தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

17 Oct 2026, 10:00 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

தீக்கதிர் உலக செய்திகள்

காலநிலை மாற்றத்தால் மக்கள் இடம்பெயரும் அபாயம்

காலநிலை மாற்றங்களின் பாதிப்புகள் மக்களின் வாழ்வை அச்சுறுத்த துவங்கியுள்ளது. பனிப்

பாறைகளில் உருகுவதால் ஏற்படும் கடல் மட்ட உயர்வு, வெள்ளப்பெருக்கு, வறட்சி ஆகியவை மக்களின்

வீடுகளையும் விவசாய நிலங்களையும் அச்சுறுத்துகிறது என ஐ.நா சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் இயக்குநர் ஏமி போப் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வமைப்பின் மதிப்பீட்டின்படி, காலநிலை மாற்றம் தொடர்ந்து மோசமான சூழ்நிலைக்கு சென்றால் 2050-ஆம் ஆண்டிற்குள் தெற்காசிய நாடுகளில் சுமார் 4.05 கோடி மக்கள் கட்டாயமாக தமது வாழ்விடங்களை விட்டு இடம்பெயரும் சூழல் ஏற்படலாம் என எச்சரித்துள்ளார்.

லாபத்திற்காக குழந்தைகளுக்கு பாதிப்பை தரும் ஓபன் ஏஐ

அமெரிக்காவின் ஓபன்ஏஐ செயற்கை நுண்ணறிவு நிறுவனம், லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு

செயல்படுகிறது.இந்நிறுவனத்தின் ‘சாட்ஜிபிடி’ மாடல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறி குழந்தைகளைப் பாதிக்கிறது, ஏமாற்றுகிறது என குற்றம்சாட்டி எட்டு அமெரிக்க மாநிலங்கள் அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளன. சாட்ஜிபிடி மாடல் ஆபத்தான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதாகவும், மனப்பத்தட்டத்தை தூண்டுவதாகவும், தற்கொலை செய்துகொள்ள அல்லது மற்றவர்களைக் காயப்படுத்த/கொலை செய்ய மக்களைத் தூண்டுவதாகவும் அந்த வழக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவூதி விமான நிலையத்தில் 20 முறை தாக்குதல்

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள ‘மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின்’ மீது கடந்த அக்டோபர் 1 முதல் ஹவுதி அமைப்பால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 330-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்று சவுதி தலைமையிலான கூட்டுப் படை தெரிவித்துள்ளது. ஏமனின் ஹவுதிப் படை கடந்த இரு வார காலத்தில் மட்டும் இந்த விமான நிலையத்தை 20 முறை தாக்கியுள்ளது. 1,104 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 1,135 டிரோன்கள், 118 வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட படகுகள் மற்றும் 278 கடற்படை கண்ணிவெடிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடும் போட்டியில் பிரேசில் தேர்தல்

பிரேசில் நாட்டில் அக்டோபர் 25 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக கருத்துக்கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ‘டேட்டாஃபோலா’ (Datafolha) வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின்படி, வலதுசாரியான ஃபிளாவியோ போல்சனாரோவிற்கு வாக்களிக்க விரும்புவோரின் அளவு 2 சதவிகிம் குறைந்து, தற்போது 47 சதவிகிதமாக ஆக உள்ளது. அதே நேரத்தில் தற்போதைய இடதுசாரி ஜனாதிபதியான லூலா டா சில்வா 45 சதவிகித ஆதரவைப் பெற்றுள்ளார். கடந்த வாரம் லூலாவிற்கு ஆதரவாகப் பேரணிகள் நடைபெற்ற பின்னரே இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அடக்குமுறைக்கு ஒருபோதும் ஈரான் பணியாது- பெசெஷ்கியான்

அமெரிக்காவின் அடக்குமுறைகளுக்கும் மிரட்டல்களுக்கும் ஈரான் ஒருபோதும் பணியாது என்று ஈரான் ஜனாதிபதி அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். அர்மீனியாவில் பல்லுயிர் உச்சிமாநாட்டி பங்கேற்று பேசிய அவர் மனிதநேய நெறிமுறைகளை உடைத்து தான் ஈரான் மீது அமெரிக்கா தடைகள் விதித்துள்ளது. சமீப மாதங்களில் அமெரிக்கா நடத்தியுள்ள தாக்குதல்கள் நியாயப்படுத்த முடியாதவை மற்றும் மனிதநேயமற்றவை.ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயற்சி செய்யவில்லை. எங்கள் நாட்டிற்கு எதிராகப் பரப்பப்படும் பிரச்சாரங்கள் அனைத்தும் பொய்யானவை என்று பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் துரோகம் செய்து விட்டார்: ஜெலென்ஸ்கி குமுறல் ஜெலென்ஸ்கி ஒன்றும் நல்ல மனிதர் அல்ல- டிரம்ப்

