தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

53 minutes before
தீக்கதிர்  உலக செய்திகள்

ஹமாஸ் ராணுவ அதிகாரியை படுகொலை செய்த இஸ்ரேல்

காசா நகரில் வான்வழித் தாக்குதல் நடத்தி ஹமாஸ் அதிகாரி ஒருவரைப் படுகொலை செய்து விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர் ஹமாஸ் ராணுவ உளவுப் பிரிவின் செயல்பாட்டுத் தலைவரான ஜமால் அபு சயீத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இத்தாக்குதல் குறித்து ஹமாஸ் அமைப்பிடம் இருந்து உடனடியாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. 2025 அக்டோபர் மாதம் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 1,602 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

4.81 லட்சம் கோடி இழப்பீடு கேட்கும் ஹவுதி அமைப்பு

ஏமனின் ஹவுதி ஆயுத அமைப்புடன் தீவிரமடைந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர சவூதி அரேபியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. போர் நிறுத்தத்திற்கு சுமார் 4.81 லட்சம் கோடி ரூபாய் போர் இழப்பீடாக தரவேண்டும், ஏமனின் சட்டப்பூர்வமான அரசாகத் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்றும் ஹவுதி அமைப்பு சவூதிக்கு நிபந்தனை விதித்துள்ளதாக தி வால்ஸ் ஸ்ட்ரீட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்காசிய பகுதியில் சவூதி அரேபியா மற்றும் ஹவுதி அமைப்பினருக்கு இடையே மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்த அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பராகுவேயில் வங்கி திவால் : தேசிய நெருக்கடி

பராகுவே நாட்டின் மிகப்பெரிய டிஜிட்டல் வங்கியான யூனோ வங்கி திவாலானதைத் தொடர்ந்து அந்நாட்டில் பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுக்கவோ, பரிவர்த்தனை செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. யூனோ வங்கிப் பத்திரங்களின் வர்த்தகமும் நிறுத்தப்பட்டுள்ளது. அரசின் ஓய்வூதிய நிதிக்குச் சொந்தமான சுமார் 38 கோடி டாலர் இந்த நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜனநாயகக் கட்சி வெற்றி : உக்ரைனுக்கு அதிக உதவி கிடைக்கும்

அமெரிக்க இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெற்றுள்ள வெற்றி உக்ரைனுக்குக் கூடுதல் உதவிகளைப் பெற்றுத் தரும் என்று நம்புவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். “குடியரசுக் கட்சியினருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், ஆனால் உக்ரைனை ஆதரிப்பது மற்றும் உக்ரைனுக்கு உதவி வழங்குவது குறித்து ஜனநாயகக் கட்சியினர் மிகவும் தெளிவாகப் பேசுகிறார்கள். அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான உறவை மீண்டும் புதுப்பிப்பது குறித்து அவர்கள் பேசுகிறார்கள். எனவே, அதிகார அமைப்பில் ஒரு சமநிலை உருவாகும் என்றும், உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவு கிடைக்கும் என்றும் நம்பிக்கை உள்ளது என அவர் கூறியுள்ளார்.

ஈபிள் கோபுரத்தை மூடிய பிரான்ஸ் அரசு

பிரான்சில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. தற்போது மீண்டும் நாடு தழுவிய வேலைநிறுத்தம் துவங்கியுள்ளது. இதன் காரணமாக, வியாழக்கிழமை அன்று ஈபிள் கோபுரம் மூடப்பட்டு பொது மக்கள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது. 2027 இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும் எனவும் மக்ரோன் அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.