தீக்கதிர் உலக செய்திகள்
11 Jun 2026, 8:11 pm

பிரான்சில் ஜி7 உச்சிமாநாடு : மோடி - டிரம்ப் சந்திக்க வாய்ப்பு

பிரான்சில் ஜூன் 15 முதல் 17 வரை ஜி7 உச்சிமாநாட்டு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் பிரதமர் மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பும் சந்தித்துப் பேசுவதற்கான நேரம் குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி வரும் சனிக்கிழமை முதல் பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு ஒரு வார கால சுற்றுப்பயணத்தைமேற்கொள்ள உள்ளார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. குறிப்பாக இரு தலைவர்களும் சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகளை இரு நாட்டு அதிகாரிகளும் உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் தடை : எல்லை கடந்த கொடூரம்

அமெரிக்கா விதித்துள்ள எரிசக்தி தடையை மீண்டும் கியூபா கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்தத் தடை அப்பிராந்தியத்தில் உள்ள சர்வதேச முகமைகள் மற்றும் அமைப்புகளின் பணிகளைப் பாதிப்பதோடு, கியூபாவின் பொருளாதார நடவடிக்கைகளையும் முடக்குகிறது. இந்தத் தடையின் எல்லை கடந்த கொடூரத் தன்மையை வெளிப்படுகிறது. கியூப மக்களின் மீது உண்மையான மற்றும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கியூப வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் கண்டித்துள்ளார்.

இஸ்ரேல் அமைச்சர் மீது இத்தாலி விசாரணை

காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற சமூக ஆர்வலர்களை இஸ்ரேல் ராணுவமும் அதன் தீவிர வலதுசாரி அமைச்சர் டாமர் பென்-கிவீரும் மிக மோசமாக நடத்தினர். இது தொடர்பாக பென்-கிவீர் மீது இத்தாலி விசாரணை ஒன்றைத் தொடங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு பிரான்சும் இதேபோன்ற விசாரணையைத் தொடங்கியிருந்த நிலையில் இத்தாலியும் இதில் இணைந்துள்ளது. இந்த விவகாரத்தில், முறைகேடாக நடத்திய குற்றச்சாட்டின் பேரில் பென்-கிவீர் மீது தடைகளை விதிப்பது குறித்தும் ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருகிறது.

மேற்கு ஆசிய நெருக்கடி : இலங்கைக்கு கடும் பாதிப்பு

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் நெருக்கடி காரணமாக, 13 லட்சம் இலங்கை மக்கள் தங்களது அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போராடி வருவதாக ஐ. நா உணவு முகமை தெரிவித்துள்ளது. சில நேரங்களில் அவர்கள் கடுமையான பசிக்குத் தள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது. உலக உணவுத் திட்டம் அமைப்பு மேற்கு ஆசிய நெருக்கடி நாடுகளை எவ்வாறு பாதிக்கிறது என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் ஏற்கெனவே நெருக்கடியில் உள்ள நாடுகள் போரால் மேலும் தீவிரமான நெருக்கடிக்குச் செல்லும் என எச்சரித்துள்ளது.

பெரு ஜனாதிபதி தேர்தல் இடதுசாரி வலதுசாரி வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி

