தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

yesterday
தீக்கதிர்  உலக செய்திகள்

ஈரான்- அமெரிக்கா பொருளாதார மோதல் தீவிரம்

ஈரானை பொருளாதார ரீதியாக முடக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகின்றது. இதற்காக ஈரானின் வர்த்தகக் கூட்டாளிகளை குறிவைத்து பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான வேலைகளை அமெரிக்கா செய்து வருகின்றது. இந்நிலையில், வரலாற்றிலேயே இல்லாத மிகப்பெரிய நிதித் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஈரானை அமெரிக்கா மிரட்டியுள்ளது. இதற்குப் பதிலடியாக, ஈரான் மீதான பொருளாதாரப் போர் தொடர்ந்தால் வளைகுடாப் பகுதியிலிருந்து நடைபெறும் அனைத்து எண்ணெய் ஏற்றுமதியையும் முடக்குவோம் என அந்நாடு எச்சரித்துள்ளது.

அமெரிக்காவில் பரவும் காட்டுத்தீ : 42,000 பேர் வெளியேற்றம்

அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் அதிவேகமாகப் பரவி வருகின்றது. இதில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். சுமார் 42,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். 15,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் தீ பரவி வருகிறது. இதனால் மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களை வெளியேற்ற வேண்டிய சூழல் உருவாகலாம் அதற்கு தயாராக இருக்குமாறு அரசுத் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் தீ பரவலை கட்டுப்படுத்தும் பணி கடினமாக மாறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரகசியத் தொழில்நுட்பங்களை உக்ரைனுக்கு வழங்கும் பிரிட்டன்

நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய க்ரூஸ் ஏவுகணைகளை உக்ரைனிலேயே தயாரிப்பதற்கு தேவையான ரகசிய தொழில்நுட்பங்களை பிரிட்டன் வழங்கவுள்ளது. இத்தகைய ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா நேரடியாக கொடுக்கவில்லை. எனினும் ஸ்டாமர் தலைமையிலான அரசு ரகசியமாக கொடுத்தது. இதனால் ரஷ்யாவின் நீண்ட தூர பகுதிகளை உக்ரைன் தாக்கியது. பதிலுக்கு ரஷ்யாவும் கடுமையான தாக்குதலை நடத்தியது.தற்போது புதிதாக பதவி ஏற்றுள்ள பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் உக்ரைன் சென்றுள்ள நிலையில் இந்த தொழில் நுட்ப உதவியை அவர் கொடுப்பார் என கூறப்பட்டுள்ளது.

படகு கவிழ்ந்து 11 பேர் பலி

புலம்பெயர்ந்து சென்ற மக்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று துனிசியாவின் தெற்குப் பகுதி கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முதலில் 2 பேர் உயிரிழந்தனர். 12 பேரைக் காணவில்லை. ஒருவர் மட்டுமே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் என்று துனிசியாவின் பாதுகாப்புப் படை தெரிவித்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு 11 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 15 பேருடன் இப்படகு புறப்பட்டதாக கூறப்படுகின்றது.

சிலி ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் போராட்டம்

வலதுசாரியான ஹோசே அந்தோனியோ காஸ்ட் சிலியின் புதிய ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளார். அவர் பன்னாட்டு நிறுவனங்கள் அந்நாட்டின் கடல் சிங்கங்களை அழிப்பதற்கும் இயற்கை கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்கும் ஏற்றவகையில் அந்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை நீக்கியுள்ளார். இதற்கு எதிராக சிலியின் தலைநகரான சாண்டியாகோ உள்ளிட்ட பல நகரங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய தரைக்கடலில் புலம்பெயர் மக்கள் மீது அதிகரிக்கும் தாக்குதல் ஐரோப்பிய நாடுகள் ஆதரவுடன் லிபிய ஆயுதக்குழுக்கள் அட்டூழியம்

