தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

6 Jun 2026, 8:15 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

எபோலா பரவலைத் தடுக்க 4,377 கோடியில் கூட்டுத் திட்டம்

மே 15 அன்று காங்கோவில் மீண்டும் எபோலா பரவல் துவங்கியது. காங்கோ மட்டுமின்றி அதன் அண்டை நாடான உகாண்டாவிலும் எபோலா பரவி வருகிறது. ஆப்பிரிக்கா சிடிசி அமைப்பின் தகவல் படி, காங்கோவில் இதுவரை 542 பேருக்கு எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 82 பேர் உயிரிழந்துள்ளனர். உகாண்டாவில் 19 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இரண்டு பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இரு நாடுகளிலும் எபோலா பரவலை தடுக்க 4,377 கோடி ரூபாயில் உலக சுகாதார அமைப்பு கூட்டுத் திட்டம் ஒன்று அறிவித்துள்ளது.

இஸ்ரேல் அமைச்சர்களுக்கு அயர்லாந்து தடை

இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இதாமர் பென் க்வீர், நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோர் மீது அயர்லாந்து அரசு தடை விதித்துள்ளது. தீவிர வலதுசாரி அமைச்சர்களான இவர்கள் இருவரும் நேதன்யாகு அரசின் முக்கியத் தூணாக உள்ளனர். இவர்களின் செயல்பாடுகள் அவர்கள் மீது விதிக்கப்பட்ட தடையானது சரிதான் என நிரூபிக்கும் வகையில் தான் உள்ளது என அயர்லாந்து குறிப்பிட்டுள்ளது. கடந்த மாதம் காசா நோக்கிச் சென்ற நிவாரணக் கப்பலில் இருந்த சமூக ஆர்வலர்களை இஸ்ரேல் ராணுவம் கடத்திய நிலையில் இந்த தடை வந்துள்ளது.

அமெரிக்கா சொல்வது பொய் : கியூபா கடும் கண்டனம்

கியூபாவிற்கு எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களை அமெரிக்க அரசு தடுப்பதில்லை என்று அந்நாட்டு வெளியறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தொடர்ந்து கூறிவருவதற்கு கியூப வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் கடும் கண்டம் தெரிவித்துள்ளார். மேலும் கியூபாவிற்கு எண்ணெய் வழங்கும் நாடுகள் தடைகளுக்கு உள்ளாகும் என அமெரிக்கா விதித்த தடைக்கான சான்று ஆவணங்களையும் கியூபா வெளியிட்டுள்ளது. கியூபாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் பழிவாங்கலுக்கு உள்ளாகின்றன. இது வளரும் நாடுகளுக்கு எதிரான நெருக்கடி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகப்பெரிய சந்தையாக ஆப்பிரிக்கா உருவாகும்

2050-க்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் ஆப்பிரிக்கராக இருப்பார் என்று தான்சானிய ஜனாதிபதி சமியா சுலுஹு ஹசன் தெரிவித்துள்ளார். உலக உழைப்பாளர் சந்தைக்கு அதிக தொழிலாளர்களைப் பங்களிக்கப் போகும் ஒரே கண்டமாகவும், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் 20 நாடுகளில் ஒன்பது நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளாகவும் இருக்கும். சுதந்திர வர்த்தகப் பகுதியின் சாத்தியக்கூறுகளையும் சுட்டிக்காட்டியுள்ள அவர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் முழுமையாகச் செயல்படுத்தப்படும் போது, மக்கள் தொகை அடிப்படையில் இது உலகின் மிகப்பெரிய சந்தையாக மாறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் கூட்டாளிகள்தான் போதைப்பொருள் கடத்துகிறார்கள்

கொலம்பியா நாட்டில் அமெரிக்கா யாருக்கெல்லாம் அரசியல் ரீதியாக ஆதரவு கொடுக்கிறதோ,அவர்கள் அனைவரும் போதைப்பொருள் கடத்தல் கும்பலோடும், சட்டவிரோத ஆயுதக் குழுக்களோடும் நேரடித் தொடர்பு உடையவர்கள். அவர்கள் கொடூரமான குற்றவாளிகள். இனப்படுகொலையாளர்களாக உள்ளனர் என அந்நாட்டின் ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோ பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தீவிர பழமைவாத வேட்பாளரான அபெலார்டோ டி லா எஸ்பிரில்லாவிற்கு டிரம்ப் ஆதரவு தெரிவித்ததை அவர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

