தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

30 May 2026, 9:19 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

இஸ்ரேலின் அத்துமீறல் : வழக்கு தொடுக்கிறதா பிரான்ஸ்?

பாலஸ்தீனர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற கப்பல் குழுவில் (Flotilla) பய ணித்த சமூக ஆர்வலர்களை இஸ்ரேல் கடத்தி துன்புறுத்தியது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசா ரிக்குமாறு பிரான்ஸ் அரசு தன் நாட்டு அரசு வழக்கறிஞர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக இந்த விவகாரத்தில் குற்றவியல் வழக்குகளைத் தொடர ஆதாரங்கள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான்-நோல் பரோட் அரசு வழக்கறிஞர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐரோப்பாவுக்கு அச்சுறுத்தலாக ரஷ்யா இருந்ததில்லை - புடின்

உக்ரைன் நெருக்கடி அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதாக நம்புவதற்குப் போர்ச் சூழல் உறுதி யான காரணங்களை தருகின்றன. இருப்பினும் மோதல்கள் தொடர்வதால் எப்போது முடிவுக்கு வரும் என்பதற்கான காலக்கெடுவைக் குறிப்பிடுவது சாத்தியமற்றது என ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரி வித்துள்ளார். மேலும் ரஷ்யா கடந்த காலத்திலும் ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்ததில்லை. இப்பொழுதும் அவ்வாறு இல்லை. அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு நேரடி ராணுவ அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்தவொரு இடமும் தாக்குதலுக்கான “சட்டப்பூர்வமான இலக்காகப்” பார்க்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல் நிவாரண உதவிகள் பாதிப்பு

லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை அதிகரித்து வருகிறது. இதனால் அவசரகால மீட்புப் பணி திறன் நிவாரணப் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதற்கான வழிகள் முடக்கப்பட்டு வருவதாக ஐநா மனிதநேய அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. அத்தியாவசிய சேவைகளுக்கான சாலைப் பாதைகளை இஸ்ரேல் குண்டு வீசி சேதப்படுத்தியுள்ளது. மக்கள் தங்கியுள்ள பகுதிகள் முகாம்கள் என அனைத்துப்பகுதிகளிலும் இஸ்ரேல் குண்டு வீசி படுகொலைகளை நிகழ்த்தி வருகிறது. மார்ச் 2- க்குப் பிறகு இஸ்ரேல் ராணுவத்தால் லெபனானில் 3,355 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 10,095 பேர் காயமடைந்துள்ளனர்.

பிரேசிலின் உள்நாட்டு அரசியலில் தலையிட அமெரிக்கா சூழ்ச்சி

பிரேசிலில் செயல்படும் சில குற்றவியல் குழுக்களை “பயங்கரவாத அமைப்புகள்” பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது. பணமோசடி மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற சட்டவிரோதக் கும்பல்கள் ஒழிக்கப்பட வேண்டியவை தான். அதில் சர்வதேச ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் உள்நாட்டு அரசியலில் தலையீடு செய்வதற்காக, காரணமாக அது பயன்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வெனிசுலாவின் உள்நாட்டு அரசியலில் தலையிட்ட இது போன்ற ஒரு காரணம் தான் புனையப்பட்டது. இதுவும் அதுபோன்ற சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான் என கண்டனங்கள் எழுந்துள்ளன.

போர்கள் பகுதிகளில் வன்கொடுமைகள் இரு மடங்கு அதிகரிப்பு

உலகளவில் போர்கள் தொடர்பான பாலியல் வன்முறை வழக்குகள் 2024 உடன் ஒப்பிடுகையில் 2025 இல்இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளன. இவை பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளதுடன் மிகுந்த கொடூரத்தன்மையுடன் அரங்கேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா பொதுச்செயலாளரின் வருடாந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 9,788 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாத வழக்குகளையும் கணக்கில் கொண்டால் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் மீண்டும் தாக்குதலை தொடர்வோம் : அமெரிக்கா மிரட்டல்

வாஷிங்டன், மே 30- அமைதி ஒப்பந்தம் எட்டப்படா விட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்கு தல்களை தொடங்க அமெரிக்கா தயாராக உள்ளது என்று அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் சனிக்கிழமை மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்கா-ஈரான் இடையே போரை மேலும் 60 நாட்கள் நிறுத்தும் வகையில் ஒப்பந்தம் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந் தத்தை அமெரிக்க ஜனாதிபதி ஏற்க மறுத்து வருவதாகவும், ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை கொடுத்தே ஆக வேண்டும் என அவர் பிடிவாதம் செய்வதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிங்கப்பூரில் பேசிய ஹெக்செத், “தேவைப் பட்டால் தாக்குதலை மீண்டும் தொ டங்குவதற்கான திறன் எங்களிடம் உள்ளது. நாங்கள் அதற்கு முழு தகுதியுடனும் இருக்கிறோம்,” என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் வார்த்தைகளை நம்ப முடியாது

ஒப்பந்தம் தொடர்பாக முடிவுகள் ஏதும் எட்டப்படாத நிலையில் அமெ ரிக்காவுடனான கருத்துப் பரிமாற் றங்கள் தொடர்ந்து நீடித்து வருவ தாக ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள் ளார். அதே நேரத்தில் இறுதி ஒப்பந் தம் எதுவும் இன்னும் எட்டப்பட வில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

நிபந்தனைகளை மட்டுமே அடிப் படையாக விதித்து வரும் டிரம்ப்பின் அணுகுமுறையை நிராகரித்த அவர், அமெரிக்காவின் வார்த்தைகளை நம்ப முடியாது. அவர்களின் செயல்க ளை வைத்தே ஈரான் மதிப்பிடும் என்று கூறியுள்ளார்.

மேலும் பேச்சுவார்த்தையில் ஈரா னின் தற்போதைய கவனம் “போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் மட்டுமே உள்ளது. ஈரானின் யுரேனி யம் செறிவூட்டல் செயல்பாடு அல்லது செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர் பான விவரங்கள் குறித்து இந்த கட்டத் தில் நாங்கள் எந்த விவாதமும் நடத்த வில்லை. ஹோர்முஸ் நீரிணையை மேலாண்மை செய்யும் எதிர்காலப் பணி “ஈரான் மற்றும் ஓமனுக்கு மட்டுமே உரித்தானது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.