ஜெனீவா,ஆக.24-ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மத்தியதரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் புலம் பெயர் மக்களுக்கும், அவர்களுக்கு உதவும் மீட்புக் கப்பல்களுக்கும் லிபியா ஆயுதக் குழுக்களிடமிருந்து அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக சர்வதேச உதவி அமைப்பு ஒன்று திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சுரண்டலால் ஆப்பிரிக்காவில்வறுமை, வேலையின்மை, பஞ்சம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்தின்வாழ்வாதாரத்தை பாதுகாத்துக்கொள்ள அகதிகளாக ஐரோப்பாவிற்கு மத்திய தரைக்கடலைக் கடந்து புலம்பெயர்ந்துசெல்கின்றனர். சிறிய படகில் நூற்றுக்கணக்கான மக்கள் எந்த ஒரு பாதுகாப்பு உடைகளும் இன்றி ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். இப்படியான பயணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இத்தகைய சூழலில், அக்கடல் பகுதியைக் கண்காணிக்கும் வகையில் கப்பல்கள் மற்றும் விமானங்களின் நெட்வொர்க்கை ‘எஸ்.ஓ.எஸ் மெடிடரனீ’ (SOS Mediterranee) என்ற அமைப்பு நடத்தி வருகிறது. லிபியாவை கட்டுப்படுத்தி வருகின்ற ஆயுதக்குழுக்களால் இப்பகுதி பகைமை நிறைந்த சூழலாக மாறி வருகிறதுஎன இந்த அமைப்பு எச்சரித்துள்ளது. மத்திய தரைக்கடல் வழியாக புலம்பெயர்ந்து வரும்மக்களை ஆயுத முனையில் கட்டாயப்படுத்தி லிபியாவுக்குள் கொண்டு செல்கின்றனர். இவ்வாறு மக்களை லிபியாவுக்கு கடத்த ஐரோப்பிய நாடுகள் ஆயுதக்குழுக்களுக்கு நிறைய உதவி செய்து வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில் மனிதக்கடத்தல்களும் நடக்கின்றது.

2026 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அக்கடல்பகுதியில் புலம்பெயர்ந்து வந்த மக்களை மீட்கும் பணியில் இருந்தபடகுகளை நோக்கி ஏழு முறை “லிபியஆயுத குழுக்களின் படகுகள் அதிவேகத்தில் இடிப்பது போல வந்துள்ளன. மேலும் பல மணி நேரம் அவற்றைப் பின்தொடர்ந்து சர்வதேச கடற்பகுதி வரை துரத்தியுள்ளன என எஸ்.ஓ.எஸ் மெடிடரனீஅமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், லிபியாவின் பல்வேறு ஆயுதக் குழுக்களுடன் தொடர்புடைய அடையாளம் தெரியாத அதிவேகப் படகுகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும்அந்த அமைப்பு கூறியுள்ளது.

புலம்பெயர்ந்து வரும் மக்களின் படகுகள் மீது மோதி மூழ்கடிப்பது அல்லது விபத்தில் சிக்கிய மக்களை மீட்டுக்கொண்டு வரும் படகுகள் மீது தங்களின் அதிவேகப்படகுகள் மூலம் மோதி விபத்தை உருவாக்குவது என உயிருக்குஆபத்தை விளைவிக்கும் நடவடிக்கைகளில் இந்த ஆயுதக்குழுக்கள் ஈடுபடுகின்றன.கடந்த ஆண்டு, சர்வதேச கடற்பகுதியில் தனது ‘ஓஷன் வைக்கிங்’ (Ocean Viking) மீட்புக் கப்பலை லிபிய ஆயுதக்குழுக்கள் தாக்கின. அப்படகின் மீது 100-க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் ஐரோப்பிய அமைப்புகள் இந்த பிரச்சனை தொடர்பாக மௌனம்காக்கின்றன. புலம்பெயர்ந்து சென்ற மக்களின் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் எஸ்.ஓ.எஸ் மெடிடரனீ குற்றம் சாட்டியுள்ளது.ஐ.நா-வின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் (IOM) தகவல்படி, கடுமையான ஐரோப்பியக் கொள்கைகள் காரணமாக மத்திய தரைக்கடல் பகுதியில் கடலைக்கடக்க முயலும் மக்களின் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2026 இன் முதல் நான்கு மாதங்களில் மட்டுமே கடலை கடக்க முயன்றவர்களில் 821 பேர் உயிரிழந்ததாகவோ அல்லதுகாணாமல் போனதாகவோ பதிவாகியுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதேகாலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 111 சதவீத அதிகரிப்பாகும். அதே கால கட்டத்தில் புலம்பெயர்ந்த மக்களின் வருகை46 சதவீதம் குறைந்து 8,577 ஆகப் பதிவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.