உறவை வலுப்படுத்தும் கியூபா - ரஷ்யா சர்வதேச பொருளாதார மன்றத்தில் முக்கிய ஒப்பந்தங்கள்

மாஸ்கோ,ஜூன் 6- ரஷ்யாவில் சர்வதேச பொருளா தார மன்ற கூட்டம் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் கியூபா- ரஷ்யா இடையே பொ ருளாதார உறவுகளை வலுப்படுத்தும் வகையில் புதிய ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. கியூபாவின் துணைப் பிரதமரும், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் வெளி நாட்டு முதலீட்டு அமைச்சருமான ஆஸ் கார் பெரெஸ்-ஒலிவா தலைமையிலான குழுவினர், இந்த மன்றத்தில் இருதரப்பு ஒப்பந்தங்களின் அமலாக்கம் குறித்து ஆய்வு செய்தனர். ரஷ்ய துணைப் பிரத மர் டிமிட்ரி செர்னிஷென்கோவுடன் நடை பெற்ற பேச்சுவார்த்தையின் போது, முத லீட்டுத் திட்டங்கள், வணிகப் பரிமாற்றங் கள், எரிசக்தி ஒத்துழைப்பு, போக்குவர த்து ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் இரு நாடு களும் ஏற்கெனவே செய்ய ஒப்புக் கொண்ட கூட்டுத் திட்டங்கள் (கூட்டு உத்திசார் திட்டங்கள்) தற்போது எந்த நிலையில் இருக்கின்றன? எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளன? என்பதை இரு தரப்பு அதிகாரிகளும் சேர்ந்து ஆரா ய்ந்து சரிபார்த்தனர். ரஷ்யாவுடனான உறவுகளை மேலும் அதிகப்படுத்துவதில் கியூபா ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக இருநாடுகளும் சுகாதா ரத் துறையில் இணைந்து செயல்படுவது குறித்து விவாதித்துள்ளன. அதாவது மருந்து உற்பத்தி, மருத்துவ நிபுணர்க ளுக்கான பயிற்சி, பொது சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்திய - ரஷ்ய உறவு மீது அழுத்தம் தருவது சர்வதேச உறவுகளுக்கு கேடு விளைவிக்கும் : புடின் எச்சரிக்கை

மாஸ்கோ,ஜூன் 6- இந்தியாவின் மீது யார் (எந்த நாடு) அழுத்தம் கொடுத்தாலும் அது தவறா னது. அது சர்வதேச உறவுகளுக்கும் இரு தரப்பு உறவுகளுக்கும் கேடு விளை விக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா போருக்கு இடை யே இந்தியா-ரஷ்யா இடையிலான உறவு மற்றும் கச்சா எண்ணெய் வர்த்த கம் குறித்து மேற்குலக நாடுகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. குறிப்பாக ரஷ்யாவிடம் இந்திய அரசு கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என டிரம்ப் மிரட்டல் விடுத்தார். இந்தியா மீது கூடு தல் வரிகளையும் விதித்தார். இந்தியா வும் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்தது. இந்தப் பின்னணியில் தான் புடினின் இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன. மேலும் அவர் பேசிய போது, இந்தியா தனது தேசிய நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கும். அமெரிக்கா வுடன் இந்தியா கொண்டுள்ள உறவுகள் ரஷ்யாவுடனான அதன் உத்திசார் உறவு களைப் பாதிக்காது. அமெரிக்காவுடனான பொருளா தார உறவுகளில் இந்தியா அதிக ரிப்பது ரஷ்யாவுக்கு முரண்பாடுகளை ஏற்படுத்துவதாக நான் நினைக்க வில்லை. இந்தியா அனைத்து நாடுக ளுடனும் தனது உறவை மேம்படுத்து வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பெரிய பொருளாதார நாடு தனக்குத் தேவையான நாடுகளுடன் தனது சொந்த நலன்களுக்கு ஏற்ப பொருளா தாரத்தை மேம்படுத்துவது இயற்கையா னதுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.