தீக்கதிர் உலக செய்திகள்
4 Jul 2026, 8:49 pm

காங்கோவிற்கு உதவும் சீன மருத்துவர்கள்

எபோலா வைரஸை கட்டுப்படுத்த சீனாவின் இரண்டாவது மருத்துவ நிபுணர் குழு காங்கோ சென்றடைந் துள்ளது. சர்வதேச ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில் அந்த குழுவை அனுப்பி வைத்துள்ளது சீன அரசு. சீன நிபுணர் குழு காங்கோ சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து பணிகளை உடனடியாக தொடங்கும். நோய்த்தொற்றுப் பரவல் குறித்த ஆய்வு, ஆய்வகப் பரிசோதனை, நோயாளிகளுக்கான சிகிச்சை, தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள், ஊழியர்களுக்கான பயிற்சி ஆகியவற்றில் தொழில்நுட்ப ரீதியிலான ஆலோசனைகளையும் ஆதரவையும் சீனா வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரமடையும் காட்டுத் தீ : உதவி கேட்கும் போர்ச்சுக்கல்

கடும் வெப்ப அலை காரணமாக போர்ச்சுக்கலில் ஏற்பட்ட காட்டுத்தீ தீவிரமடைந்துள்ளது. இதனை எதிர் கொள்ளக் கூடுதல் தீயணைப்பு விமானங்களைத் தயாராக வைத்திருக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம், ஸ்பெயின் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளிடம் போர்ச்சுக்கல் கோரிக்கை விடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தால் வரும் நாட்களில் போர்ச்சுக்கல் “முன்னெப்போதும் இல்லாத ஒரு அசாதாரண சூழ்நிலையை” சந்திக்க உள்ளது. அந்நாட்டின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவதற்கான அபாயம் மிக அதிகமாக இருகிறது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சோமாலியாவிற்கு உதவிகளை முடக்கும் அமெரிக்கா

சோமாலியாவில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ‘அல்-ஷபாப்’ என்ற பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாட்டின் பல பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்புஎதிராக நிலை நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்திற்கான நிதியுதவியை நிறுத்தப்போவதாக அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. ஐ. நா பாதுகாப்பு அவை உதவிகளையும் முடக்கப் போவதாக எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் நிதி உதவி இல்லாமல் ஐ.நா வழங்கும் உணவு, எரிபொருள் மற்றும் ஆயுதத் தளவாடங்களை இந்த ராணுவத்தால் பெற முடியாது. இது உள்நாட்டுப்போருக்கு வழிவகுக்கலாம்.

உக்ரைனின் முக்கிய நகரத்தை ரஷ்யா கைப்பற்றியது

உக்ரைனின் முக்கியமான நகரமான கொஸ்தியந்தினிவ்காவை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள முக்கிய அரண்களான கிராமடோர்ஸ்க் மற்றும் ஸ்லோவியன்ஸ்க் ஆகிய நகரங்களைக் கைப்பற்றுவது ரஷ்யாவின் முக்கிய இலக்காகும். அந்த நகரங்களுக்கு போகும் பாதையில் இருந்த கடைசிப் பாதுகாப்பு அரண்க ளில் ஒன்றாக இந்த கொஸ்தியந்தினிவ்கா இருந்தது. அந்த நகரம் முழுமையாகக் கைப்பற்றப்பட்டு எங்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்று ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் தீவிரமடையும் : வானிலை அமைப்பு எச்சரிக்கை

எல் நினோ வரும் மாதங்களில் அதிவேகமாக வலுவடையும் என்று உலக வானிலை அமைப்பு எச்ச ரித்துள்ளது. இதனால் உலக நாடுகளில் கடுமையான வெப்ப அலைகள், வறட்சி, பெருமழை போன்ற தீவிர வானிலை பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. 2026 ஜூலை முதல் செப்டம்பர் வரையி லான காலகட்டத்தில் ‘எல் நினோ’ மிக வேகமாக ஒரு சக்திவாய்ந்த நிகழ்வாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. உலகின் முன்னணி காலநிலை ஆராய்ச்சி மையங்களின் கணிப்புகள் அனைத்தும், மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் கடல் நீரின் வெப்பநிலை வழக்கத்தை விட மிக அதிகமாக உயரும் என்பதையே காட்டுகின்றன.

