தீக்கதிர் உலக செய்திகள்
25 May 2026, 10:08 pm

பேருந்துகள் மோதல் : 17 பேர் பலி பாகிஸ்தானின் மர்தான் மாவட்டத்தில்

இயந்திரக்கோளாறு காரணமாக பேருந்து ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த மற்றொரு பேருந்து, சாலையில் நின்றுகொண்டிருந்த பேருந்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகம், போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்தாதது, அதிக நேர பணி காரணமாக ஓட்டுநர் சோர்வு உள்ளிட்ட காரணங்களால் பாகிஸ்தானில் அடிக்கடி சாலை விபத்துக்கள் நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் நிதியுதவிக்கு நேட்டோ நாடுகள்மறுப்பு

ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்வதற்காக நேட்டோ உறுப்பு நாடுகள் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.25 சதவிகிதத்தை செலவிட வேண்டும் என முன்மொழிவு செய்யப்பட்டது. இந்த முன்மொழிவை பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, கனடா ஆகிய நாடுகள் நிராகரித்துள்ளதாக ‘தி டெலிகிராஃப்’ தளம் செய்தி வெளியிட்டுள்ளது. துருக்கியில் ஜூலை மாதம் 7,8 தேதிகளில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டில், இந்த கட்டாய நிதியுதவித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறலாம் என்று நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே திட்டமிட்டிருந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் குண்டு வீச்சு : லெபனானில் 6 பேர் கொலை

லெபனானின் தெற்குப் பகுதிகள் முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த மிரட்டல் விடுவதற்கு முன்னரும் பின்னரும் மக்கள் மீது குண்டு வீசித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் மிகவும் கொடூரமானவையாக இருந்தன எனவும் அதிக மக்கள் இருந்த பகுதிகள், வீடுகள் உள்ள பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியதாக பத்திரிகையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கர்ப்பிணியின் வேலையை பறித்தது மெட்டா

மெட்டா நிறுவனம் தன்னிடம் பணியாற்றி வந்த கர்ப்பிணிப் பெண்ணின் வேலையை பறித்துள்ளது. அந்நிறுவனம் சமீபத்தில் உலகளவில் சுமார் 8,000 ஊழியர்களை திடீரென வேலையை விட்டு நீக்கியது. அதில் அமெரிக்காவைச் சேர்ந்த 34 வாரக் கர்ப்பிணிப் பெண்ணின் மகப்பேறு விடுப்பு தொடங்க சில நாட்களே இருந்த நிலையில், அவரை திட்டமிட்டு பணிநீக்கம் செய்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த தகவலை அவர் தனது ரெடிட் (Reddit) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் பெருநிறுவனங்களில் மோசமாகியுள்ள தொழிலாளர் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் இணையத்தில் எழுந்துள்ளன.

சீன விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல்

சீனாவின் ‘ஷென்சோ-23’ (Shenzhou-23) விண்கலம், மூன்று விண்வெளி வீரர்களுடன் விண்ணில் ஏவப்பட்டது. இது 2026 இல் சீனாவின் முதல் மனித விண்வெளிப் பயணமாகும். இந்த விண்வெளிப் பய ணக் குழுவிற்குச் சீனாவின் 3 ஆவது விண்வெளி வீரர் குழுவைச் சேர்ந்த ஜு யாங்ஜு தலைமை தாங்கு கிறார். இப்பயணக் குழுவினர் விண்வெளி உயிர் அறிவியல், விண்வெளி மருத்துவம், புதிய விண்வெளி தொழில்நுட்பங்கள் என 100-க்கும் மேற்பட்ட புதிய விண்வெளி அறிவியல் மற்றும் பயன்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளனர்.

அமெரிக்காவுடன் உடனடி ‘ஒப்பந்தம்’ ஏதுமில்லை : ஈரான் தகவல்

டெஹ்ரான், மே 25- அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் எதுவும் தற்போதைக்கு உடன டியாக சாத்தியமில்லை என்று ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இன்னும் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியிருந்த நிலையில், ஈரான் இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற் கொண்டுள்ள மார்கோ ரூபியோ, ஈரானுடன் ஏற்படுத்த உள்ள ஒப்பந்தம் பற்றி திங்கள் கிழமை காலை செய்தியாளர்களிடம் பேசுகையில், டிரம்ப் “அவ சரப்படவில்லை” , “ஒரு மோசமான ஒப்பந்தத்தை” அவர் அவசரமாக ஏற்றுக்கொள்ள மாட்டார். நாம் ஒரு நல்ல ஒப்பந்தத்தை எட்டப் போகிறோம், அல்லது வேறு வழி யில் இதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறிய ரூபியோ, “நாங்கள் ஒரு நல்ல ஒப்பந்தத்தையே விரும்பு கிறோம்” என்றும் குறிப்பிட்டார். மேலும், அமெரிக்கா ஒரு “மிகவும் வலுவான திட்டத்தை முன்வைத்துள்ளது”. இன்று அது தொடர்பான அறிவிப்பு கள் வரலாம் என கூறினார். இந்நிலையில் தான் எந்த அழுத்தங்களுக்கும் மிரட்டல்களுக்கும் ஈரான் பணியாது என்று அந்நாட்டு பாதுகாப்பு ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ரெஸாயி தெரிவித்துள்ளார். மேலும், அமெ ரிக்கர்கள் ஒப்பந்தத்தை விரும்பினால் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதி கரிக்க வேண்டும் என நினைத்தால் அவர்கள் தொடர்ந்து “மிரட்டல்” விடுக்கலாம் என்று குறிப்பிட்டார். அதேபோல அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்ச கத்தின் செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி செய்தியாளர்களிடம் கூறுகையில், பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமே போரை முடிவுக்குக் கொண்டு வருவது தான். இந்தக் கட்டத்தில் நாங்கள் அணுசக்தி தொடர்பான விவரங்கள் குறித்து விவாதிக்கவில்லை. பேச்சுவார்த்தை யில் உள்ள பல விஷயங்களில் நாங்கள் ஒரு முடிவுக்கு வந்திருப்பது உண்மைதான். ஆனால் அதற்கு உடனடி யாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகப் போகிறது என்று பொருள் அல்ல, அப்படி யாரும் சொல்லி விட முடியாது எனக் கூறினார். அதேபோல இந்த ஒப்பந்தத்தில், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) எவ்வாறு நிர்வகிக்கப்படும் என்ற விவ ரங்கள் இல்லை என்றும் அது அக்கடல்பகுதியில் உள்ள நாடுகளின் விஷயமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நவம்பர் மாதம் அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடை பெற உள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் போர் அந்நாட்டு மக்களிடையே குடியரசுக் கட்சியின் செல்வாக்கை குறைத்து வருவதாக ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டும் நிலையில், தேர்தலுக்கு முன்பாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகளும் நடப்பதாகக் கூறப்படுகிறது.