தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

13 Sept 2026, 12:55 am
தீக்கதிர்  உலக செய்திகள்

தீக்கதிர் உலக செய்திகள்

பொருளாதார அழுத்தத்திற்கு பணிய மாட்டோம்: ஈரான் ஜனாதிபதி

அமெரிக்காவின் பொருளாதார அழுத்தத்திற்கு ஈரான் மக்கள் பணிய மாட்டார்கள் என்று அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள அவர் மதத் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்களுடனான சந்திப்பில் பேசினார். அப்போது “அச்சுறுத்தல்கள் மூலம் ஈரானியர்களைப் பணிய வைக்க முடியாததால், வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளைப் பயன்படுத்தி சரணடையச் செய்ய அமெரிக்கா முயல்கிறது. ஈரான் மக்கள் இதற்கு ஒருபோதும் பணிய மாட்டார்கள் என்று கூறினார்.

7,000-த்தை கடந்த எபோலா : வேகமாக பரவும் தொற்று

காங்கோ நாட்டில் எபோலா பரவலை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவுகின்றது. இதனால் வேகமாக பரவும் தொற்றால் தற்போதுவரை 7000 க்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் 3,398 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அரசாங்கத்தின் சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் 10 நிலவரப்படி, 7,022 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு விகிதம் 48.4 சதவீதமாக உள்ளது. அந்நாட்டில் நிலவும் ஆயுதக்குழுக்களின் தாக்குதல்கள் மற்றும் வறுமை காரணமாக தொற்றை கட்டுப்படுத்துவதில் சவால் எழுந்துள்ளது.

கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் : சவூதி அரேபியா மூடியது

சவூதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் பாதையில் அமைந்துள்ள எண்ணெய் உந்தி நிலையங்கள் டிரோன் தாக்குதலால் சேதமடைந்துள்ளன. இதனால், அக்குழாயை மூட வேண்டிய கட்டாயம் சவுதி அரேபியாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முழுக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் இக்குழாய் பாதை முக்கியமான பாதையாக இருந்து வந்த நிலையில் தற்போதைய சூழல் சவுதியின் எண்ணெய் ஏற்றுமதிக்கு பேரிடியாக அமைந்துள்ளது. எண்ணெய் விநியோகம் எப்போது மீண்டும் தொடங்கும் என்பதை சவூதி இன்னும் தெரிவிக்கவில்லை.

உயரடுக்கினரின் கொள்கை மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரிக்கிறது

ஐரோப்பா முழுவதும் ஏற்படும் அரசியல் மாற்றங்கள், மேற்கத்திய “உலகமயமாக்கல் உயரடுக்கினரின்” (globalist elites) கொள்கைகள் மீது மக்களுக்கு அதிகரித்து வரும் அதிருப்தியையே பிரதிபலிக்கின்றன என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் குறிப்பிட்டுள்ளார். மேலும் உக்ரைனுக்கு நேட்டோ படைகளை அனுப்புவது ரஷ்யாவுடனான நேரடிப் போருக்கு வழிவகுக்கும் என்று புடின் எச்சரித்துள்ளார். பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய புடின், பனிப்போரின் முடிவுக்குப் பிறகு வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் ஐரோப்பிய தலைவர்கள் செய்த “அமைப்புரீதியான தவறுகளின்” விளைவே தற்போதைய ஐரோப்பாவின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளுக்குக் காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் வருகை இடதுசாரி கட்சிகள் போராட்டம்

லிமா,செப்.12- லத்தீன் அமெரிக்க நாடுகளின் மீது அமெரிக்காவின் அழுத்தம், தடைகள்மற்றும் மிரட்டல் நடவடிக்கைகளுக்கு எதிராக இடதுசாரி மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்புகள் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவின் வருகையின் போது போராட்டம் நடத்தின.

லத்தீன் அமெரிக்க நாடுகளை நீண்ட காலமாகவே ஏகாதிபத்திய நலனுக்கு அமெரிக்கா பயன்படுத்தி வருகின்றது. லத்தின் அமெரிக்கா முழுவதையும் கட்டுப்படுத்தவும் அந்நாடுகளின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கவும் அங்கு அமெரிக்காவின் ராணுவ ஆதிக்கத்தை அதிகரிக்கவும் அமெரிக்க ஒரு திட்டத்தை தீட்டியுள்ளது.

ல ஆண்டுகளாக லத்தீன் அமெரிக்காவில் செயல்படும் போதைப்பொருள், ஆயுதங்கள், மனிதக்கடத்தலில் ஈடுபடும் குற்றக்கும்பல்களை எதிர்த்துப் போராட “அமெரிக்காவின் கேடயம்” என்ற பெயரில் சமீபத்தில்டிரம்ப் நிர்வாகத்தால் ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலமாக பிராந்திய பாதுகாப்பு என்ற பெயரில் அக்குற்றக்கும்பல்களிடம் இருந்துநாங்கள் பாதுகாப்பு தருகிறோம் அக்கும்பல்களை கட்டுப்படுத்துகிறோம் என தமது ராணுவ தளங்களை அந்நாடுகளில் அமைக்க திட்டமிட்டுள்ளது அமெரிக்கா.

இத்திட்டத்தில் பெருவை இணைக்க அந்நாட்டு ஜனாதிபதிகெய்கோ புஜிமோரி தலைமையிலானஅரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தான் ரூபியோவும் அந்நாட்டுக்கு சென்றுள்ளார். தற்போது அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் தென்னமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ரூபியோவின் இந்த பயணத்திற்குஇடதுசாரி கட்சிகள், தொழிற்சங்கங்கள், ஏகாதிபத்திய எதிப்பு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன.

பெரு தலைநகர் லிமாவில் ரூபியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘அமெரிக்கர்களே பெருவை விட்டுவெளியேறுங்கள்’, ‘மார்கோ ரூபியோ பெருவை விட்டு வெளியேறு’, அமெரிக்காவின் கேடயம் (Shield of the Americas) திட்டத்திற்கு அனுமதிக்க கூடாது என அமெரிக்காவின் ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கு எதிராக கோசம் எழுப்பியும் பதாகைகள் பிடித்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான போராட்டம் அவசியமானது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் அமெரிக்காவின் ஏகாதிபத்திய திட்டத்திற்கு உதவி செய்வதை அடிப்படையாக கொண்டு அமையக்கூடாது.

நாடுகளுக்கு இடையிலான இறையாண்மை ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். சீனா, ஈரான் அல்லது பிற நாடுகளுடன் போட்டி போடுவதற்கோ மோதுவதற்கான ஒரு கருவியாக பெருவை மாற்றக்கூடாது எனவும் போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.