கியீவ்/வாஷிங்டன்,அக்.16 -எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான பரஸ்பரத் தாக்குதல்களை நிறுத்தும் ஒப்பந்தத்தை உடைத்து ரஷ்யாவின்எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் டிரம்ப் தங்களுக்குத் துரோகம்இழைத்து விட்டதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து தென்கிழக்கே 300 கி.மீ தொலைவில் உள்ள ருயாசான் பிராந்தியத்தில் அமைந்துள்ள ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ஆலை தீப்பற்றி எரிந்துள்ளது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும், பிராந்திய ஆளுநர் பாவெல் மல்கோவும் கூறியுள்ளனர்.ஒப்பந்தத்திற்குப் பிறகுரஷ்யா உக்ரைன் எரிசக்தி நிலையங்கள்மீது தாக்குதல் நடத்தாமல் இருந்த நிலையில் உக்ரைன் மீறிவிட்டது எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.பிரிட்டன் பத்திரிகையாளர் பியர்ஸ் மோர்கனுக்கு அளித்த நேர்காணலில் பேசிய ஜெலென்ஸ்கி, “டிரம்ப் எங்கள்முதுகில் குத்திவிட்டார். எங்களுடைய உண்மையான கூட்டாளியான அமெரிக்கா, தவறான வரலாற்றுப் பக்கத்தில் நிற்கும் நபர்களின் வழிகாட்டுதலில் இயங்குகிறது”.

உக்ரைனை முழுமையாகப் புறக்கணித்துவிட்டு புடினுடன் இணைந்து டிரம்ப் செயல்படுகிறார். மேலும் சர்வதேச அளவில் ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ள சூழலில், ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய புடினுடன் டிரம்ப் ஒப்பந்தம் செய்துள்ளார். இது உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு மேலும் வலுசேர்க்கும் என ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்ஜெலென்ஸ்கியின் இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டையே அவர்கள் அழித்துவிட்டார்கள். பேசுவதற்கு ஜெலென்ஸ்கி ஒன்றும்நல்ல மனிதர் அல்ல. புடினை விடஜெலென்ஸ்கியைக் கையாள்வதுதான் எனக்கு மிகவும் கடினமாக உள்ளது.அமெரிக்க கொடுத்த ஏவுகணைகளை கள்ள சந்தைகளில் விற்பனை செய்துள்ளது. உக்ரைனில் உடனடியாகத் தேர்தல் நடத்தி ஜெலென்ஸ்கியை மாற்ற வேண்டும் என டிரம்ப் பகிரங்கமாக ஜெலென்ஸ்கிக்கு எதிராகப் பேசியுள்ளார்.

உக்ரைனை அமெரிக்கா கைவிட்டு வரும் நிலையில் ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து அதிக உதவிகளைப் பெறுவதற்காக பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்குச் சென்று நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான்,பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். எனினும் மார்க் ரூட்டே டிரம்ப்அறிவித்த “எரிசக்தி போர் நிறுத்தத்தை” நடைமுறைப்படுத்துமாறு ஜெலென்ஸ்கியை கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா மீது உக்ரைன் போரிடுவதற்கு அமெரிக்கா வழங்கி வந்தமுக்கிய ராணுவ மற்றும் இணையஉதவிகள் திடீரென முடக்கப்பட்டுள்ளன. ரஷ்யா மீதான உக்ரைனின் ராணுவ மற்றும் டிரோன் தாக்குதல்களுக்கு மிக முக்கியமான பங்கு வகிக்கும் எலான் மாஸ்க் நிறுவனத்தின் ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக்கோள் சேவைக்கு டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ரஷ்யா ஏவும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து வழங்கப்பட்டு வந்த சக்திவாய்ந்த உளவுத் தகவல்கள் பகிர்வது நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.