தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

27 May 2026, 8:25 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

நைஜீரியாவில் தேடுதல் வேட்டை 317 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

நைஜீரியாவில் கடந்த மே மாதத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 317 பயங்கர வாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 314 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கைகளின் மூலம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 221 கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், 18 பயங்கரவாதிகள் ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலமாக திருடப்பட்ட பல்லாயிரக்கணக்கான லிட்டர் பெட்ரோலியப் பொருட்க ளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டங்கள் புறக்கணிப்பு : ஐ.நா பொதுச் செயலாளர் வேதனை

ஐநா சாசனம் உலக அமைதிக்கான மிகச்சிறந்த நம்பிக்கையாகத் தொடர்கிறது. ஆனால், அதன் வலிமை அதை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களின் (உலக நாடுகளின்) அர்ப்பணிப்பைப் பொறுத்தே அமைகிறது. ஆனால் பிற நாடுகளின் இறையாண்மை, அரசியல் சுதந்திரம் மீதான தலையீடு மற்றும் மிரட்டுவதற்கு தடை இருந்த போதிலும் அவை புறக்கணிக்கப்படுகின்றன என ஐ.நா பொதுச்செயலா ளர் குட்டரெஸ் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேசச் சட்டங்கள் மீறப்படும் போது அதற்கு முறையான பதிலடி கொடுக்கப்படு வதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பயங்கரவாதிகள் மூலம் ஈரான் மீது போர் : ரஷ்யா எச்சரிக்கை

சிரியாவில் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா, ஜோர்டான், உக்ரைன், இஸ்ரேல், இங்கிலாந்து உள்ளிட்ட நாடு களால் ஐஎஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தப்பட்டனர். அப்பயங்கரவாதிகளை பயன்படுத்தியே ஈரான் மீது மேற்குலக நாடுகள் போர் தொடுக்கும் ஆபத்து உள்ளது என ரஷ்யா எச்சரித்துள்ளது. மேற்கத்திய நாடுகளின் கூட்டு உளவு அமைப்புகளின் பாதுகாப்பின் கீழ் செயல்பட்ட இராக் சிறைச்சாலைகளில் இருந்துதான் ஐஎஸ் பயங்கரவாதிகளை அந்நாடுகள் உருவாக்கின. தற்போது சிரியாவில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகள் அதே போன்ற சிறைக்கு கொண்டு செல்லப்படும் நிலையில் மீண்டும் அவர்களால் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளது.

ஹமாஸ் ராணுவத்தலைவரை கொலை செய்த இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவுத் தலைவர் முகமது ஓடே கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரி வித்துள்ளது. காசா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஓடே படுகொலையானதாக கூறப்படுகிறது. முன்னாள் ஹமாஸ் உளவுத்துறை தலைவரான ஓடே, அல்-காசாம் பிரிகேட்ஸ் ராணுவப் பிரிவின் தலைவர் பொறுப்பேற்ற நிலையில் திட்டமிட்டு அவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்கு தலில் மொத்தம் 6 பேர்கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர் என்று அல்ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

ஈரானை தாக்குபவர்களுக்கு மரணம் நிச்சயம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரானின் ஏவுகணை தளங்களையும் அதன் கப்பல்களையும் அமெ ரிக்கா தாக்கியது. இந்நிலையில் அமெரிக்காவுடனான மீண்டும் ஒரு போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் “எதிரியின் பலவீனத்தால்” மிகக் குறைவு என்று ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித் துள்ளது. அதே நேரத்தில், ஈரானின் தெற்குப் பகுதியை “ஈரானை தாக்குபவர்களுக்கு சுடுகாடாக “ மாற்று வோம் என்றும் சபதம் செய்துள்ளது. இதனால் மேற்கு ஆசியாவில் எப்போது வேண்டுமானாலும் மற்றொரு போர் வெடிக்கலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

“விலைவாசியைக் கட்டுப்படுத்து, சம்பளத்தை உயர்த்து, போரை நிறுத்து!” இத்தாலியில் மக்கள் பிரம்மாண்டப் போராட்டம்

போருக்குச் செலவிடுவதை கண்டித்தும், அடிப்படை ஊதியத்தை உயர்த்தக்கோரியும் இத்தாலியின் தலைநகர் ரோமில் 15,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பொது மக்கள் திரண்டு ஒரு பிரம்மாண்டப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

அரசாங்கம் மக்களின் அத்தியா வசியத் தேவைகளைக் கவனிப்பதை விட்டுவிட்டு, தேவையில்லாமல் ராணு வத்திற்கும் போருக்கும் அதிகப் பணம் செலவழிக்கக் கூடாது, விலைவாசி உயர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விண்ணைமுட்டும் விலைவாசி

இத்தாலியில் தற்போதைய சம்ப ளத்தை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்துவது மிகக் கடினமாக மாறியுள் ளது. இத்தாலியில் 1.1 கோடி மக்கள் வறுமையின் விளிம்பில் வாழ்கிறார் கள். அதில் 50 சதவீதத்துக்கும் அதிக மான மக்களால் ஒரு ரூபாய் கூட சேமிக்க முடிவதில்லை. “திடீரென்று மருத்துவம் அல்லது வேறு ஏதேனும் ஒரு அவசரச் செலவு வந்தால் அதனை தம்மால் சமாளிக்க முடியாது. அந்த அளவிற்கு எங்கள் வருமானம் சரிந்து பொருளாதார நெருக்கடியில் உள் ளோம்” என 4 இல் ஒருவர் கூறுகிறார். மின்சாரக் கட்டணம், பெட்ரோல், உணவு என எல்லாவற்றின் விலையும் ஏறிக்கொண்டே போகிறது, ஆனால் சம்பளம் மட்டும் உயரவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கார்ப்பரேட் கொள்ளை

இத்தாலி அரசு பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகள் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை அள்ளிக்கொடுக்கிறது. ஆனால், அந்த நிறுவனங்களோ லாபத்தைச் சுருட்டிக் கொண்டு, திடீரென ஆலைகளை மூடிவிட்டு தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்து விடுகின்றன. இதனால் நாட்டின் தொழில்துறை முற்றிலும் அழியும் நிலையில் உள்ளது.

போரும் பொருளாதாரச் சீரழிவும்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருப்பதாகக் கூறிக்கொண்டு, ராணுவத்திற்கும் போருக்காகவும் அரசு அதிக முதலீடு செய்து வருகிறது. மக்க ளுக்கு அடிப்படை ஊதியத்தை அதிக ரிக்காமல் அவர்களிடம் வசூல் செய்யப் படும் வரிகள் மூலம் ஆயுதங்களை வாங்கிக் குவித்து, மக்களின் வயிற்றில் அடிக்கிறது” என்று தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

தொழிலாளர்களின் முக்கியக் கோரிக்கைகள்

தொழிலாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்குக் குறைந்தபட்சம் 12 யூரோக்கள் (1,100 ரூபாய்) சம்பளமாக வழங்க வேண்டும். நாட்டில் உள்ள பெரும் செல்வந்தர்கள் மீது கூடுதல் வரி விதிக்க வேண்டும். காசாவில் நடக்கும் கொடூரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இஸ்ரேலுட னான உறவைத் துண்டிக்க வேண்டும். அமெரிக்காவின் நெருக்கடியின் கீழ் இருக்கும் கியூபா நாட்டிற்கு ஆதர வளிக்க வேண்டும் என தொழிற்சங் கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.