தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

17 Aug 2026, 10:04 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

காட்டுத்தீயை ஏற்படுத்திய இஸ்ரேலியர் : கிரீஸ் நாட்டில் கைது

கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இஸ்ரேல் சுற்றுலாப் பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.வெப்ப அலை காரணமாக கிரீஸ் துவங்கி பல ஐரோப்பிய நாடுகளில் மிகத்தீவிரமாக காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் காட்டுத்தீ அபாயம் உள்ள சுற்றுலா தளங்களில் பார்ஃபிகியூ சமைப்பது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனை மீறி இஸ்ரேல் சுற்றுலாப் பயணி கிரீட் தீவில் பார்ஃபிகியூ செய்துள்ளார். இதனால்அத்தீவில் காட்டுத்தீ ஏற்பட்டது. 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், மூன்று சிறப்பு காட்டுத்தீ தடுப்புப்பிரிவுகள்,ஹெலிகாப்டர்கள், தண்ணீர் டேங்கர்கள் தன்னார்வலர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வடகொரியா அச்சுறுத்தலற்ற மரியாதை கொண்ட நாடு : டிரம்ப்

தனது ஆட்சியில் வடகொரியா “அச்சுறுத்தலற்றதாகவும் மரியாதையுடனும்” இருப்பதாக தனது டிரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் உடன் தனக்கு இருக்கும் மிகச்சிறந்த உறவை சுட்டிக்காட்டியுள்ள டிரம்ப் தென்கொரியாவுடனான கூட்டு ராணுவப் பயிற்சிகளை கணிசமாகக் குறைக்குமாறு பென்டகனுக்கு உத்தரவிட்டுள்ளார். தென்கொரியா-அமெரிக்கா கூட்டு ராணுவப்பயிற்சிதுவங்க உள்ளது. அதில் தனக்கு மகிழ்ச்சி இல்லை. இத்தகைய ராணுவப்பயிற்சிகளை உடனடியாக முழுமையாக ரத்து செய்ய முடியாது என்பதால், கணிசமாகக் குறைக்க அமெரிக்க போர்த்துறை செயலாளர் பீட்ஹெக்செத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அணு ஆயுத தாக்குதலுக்கு அமெரிக்கா பரிசீலைனை!

ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் மாதக்கணக்கில் நடத்தி வரும் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.இந்நிலையில், ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்க அதிகாரிகள் ஆலோசித்துவருவதாக அந்நாட்டின் முன்னாள் எம்பி மார்ஜோரி டெய்லர் கிரீன் குற்றம் சாட்டியுள்ளார். ஈரான் மீது தாக்குதல்நடத்தும் முறைகள் குறித்து உயர்மட்ட குழுவில் விவாதம் நடந்த போது இந்த விவாதம் எழுந்ததாகவும் அவர்கூறியுள்ளார். தனது சமூக ஊடகப்பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் “நான் இதனை ஒரு யூகித்தில் சொல்லவில்லை, எனக்குத் தெரியும். இது முற்றிலும் கொடூரமானது என அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

வாழ்வாதாரத்தை இழந்த லெபனான் மக்கள்

லெபனான் மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்களால் வீடுகளும் 1,38,000 ஏக்கர் விவசாய நிலங்களும் பாழாகியுள்ளது. இது லெபனானின் நீண்டகால நிதி நெருக்கடியை மேலும் தீவிரமாக்கியுள்ளது. இதன்காரணமாக அந்நாட்டு மக்கள் அன்றாட வாழ்வைக் கடக்கவே பெரிதும் போராடி வருகின்றனர். உலக வங்கியின் மதிப்பீடுகளின்படி, மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் லெபனானில், பிப்ரவரி மாதத்தில் பெட்ரோல் விலை சுமார் 25% உயர்ந்தது. மேலும் கடந்த ஆண்டில்உணவு மற்றும் வீட்டு வாடகைச் செலவுகள் சுமார் 20% உயர்ந்து மக்களின் சுமையை மேலும் அதிகரித்துள்ளது.

