தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

19 May 2026, 9:26 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

ஈரான்-ஓமன் கூட்டு நடவடிக்கை

ஹோர்முஸ் நீரிணை வழியான பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யத் தேவை யான நடவடிக்கைகளை ஈரான்-ஓமன் இணைந்து முன்னெடுக்கும் என கூறப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரி ணையின் கடல்வழிப் பாதை வழியாகப் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய ஈரான் எப்போதும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து முழுமையான பாதுகாப்புடன் மிகச் சிறந்த முறையில் நடைபெற வேண்டும் என்பதில் ஈரான் தொடர்ந்து உறுதியாக உள்ளது என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் 1,045 டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

உக்ரைன் ஏவிய 1,045 டிரோன்கள், ‘பிள மிங்கோ’ க்ரூஸ் உள்ளிட்ட இரு ஏவு கணைகளை வான் பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்ச கம் தெரிவித்துள்ளது. உக்ரைனின் டிரோன் தயா ரிப்பிடங்கள், ராணுவ முகாம்கள், உக்ரைனுக்காகப் போரிடும் வெளிநாட்டு கூலிப்படையினர் தங்கியி ருந்த இடங்கள் ஆகியவற்றின் மீது ரஷ்யப் படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளன. அதே போல ரஷ்ய ராணுவம் 524 டிரோன்கள் 22 ஏவு கணைகளை உக்ரைன் மீது ஏவியதாக உக்ரைன் விமா னப்படை தெரிவித்துள்ளது.இதில் 503டிரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியா-அமெரிக்கா கூட்டுப்படை பயங்கரவாதிகள் மீது தாக்குதல்

நைஜீரியாவில் செயல்படும் பயங்கரவாதிகள் மீது அந்நாட்டு ராணுவத்துடன் இணைந்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த வான்வழித் தாக்குதல்களில், ஐஎஸ் பயங்கரவாதிக ளின் மேற்கு ஆப்பிரிக்க மாகாணம்’ (ISWAP) அமைப்பைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல் லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகளின் காரணமாக நைஜீரியா சுமார் 17 ஆண்டுகாலம் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் உயி ரிழந்துள்ளனர். சுமார் 20 லட்சம் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

தீவிரமடையும் எபோலா : 131 பேர் பலி

காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் பர வும் “அளவும் வேகமும்” கவலைய ளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் தெரிவித்துள்ளார். இந்த நோய்த்தொற் றால் இதுவரை சுமார் 131 பேர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் எளிதாகப் பரவக்கூடிய இந்த இரத்தப்போக்கு காய்ச்சலின் (Haemorrhagic fever) தீவிரத்தைக் கருத்தில் கொ ண்டு, உலக சுகாதார அமைப்பு இதனை ஒரு சர்வ தேச சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. மேலும், இந்த நெருக்கடி குறித்து விவாதிக்க ஒரு அவசரக் கூட்டத்தையும் கூட்டியுள்ளது.

வளரும் நாடுகளுக்கு சர்வதேச வங்கிகள் உதவ வேண்டும்

பிரான்ஸ் நாட்டில் ஜி 7 நாடுகளின் நிதி யமைச்சர் கூட்டம் பிரான்ஸ் நிதியமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியமும் , உலக வங்கியும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு உதவ தங்களது முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இந்த முடிவில் ஜி7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் உடன்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் நிதி அமைச்சர் ரோலண்ட் லெஸ்குர் தெரி வித்துள்ளார்.

தொழிற்சங்கங்களை தடை செய்யும் நடவடிக்கை : நேபாள உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

காத்மாண்டு,மே 19- நேபாளத்தில் பிரதமர் பாலேந்திர ஷா தலை மையிலான ராஷ்ட்ரிய ஸ்வதந்த்ர கட்சி (RSP) அர சானது அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய அரசு ஊழியர்களின் தொழிற்சங்கங்கள், மாண வர் சங்கங்கள், தொழிற்சங்கங்களை தடை செய்ய வும், கலைக்கவும் எடுத்த முடிவிற்கு நேபாள உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நேபாளத்தில் கடந்த ஆண்டு மாணவர் கள்,இளைஞர்கள் நடத்திய பெரும் போராட்டத்தை தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் சர்மா ஒலியின் அரசு ராஜினாமா செய்தது.

அடுத்து நடந்த தேர்த லில் தலைநகர் காத்மாண்டு மேயராக இருந்த பாலேந்திர ஷாவின் கட்சி பெரும் வெற்றி பெற்றது.

ஷா பிரதமராகப் பதவி ஏற்றார்.

பதவி ஏற்ற முதல் நாளிலேயே அவரை ஆட்சி யில் அமர வைத்த மாணவர்களை அரசியலில் இருந்து வெளியேற்றும் வகையில் மாணவர் சங் கங்களுக்கு தடை விதித்தார்.

மேலும் அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்க ளை கலைக்கவும் தடை செய்யவும் நடவடிக்கை களை முன்னெடுத்தார். இந்நிலையில் ஷா அரசின் இந்த முடிவுகளுக்கு எதிராக நாடுமுழுவதும் ஆயி ரக்கணக்கான அரசு ஊழியர்களும் மாணவர்க ளும் பெரும் போராட்டத்தை நடத்தினர்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

இதனை மாண வர்கள் வரவேற்றுள்ளனர்.

நேபாளத்தில் 1992 ஆம் ஆண்டின் சிவில் சர்வீசஸ் சட்டமானது ஊழியர்கள் சங்கம் அமைப்ப தற்கும், அவற்றைப் பதிவு செய்வதற்கும், கூட்டுப் பேரம் பேசுதல் (Collective Bargaining) உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அனுமதி அளித்திருந்தது. இந்த சட்டத்தில் பல்வேறு பிரிவுகளை கடந்த மே 3 அன்று திருத்தி அவச ரச் சட்டம் (Ordinance) ஒன்றை ஷா தலைமை யிலான அரசு பிறப்பித்தது.

இந்த புதிய திருத்தங்கள், தொழில் துறை சார்ந்த பிரச்சனைகளில் கோரிக்கைகளை எழுப்பு வதிலும், குறைகளைக் கேட்டுப் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் தொழிற்சங்கங்களுக்கு இருந்த பங்கை முற்றிலுமாக நீக்கின.

இந்த அவசரச் சட்டத்தின் அடிப்படையில், நேபாளத்தின் தொழி லாளர் மற்றும் தொழில்சார் பாதுகாப்புத் துறை மே 6 அன்று அரசு ஊழியர்களின் 12 தொழிற் சங்கங்களின் பதிவை ரத்து செய்தது.

இந்த நடவடிக்கைகள் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் போராட்டங்களைத் தூண்டியது.

அரசு ஊழியர்கள் இந்த நடவடிக்கை யை கொடூரமானது என்றும், சங்கம் அமைப்பதற் கான தங்களின் அரசியலமைப்பு உரிமையைப் பறிக்கும் செயல் என்றும் கூறினர்.

இந்த ஜனநா யக விரோத நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்த னர். பிரதமர் ஷா இந்த ஜனநாயக விரோதத் தடைக ளை நியாயப்படுத்தி தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில் தான் நேபாள உச்சநீதி மன்றம் அரசின் அறிவிப்புக்கு தடை விதித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.