தீக்கதிர் உலக செய்திகள்
7 Sept 2026, 10:18 pm

இனப்படுகொலை வழக்கு : ரத்து செய்ய கோரிக்கை

பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலுக்கு ஜெர்மனி ஆயுதங்கள் வழங்கி வருகிறது. ஆயுதங்கள் வழங்குவதன் மூலமாக ஜெர்மனியும் இனப்படுகொலைக்கு உதவி செய்கிறது என 2024 இந்த நிகரகுவா அரசு குற்றம்சாட்டி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. மேலும் இஸ்ரேலுக்கு ஜெர்மனி வழங்கும் அனைத்து உதவிகளையும், குறிப்பாக ராணுவ உதவிகளை நிறுத்த கட்டாயப்படுத்தும் வகையில் அவசர நடவடிக்கைகளைப் பிறப்பிக்குமாறு நிகரகுவா கோரிக்கையும் விடுத்திருந்தது. இந்நிலையில் அந்த வழக்கை ரத்து செய்ய சர்வதேச நீதிமன்றத்திடம் ஜெர்மனி வலியுறுத்தியுள்ளது.

டெங்கு பரவல் தீவிரம் : வங்கதேசத்தில் 117 பேர் உயிரிழப்பு

வங்கதேசத்தில் டெங்கு நோய்த்தொற்று மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதுவரை 42,590 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பால் 117 பேர் உயிரிழந்துள்ளனர். வரும் வாரங்களில் இந்நோயின் பரவல் வேகம் மேலும் அதிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 2023-க்கு பிறகு தற்போது அந்நாட்டில் மிக மோசமான டெங்கு பரவல் ஏற்பட்டுள்ளது. இது மருத்துவமனைகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் தட்டம்மை நோய்த்தொற்று பரவி இந்த ஆண்டில் சுமார் 1,000 குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு ஜெர்மனி தேர்தல் : தீவிர வலதுசாரிகள் வெற்றி

கிழக்கு ஜெர்மனியின் சாக்ஸனி-அன்ஹால்ட்’ மாநிலத் தேர்தலில் ஜெர்மனிக்கான மாற்று என்ற தீவிர வலதுசாரி கட்சி 44 சதவீத வாக்குகளைப் பெற்று வென்றுள்ளது. தற்போதைய ஜெர்மன் அதிபர் மெர்ஸ் இன் மைய-வலதுசாரிக் கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய கட்சி 18 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் மெர்ஸ் தனது கட்சியினருடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். ஜெர்மனிக்கான மாற்று கட்சி தீவிரமான இனவெறி கொண்டது. உலகம் முழுவது பொருளாதார நெருக்கடி மற்றும் போர் பரவி வரும் நிலையில் ஜெர்மனியில் வலது சாரிகளின் வளர்ச்சி ஆபத்தானது என எச்சரிக்கப்பட்டுகிறது.

‘இங்கிலாந்தில் மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவு எட்டாக்கனியாக உள்ளது’

லண்டன்,செப்.7-அதிகரித்து வரும் தனியார்மயம், முறையான கண்காணிப்பின்மை, விலைவாசி உயர்வு காரணமாக இங்கிலாந்தில் உள்ளமேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆரோக்கியமற்ற உணவுகளையே நம்பியிருக்கும் கட்டாயத்தில் உள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘பைட் பேக்’ (Bite Back) என்ற அமைப்பு வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் தரமான உணவுகள் இல்லாததால் குழந்தைகளின் ஊட்டச்சத்து எப்படி பாதிக்கின்றது என தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து பள்ளியில் வழங்கப்படும் முழு உணவு வகைகளையும் எடுத்து சென்று உண்பதற்கு பதிலாக உடலுக்கு ஆரோக்கியம் அல்லாத மைதா மாவில்செய்யப்பட்ட பேக்கரிஉணவுப்பொருட்கள் , சிப்ஸ் போன்ற மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) நிறைந்த எளிதில் வாங்கிச் செல்லக்கூடிய ‘கிராப்-அண்ட்-கோ’ (grab-and-go) வகை உணவுகளையே மாணவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

இதனால் இந்த உணவு வகைகளை மாணவர்களுக்கு தரக்கூடாது என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் மாணவர்கள் தங்களின் சொந்த விருப்பத்தின் பேரிலேயே இந்த உணவுகளை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று அந்நாட்டு உணவுத் துறை வாதிடுகின்றது.

பள்ளிகளில் கொடுக்கப்படும் உணவுகளில் ‘கிராப்-அண்ட்-கோ’ வகை உணவுகளே குறைந்த விலை கொண்டவை. சில பள்ளிகளில், குறைந்த விலையுள்ள முழு அளவுமதிய உணவுகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் அதுவும் ஏற்கெனவே குறைந்த விலையில் கிடைக்கும்‘கிராப்-அண்ட்-கோ’ உணவை விட ஐந்து மடங்கு அதிக விலையாக உள்ளது.

இந்த விலைகளில் உள்ள வித்தியாசம் தான், ‘கிராப்-அண்ட்-கோ’ உணவுகளை மாணவர்களின் உணவாக மாற்றுகிறது. இது குழந்தைகளின் ஆரோக்கியத்திலும், அதன் விளைவாக அவர்களின் கல்வியிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சனையில் மாணவர்களின் உணவுத்தேர்வை தனிப்பட்டஉணவு விருப்பமாகப் பார்க்கக் கூடாது. கிராப்-அண்ட்-கோ உணவுகள் வகுப்புகளில் கவனத்தைச் செலுத்தத் தேவையான ஆற்றலைத் தருவதில்லை. மேலும், ஒவ்வொரு நாளும் பள்ளிகள்முடியும் வேளையில் மாணவர்களுக்கு பசி, சோர்வு மற்றும் கவனச்சிதறல்களை ஏற்படுத்துகின்றது என ‘பைட் பேக்’ ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை, கல்வித் துறையைப்பாதுகாக்காத அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் லாப நோக்கம் மட்டுமே கொண்ட உணவு முறை தனியார் மாயம் ஆகியவையே ஆரோக்கியமற்ற உணவுகளின் ஆதிக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாகும். குறிப்பாக மாணவர்களின் நாட்டின்எதிர்காலமாக கருதாமல் அவர்கள்தமது சந்தையின் வாடிக்கையாளர்களாக உணவு வழங்கும் ஒப்பந்ததாரர்கள் கருதுவதும் இந்த பிரச்சனையின் மையப்புள்ளியாக உள்ளது.

இந்நிலையில் மாணவர்களை நாட்டின் எதிர்காலமாக கருதாமல் தங்களின் லாபத்தை அதிகரிக்கும் சந்தையாக மட்டுமே கருதும் ஒப்பந்தநிறுவனங்களின் அணுகுமுறையை தடுக்க வேண்டும். அரசு மாணவர்களுக்கு சாத்தான உணவுகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அரசு தான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு பொறுப்பு.ஊட்டச்சத்து பரிந்துரைகளின் அடிப்படையில் உணவுத் திட்டங்களை வடிவமைத்து நிதி ஒதுக்க வேண்டும்என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.