தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

10 Aug 2026, 8:27 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

சொந்த திறன்களை நம்பும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள்

பாகிஸ்தான், துருக்கி, சவூதி அரேபியாஇடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்ஈரானுக்கு எதிரானது என கவலைப்படுவதற்கு எந்தக்காரணமும் இல்லை என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி தெரிவித்துள்ளார். பாதுகாப்பிற்காக பிற நாடுகளைச் சார்ந்து இருப்பதை விட பிராந்திய நாடுகள்தங்களின் சொந்தத் திறன்களை அதிகம் நம்பத் தொடங்கியுள்ள பாதுகாப்பு அணுகுமுறை மாற்றத்தை தான்அந்நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் காட்டுகிறது. இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் சீர்குலைவுநடவடிக்கைகளைத் தடுக்கவும் இது உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொழிற்சாலைகள், பொதுமக்கள் மீது உக்ரைன் குண்டு வீச்சு

ரஷ்யாவின் நிஷ்னேகாம்ஸ்க் நகரில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 13 பேர் படுகொலையாகியுள்ளனர். 39 பேர் படுகாயமடைந்தனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் தாக்குதலில் சமீபத்திய மாதங்களில் ரஷ்யாவில் பொதுமக்களுக்கு ஏற்பட்டமிகப்பெரியஉயிரிழப்புகளில் இது ஒன்றாகும். ரஷ்யாவில் எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக தாதர்ஸ்தான் பிராந்தியத்தில் டாட்னெஃப்ட் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையும் உக்ரைன் ராணுவம் தாக்கியுள்ளது.

புதிய தரவு மையக் கொள்கை: தாய்லாந்து அறிவிப்பு

தாய்லாந்து அரசு தரவு மையங்கள் தொடர்பாகப் புதிய கட்டுப்பாடுகளையும் திட்டங்களையும் வகுத்துள்ளது. தரவுமையங்களால் நாட்டின் இயற்கை வளங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, 4 முக்கியக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இனி புதியதிட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தாய்லாந்து முதலீட்டு வாரியம் அறிவித்துள்ளது. அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தும் இந்த மையங்களால் மக்களுக்கு மின்தடை அல்லது மின்கட்டண உயர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுதல். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமைஅளித்தல். சத்தம், வெப்பம், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும்தீத்தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்தல் ஆகிய கொள்கைகளை அறிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் கட்டண வசூலா?

ஹோர்முஸ் நீரிணையில் சேவைக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று ஈரான் கருத்து தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் நீர்வழியில் ஒரு புதிய பாதையை நிர்ணயிப்பது குறித்துஈரானுக்கும் ஓமனுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் கட்டணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதா என கேள்விகள்எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் கடல் வழிப்பாதைக்கான சேவைகள் வழங்கும் போது அதற்கான கட்டணங்களை வசூலிக்க வேண்டும் எனினும் அது தொடர்பாகபேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெற்றது என ஈரான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ஏதென்ஸ் அருகே மீண்டும் காட்டுத்தீ

கிரேக்கத் தலைநகர் ஏதென்ஸ் அருகே மீண்டும் புதிய காட்டுத்தீ மூண்டுள்ளது. மணிக்கு 70 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பலத்தகாற்று வீசி வருவதால் தீ மேலும் தீவிரமடைந்துள்ளதாகத் தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இது தலைநகர் அருகில் ஏற்படும் இரண்டாவது காட்டுத்தீஆகும். முன்னதாக 10 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட காட்டுத்தீயில் 11,000 ஹெக்டேருக்கும் அதிகமான பைன்காடுகளும் விவசாய நிலங்களும் அழிந்தன. மத்தியதரைக் கடல் நாடுகளில் அதிக வெப்பத்தின் காரணமாககாட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சனை கிரேக்கத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

டிரம்ப்பின் ஆலோசனையை நிராகரித்த நேதன்யாகு

காசா,ஆக.10-அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த மாதம் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்நேதன்யாகு ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) நிராகரித்துள்ளார்.ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் எனவும் அப்படி செய்யும்வரை ராணுவத்தை திரும்பப் பெற முடியாது எனவும் பேசியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனாலும் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி படுகொலைகளை அரங்கேற்றி வருகின்றது. இந்நிலையில் டிரம்ப் முன்மொழிந்த அமைதித்திட்டத்தையும் ஏற்க மறுத்துள்ளார்.அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய நேதன்யாகு, டிரம்ப் முன்வைத்த 15 அம்ச ஆவணத்தை நிராகரிப்பதாக கூறியுள்ளார்.

ஹமாஸ் ஆயுதங்களை முழுமையாக ஒப்படைக்கும் வரை இஸ்ரேல் பாதுகாப்புப் படை பின்வாங்காது. கனரக ஆயுதங்கள், இலகுரக ஆயுதங்கள் என அனைத்து ஆயுதங்களையும் ஹமாஸ் கைவிட வேண்டும். தற்போது, இந்த விவகாரம் குறித்து நாங்கள் அமெரிக்கப்பிரதிநிதிகளுடன் பேசி வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

காசா மீதான போரை முடிவுக்குக் கொண்டு வரவும், பிறகு காசாவை நிர்வகிப்பதற்காகவும் ‘அமைதி வாரியம்’ (Board of Peace) என டிரம்ப்அமைத்த அமைப்பு ஜூலை மாதம் இந்த மைதி ஒப்பந்தத்தைப் பரிந்துரைத்தது. இந்த ஒப்பந்தத்திற்குத் தான் ஆதரவளிக்கப் போவதில்லை என்பதை இஸ்ரேல் கடந்தசில மாதங்களாகவே மறைமுகமாக கூறிவந்தது. அதே நேரத்தில்பாலஸ்தீனப் பகுதியின் மீது தாக்குதலையும் குண்டுவீச்சையும் தீவிரப்படுத்தியிருந்தது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.