தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

27 Oct 2026, 9:42 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

போராட்டம் தொடர்கிறது : பிரான்ஸ் மாணவர்கள் அறிவிப்பு

பிரான்ஸ் அரசுக்கு எதிராக மாணவர்கள் பெரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்களை தொடர்ந்து கல்வித்துறையை மேம்படுத்துவது தொடர்பாக அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டது. தற்போது போராட்டம் தொடர்பாக அரசு அதிகாரிகள் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் பேச்சுவார்த்தைக்குப்பிறகு உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் பிரதிநிதிகளில் ஒருவரான லூயிஸ் லெட்டூப்ளான் “எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படவில்லை. எவ்வளவு காலம் ஆனாலும் நாங்கள் போராட்டத்தைத் தொடர்வோம்” என தெரிவித்துள்ளார்.

காம்பியா நாட்டில் மாணவர்கள் போராட்டம்

மோசமடைந்து வரும் கல்விச்சூழல், உணவு மற்றும் இணைய வசதி தொடர்பான பிரச்சனைகளைக் கண்டித்து காம்பியா நாட்டில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது ஐரோப்பா முழுவதும் நடைபெறும் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியான மின்தடை காரணமாக ஏற்கனவே அந்நாட்டில் சில போராட்டங்கள் வெடித்தன. இதனைத்தொடர்ந்து தற்போது காம்பியா பல்கலைக்கழகத்தில் புதிய போராட்டங்கள் வெடித்துள்ளன. டிசம்பர் 5 தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்நாட்டில் தொடர் போராட்டங்கள் எழுந்து வருகின்றது.

சோமாலியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 300 வீரர்கள் படுகொலை?

சோமாலியாவில் அரசுப் படைகளுக்கும் அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 321 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அரசுத் தரப்பில் இது உறுதிசெய்யப்படவில்லை. 75 பயங்கரவாதிகளைக் கொன்றதாகவும், 56 பேரைக் காயப்படுத்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. துருக்கியால் பயிற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பினர் சோமாலிய அரசுக்கு எதிராக 20 ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வருகிறது. மத்திய சோமாலியாவின் பெரும்பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

ஈரான் மீது தாக்குதல் : அமெரிக்கா ரகசியத் திட்டம்

டிரம்ப்பிடமிருந்து உத்தரவு கிடைத்த “96 மணி நேரத்திற்குள்” ஈரான் மீது புதிய மற்றும் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க அமெரிக்க ராணுவம் தயாராக இருப்பதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதல்களை நடத்துவதற்காக “போதுமான” அமெரிக்கப் படைகள் மேற்காசியப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. டிரம்பின் உத்தரவு 2026 இறுதிக்குள் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும். குறிப்பாக இடைத்தேர்தலுக்குப் பிறகு வர அதிக வாய்ப்புள்ளது. சவூதி அரேபியாவுக்கும் ஹவுதி அமைப்புக்கும் இடையில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்காவின் இந்த நகர்வு மேற்காசிய நாடுகளில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

வாக்காளர் முறைகேடு தகவல்களுக்கு 10 லட்சம் டாலர் பரிசு

கடந்த காலத் தேர்தல்கள் அல்லது வரவிருக்கும் நவம்பர் 3 இடைத்தேர்தல்களில் வாக்காளர் முறைகேடுகள் குறித்துத் தகவல் தெரிவிப்பவர்களுக்கு, அந்தத் தகவல் கைது மற்றும் குற்றத் தீர்ப்புக்கு வழிவகுத்தால் 10 லட்சம் டாலர் பரிசளிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். எனினும் அந்தப் பணம் எதிலிருந்து வழங்கப்படும், அதை யார் வழங்குவது அல்லது சந்தேகத்திற்கிடமான முறைகேட்டை எப்படி யாரிடம் புகாரளிப்பது என்பது குறித்து டிரம்ப் தெரிவிக்கவில்லை. இது குறித்து விளக்கம் கேட்ட ஊடகங்களின் வேண்டுகோளுக்கும் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தேர்தல் : நவ.4 முடிவுகள் அறிவிப்பு

டெல்அவிவ்,அக்.27-இஸ்ரேலில் அக்.27 செவ்வாயன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்திய நேரப்படி, காலை 10:30 மணிக்குத் தொடங்கிய இந்த வாக்குப்பதிவு, இரவு 10:00 மணி வரை நடைபெறும். தேர்தல் இறுதி முடிவுகள்அதிகாரப்பூர்வமாக நவம்பர் 4 அன்று அறிவிக்கப்பட உள்ளது. மொத்தம் உள்ள 120 நாடாளுமன்ற இடங்களுக்கு 36 கட்சிகள் போட்டியிடுகின்றன. 73 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இத்தேர்தலில், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் ‘லிகுட்’ கட்சித் தலைமையிலான வலதுசாரிகூட்டணிக்கும், முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்கோட்டினின் ‘யாஷர்’ கட்சித்தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1996-க்குப் பிறகு இத்தேர்தலில் மிகஅதிகமான வாக்குகள் பதிவாகி வருவதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சி அமைக்க 61இடங்கள் பெரும்பான்மை தேவை. எனினும் இத்தேர்தலில் எந்தவொரு கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைப்பதில் இழுபறி நீடிக்கலாம் எனத் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் தேர்தல் வரலாற்றில் இதுவரை எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைத்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அரபுக் கட்சிகள் அளிக்கும் ஆதரவைப் பொறுத்தே யார் ஆட்சியில் அமர்வார்கள் என தீர்மானிக்கப்படும். அரபுக்கட்சிகள் நேதன்யாகுவுக்கு ஆதரவு தர வாய்ப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்புடன் ஒத்துழைப்பு : சாகேல் நாடுகளின் கூட்டமைப்பு புது முயற்சி

டாக்கார்,அக்.27-சாகேல் நாடுகள் புதிய முயற்சியாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு (ECOWAS) உடன் ஒத்துழைப்பதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளன.இந்த இரு கூட்டமைப்புகளும் தங்கள் முதல் அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தையை செனகல் நாட்டில்அக்டோபர் 17 அன்று நடத்தியுள்ள தகவலும் வெளியாகியுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் கூட்டு ஒத்துழைப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தை (Cooperation Framework Agreement) உருவாக்குவதற்காககூட்டு கருப்பொருள் பணிக்குழுக்களை அமைக்க ஒப்புக்கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு மற்றும் உள்ளடக்கிய சாகேல்நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், மேற்கு ஆப்பிரிக்க மக்களின் வரலாற்று, சமூக-பண்பாட்டு மற்றும் பொருளாதார உறவுகளை நினைவுகூர்ந்த இரு தரப்பினரும், எதிர்கால உறவுகள் “அண்டை நாடுகளுடன் நல்ல உறவுத்தன்மையை பேணுவது, அவர்களின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பது, மாண்பு மற்றும் மேற்கு ஆப்பிரிக்க மக்களின் நல்வாழ்வு” ஆகியவற்றால் வழிநடத்தப்பட வேண்டும் என இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.மாலி, நைஜர், புர்கினா பாசோ ஆகிய நாடுகளை ராணுவ ஆட்சி அமைந்த பிறகு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஆதரவாக இருப்பதால் அக்கூட்டமைப்பில் இருந்து வெளியேறின. இந்நிலையில் மீண்டும் அவ்வமைப்புடன் ஒத்துழைப்பை மேம்

படுத்த புதிய பேச்சுவார்த்தை துவங்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்முக்கியமான அரசியல் போக்காக பார்க்கப்படுகின்றது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.