லிமா, ஜூன் 11- பெரு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி யாளர் யார் என்று இன்னும் அறிவிக் கப்படவில்லை. இறுதி முடிவு வெளியாக இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரு நாட்டில் கடந்த ஞாயிற் றுக்கிழமை, ஜூன் 7 அன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. ஆனால் இதுவரை வெற்றியாளர் யாரும் அறிவிக்கப்படவில்லை. அந்நாட்டு தேர்தல் ஆணையத்தின் தற்போதைய தரவுகளின்படி, டுகெதர் ஃபார் பெரு’ (TogetherForPeru) என்ற முற்போ க்குக் கூட்டணியின் இடதுசாரி வேட்பா ளரான ராபர்டோ சான்செஸ் 50.01 சதவிகித வாக்குகளுடன் முன்னிலை யில் உள்ளார். ‘பாப்புலர் ஃபோர்ஸ்’ (Fuerza Popular) என்ற மத்திய-வலது சாரி வேட்பாளரான கெய்கோ புஜி மோரி 49.98 சதவிகித வாக்குகளு டன் கடுமையான போட்டியாளராக இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்த லில் பதிவான வாக்குகளில் 97.8 சத விகித வாக்குகளை தேர்தல் ஆணை யம் எண்ணியுள்ளதாகவும் வெளி நாட்டு வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் இன்னும் எண்ணப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு வெளி யுறவுத்துறை அமைச்சகத்தின் தகவல் படி, இந்த வெளிநாட்டு வாக்குகள் ஜூன் 10-க்குள் பெருவிற்கு வரும் என தெரிய வந்துள்ளது. இந்த வெளிநாட்டு வாக்குகள் வலதுசாரியான க்கு சாதக மாக இருப்பதாக ‘இன்போபே’ (Infob ae) செய்தி நிறுவனம் தெரிவித்துள் ளது. இதனால் இரு வேட்பாளர்களுக் கும் இடையிலான வாக்கு வித்தியா சம் மிக குறைவாகவும் (10,000 வாக்கு கள்) கடுமையான போட்டியும் நிலவி வருகிறது. தற்போது மீதமுள்ள வாக்குப் பதிவு படிவங்கள் மற்றும் சர்ச்சைக்குரி யதாக உள்ள படிவங்களையும் தேர்தல் அதிகாரிகள் மறுஆய்வு செய்ய வேண்டும். இதன் விளைவாக, இறுதி முடிவுகள் வெளியாவதற்கு சில நாட்களோ அல்லது வாரங்களோ ஆகலாம் என கூறப்படுகிறது. தற்போதைய தேர்தல் முடிவுகள், 2021 ஜனாதிபதி தேர்தலின் சூழலை யே பிரதிபலிக்கின்றன. அப்போது இடதுசாரி வேட்பாளரான பெட்ரோ காஸ்டிலோ (Pedro Castillo) 50.12 சதவிகித வாக்குகளைப் பெற்று, புஜி மோரியை (49.87%) வீழ்த்தி வெற்றி பெற்றார்.

அரசியல் உறுதியின்மை

பதவி விலகல்கள், அரசியல் குற்றச்சாட்டுகள், நாடாளுமன்றத் தால் தகுதி நீக்கம் செய்யப்படுவது, இடைக்கால ஆட்சி மாற்றங்கள் கார ணமாக கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அந்நாட்டில் எட்டு ஜனாதிபதி கள் மாறியுள்ளனர். 2016 இல் ஒல்லா ந்தா ஹுமலா (Ollanta Humala) ஜனாதிபதியாக இருந்து தனது பதவிக்காலத்தை முடித்த பிறகு, தேர்ந் தெடுக்கப்பட்ட எந்தவொரு ஜனாதி பதியும் தங்களது முழு பதவிக்கா லத்தையும் நிறைவு செய்யவில்லை. தற்போது பெரு நாட்டின் இறுதிச் சுற்றில் வெற்றி பெறுபவர் ஜூலை 28 அன்று ஜனாதிபதியாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகிலேயே மூன்றாவது பெரிய காப்பர் உற்பத்தியாளராக பெரு நாடு உள்ளது. மேலும் தங்கம், வெள்ளி போன்ற பிற தாதுக்களின் முக்கிய உற்பத்தியாளராகவும் அந்நாடு திகழ்கிறது. ‘இண்டஸ்ட்ரியல் இன்ஃபோ ரிசோர்சஸ்’ (Industrial Info Resou rces) தரவுகளின்படி, பெரு முழுவதும் 53.80 பில்லியன் டாலர்கள் மதிப்பி லான 720 சுரங்கத் திட்டங்கள் உள்ளன. இதனால் இந்த தேர்தல் பெருவை சுரண்டுபவர்கள், சூறையாடும் ஏகாதி பத்திய நாடுகளின் ஆதரவாளர்க ளுக்கும் அதை எதிர்க்கும் மக்கள் நலனை முன்னிறுத்தும் இடதுசாரி களுக்கும் இடையிலான போராட்டக் களமாக மாறியுள்ளது. குறிப்பாக வேட்பாளர் சான்செஸ் சுரங்கத்திற்கு வரிகள் விதிக்கவும், ராயல்டி தொகையை அதிகரிக்கவும், எதிர்கால ஒப்பந்தக் கட்டமைப்புகளை மறுஆய்வு செய்யவும் முன்மொ ழிந்துள்ளார். அவர் பாரம்பரிய மற்றும் முறைசாரா சுரங்கத் தொழிலாளர்க ளின் ஆதரவை பெற்றுள்ளார். இத் தொழிலாளர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதோடு, அரசு சலுகைகள் பொருளாதார வாய்ப்புகளையும் வழங்குவதாக வாக்குறுதியளித்துள் ளார்.