காலநிலை மாற்றம் பற்றி பொய் பிரச்சாரம் செய்யும் டிரம்ப்

வாஷிங்டன்,ஜூலை 4- உலகிற்கு எந்த ஒரு காலநிலை பேரழி வும் வரப்போவதில்லை. பூமி அழியும் என்று கூறுவது வெறும் தேவையற்ற பயமுறுத்தல் மட்டுமே என ஐ.நா அவையே ஒப்புக்கொண்டுள்ளது என்று பொய்யான தகவலை டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் பதி விட்டுள்ளார். அதாவது ஐ.நா அவை முன்பு கணித்திருந்த காலநிலை பற்றிய ஆர்சி பி9.5 என்ற கணிப்பு முற்றிலும் தவ றானது என்று ஐ.நா காலநிலை குழுவே தற்பொழுது ஒப்புக்கொண்டுள்ளது. எனவே எதிர்க்கட்சியினர் செய்யும் காலநிலை பற்றிய எச்சரிக்கை வெறும் ஏமாற்று வேலை என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், டிரம்ப் கூறுவது போல உலகம் பாதுகாப்பாக இல்லை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். உலகம் முழுவதும் நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் பயன்பாடு தற்போது பயன்படுத்தப்படும் வேகத்தில் அதிக ரித்தால், 2100-ஆம் ஆண்டிற்குள் பூமி யின் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து பெரும் பேரழிவு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். கணிப்புகள் இப்போது ஏன் மாறின? கடந்த 15 ஆண்டுகளில் உலகம் முழு வதும் சூரிய ஒளி, காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலின் பயன்பாடு மற்றும் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 2009 முதல் 2024-க்குள் சூரிய மின்சாரத்தின் விலை 88% வரை சரிந்துள்ளது.இதனால், வளரும் நாடு கள் நிலக்கரியை விட்டுவிட்டு மலிவான சூரிய ஆற்றலுக்கு மாறத் தொடங்கியுள்ளன. நிலக்கரி பயன்பாடு கணிசமாகக் குறையும் என்பதால், விஞ்ஞானிகள் தங்களின் கணிப்பை 5 டிகிரியிலிருந்து 3.5 டிகிரி செல்சியஸாகக் குறைத்துள்ள னர். இதையே டிரம்ப் “ஐநா தவறை ஒப்புக்கொண்டுவிட்டது” என்று திரித்துக் கூறியுள்ளார். 3.5 டிகிரி வெப்ப உயர்வும் பேரழிவு தான் விஞ்ஞானிகளின் கணிப்பு 5 டிகிரியி லிருந்து 3.5 டிகிரியாகக் குறைந்தாலும் ஆபத்து இன்னும் குறையவில்லை என்று எச்சரிக்கிறார்கள். மனிதர்கள் உமிழ்வைக் குறைத்தா லும், காடுகள் அழிப்பு, பனிப்பாறைகள் உருகுவது போன்ற காரணங்களால் பூமி ானாகவே வெப்பத்தை உறிஞ்சத் தொ டங்கும். இதனால் வெப்பநிலை மீண்டும் 4 டிகிரிக்கு மேல் உயர வாய்ப்புள்ளது. பூமியின் வெப்பநிலை 3 டிகிரி உயர்ந் தால் கூட, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் வாழ முடியாத அள வுக்கு ஆண்டின் பாதி நாட்கள் கொடிய வெப்ப அலை வீசும். ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடு களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். வெப்பம் தாங்காமல் விவசாய உற்பத்தி வீழ்ச்சியடையும். உலகப் பொருளாதாரம் நெருக்கடியை சந்திக்கும். கார்பன் உமிழ்வு மற்றும் அதனை கட்டுப்படுத்துவது என்பது தனி நபர்களை சார்ந்த விஷயமல்ல அது கார்ப்பரேட்கள் மற்றும் வளர்ந்த நாடுகளின் அரசியல் முடிவுகளைப் பொ றுத்தது. ஆனால் புவி வெப்பமடைதல் என்பது இயற்கையின் இயற்பியல் (Physics) விதியைப் பொறுத்தது. எனவே, இப்போதைய முன்னேற்றத்தைக் கண்டு நாம் அச்சப்படாமலும், மாற்று திட்டங்க ளையும் யோசிக்காமல் இருந்தால், எதிர்காலச் சந்ததியினருக்கு அது பெரும் ஆபத்தாய் முடியும் என சர்வதேச காலநிலை வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.