ஊதியம் தராததால் காங்கோவில் சுகாதாரப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்

காங்கோ வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு எபோலா வைரஸ் மிக வேகமாக பரவி வருகின்றது. பரவலைகட்டுப்படுத்த சுகாதாரப் பணியாளர்கள் மிகத்தீவிரமாக போராடி வருகின்றனர். எனினும் கடந்த மூன்றுமாதங்களுக்கும் மேலாக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வில்லை. களப்பணியாளர்களுக்கு போதியபோக்குவரத்து வசதிகளும் இல்லை. இதனால் சுகாதாரப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சில மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த பரவலில் 4,381 பேருக்கு நோய்உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 2,300 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமும் ‘30 முதல் 40’ பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்ய இஸ்ரேல் அமைச்சர் பென்-க்விர் வெறிப்பேச்சு

டெல்அவிவ்,ஆக.17-காசாவில் தினமும் இரவு 30 -40 பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சரும் தீவிர வலதுசாரியுமான இடாமர் பென்-க்விர் கூறியுள்ளார். ஆபத்தை விளைவிப்பவர்களை மட்டும் குறிவைக்காமல் பொதுமக்களையும் படுகொலை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

2023 அக்டோபர் 7 இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது. அப்போது அங்கு ரோம் பிராஸ்லாவ்ஸ்கி இஸ்ரேல்ராணுவ வீரர் ஹமாஸ் படையால் சிறை பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அவருடன் பென்-க்விர் நடத்தியபாட்காஸ்ட் (podcast) உரையாடலில் தான் இந்த வெறிப்பேச்சை பேசியுள்ளார். பாலஸ்தீனர்களை குறிவைத்து படுகொலை செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்த பென்-க்விர், “அங்கு(காசாவில்) வாழத் தகுதியற்ற மனிதர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் வாழக் கூடாது. அவர்கள் மனிதர்களே அல்ல,”என்றும் பேசியுள்ளார்.

கடந்த மே மாதம் கடல் வழியாக காசாவிற்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற தன்னார்வ குழுவினரை இஸ்ரேல் ராணுவம் கடத்தியது. அப்படி கடத்தப்பட்டவர்களை இவர் மிகக்கடுமையாக தாக்கினார். அது தொடர்பான காணொளிகள் வெளியாகி கடும் கண்டனங்களை எழுப்பியது. மேலும் தொடர்ச்சியாக பயங்கரவாதம், இனப்படுகொலைகளுக்கு ஆதரவாகவே அவர் பேசியும் செயல்பட்டும் வருகிறார். ஹமாஸ் அமைப்புடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கையெழுத்திட்ட போதிலும் ராணுவத் தாக்குதல்களைகுறைக்கவோ நிறுத்தவோ கூடாது என தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். தாக்குதல்களை நிறுத்தலாம்என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஒரு ஆலோசனை முன்வைத்த போது கூட அம்முடிவை மிகக் கடுமையாகஎதிர்த்தவர்.

தற்போது அந்நாட்டில் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அத்தேர்தலில் இவருக்கு அதிக ஆதரவு

கிடைக்கும் என கூறப்படுகிறது. ராணுவத்தின் மீது இவருக்கு நேரடி அதிகாரப்பூர்வ அதிகாரம் இல்லை என்பதால், இவரால் நேரடியாகத் தாக்குதல் உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது. இருப்பினும், நாட்டின் போர் மற்றும் பாதுகாப்புச் கொள்கைகளை உருவாக்க உதவும் மூத்த அமைச்சர்களைக் கொண்ட இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவையில் இவர் இடம்பெற்றுள்ளார். இவர் நேதன்யாகுவை விட மிகத்தீவிரமான கொடூரமான கொலை வெறிபிடித்த தீவிர வலதுசாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.