தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

7 Jul 2026, 10:14 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

பயங்கரவாத குழுக்கள் தாக்குதல்: முறியடித்த மாலி ராணுவம்

மாலியில் நான்கு முக்கிய நகரங்களில் இருந்த ராணுவ தளங்கள் மீது அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அசாத் விடுதலை முன்னணி, ஜேஎன்ஐஎம் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் இணைந்து தாக்குதல்களை நடத் தின. இந்த அனைத்து தாக்குதல்களையும் அந்நாட்டு ராணுவம் மிகக்கடுமையான பதி லடித்தாக்குதலால் முறியடித்துள்ளது. குறிப்பாக சிறைச் சாலைகள் மீது தாக்குதல் நடத்தி குற்றவாளிகளை தப்பிக்க வைக்க முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின கொண்டாட்டங்கள்: அமெரிக்காவில் 24 பேர் பலி

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்ற வார இறுதி யில் கடும் வெப்ப அலையால் 24-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நியூ ஜெர்சி மாகாணத்தில் மட்டும் சுமார் 29 பேர் வெப்ப அலை காரணமாக உயிரிழ ந்திருக்கலாம் என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள் ளது. உயிரிழ தவர்களில் பெரும்பாலானோர் குளிரூட்டிகள் இல்லாத வீடுகளில் வாசித்துள்ளார். கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது மிக நீண்ட வெப்ப அலை” அந்நாட்டில்வீசி வருவது குறிப்பிடத்தக்கது.

சூடானில் தீவிரமடையும் போர் : ஐ.நா கடும் கவலை

சூடானின் உள்நாட்டுப்போர் சூழல் குறித்து, ஐ.நா கடும் கவலை தெரிவித்துள்ளது. மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைப் பொதுச்செயலாளர் டாம் பிளெட்சர், சூடானின் துணைராணுவ தளபதி முகமது ஹம்தான் டகாலோவிடம் தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதையும், பொதுமக்கள் பாதுகாப்பாக இடம்பெயர்வதையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த படை அந்நாட்டு ராணுவத்துக்கு எதிராக போரிட்டு வருவதுடன் மக்களை கொத்துக்கொத்தாக படுகொலை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை சிறை கலவரம் : கட்டுப்படுத்தப்பட்டதாக தகவல்

இலங்கையின் நீர்க்கொம்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, அங்கு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. கலவரத்தின் போது சுமார் 700 கைதிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான மூவர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.