்களின் குரலை ஒடுக்குவதாக மட்டுமே உள்ளது. சாதாரண மக்களின் வாழ்வாதா ரத்தைப் பாதுகாப்பதை விட, ஏகாதிபத்திய ராணுவக் கூட்டணியின் தேவைகளுக்கே அரசு முன்னுரிமை தருகிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.