தீக்கதிர் உலக செய்திகள்
13 Oct 2026, 11:13 pm

தீக்கதிர் உலக செய்திகள்

பிரான்ஸ் பல்பொருள் அங்காடிகளில் குளிரூட்டிகளை ஹேக் செய்து தீ வைப்பு

பிரான்ஸ் நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான பல்பொருள் அங்காடிகளில் ‘ஸ்மார்ட்’ குளிர்சாதனப் பெட்டிகளை ஹேக் செய்து, அவற்றின் வெப்பநிலையை 50 டிகிரி செல்சியஸ் வரை ஹேக்கர்கள் உயர்த்தியுள்ளனர். இதனால் குளிர்பதனப் பெட்டிகளில் தீப்பற்றி எரிந்ததோடு, டன் கணக்கிலான உணவுப் பொருட்கள் வீணாகியுள்ளன. இந்த “மிகப்பெரிய அளவிலான” இணையவழித் தாக்குதல் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உணவுப்பொருட்கள் அழிந்ததுடன் பல இடங்களில் தீ விபத்துகளும் ஏற்பட்டுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற 2,627 கோடி கொடுத்த மஸ்க்

அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. ஈரான்,உக்ரைன் மீதான போர், வேலை

யின்மை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சனைகளின் காரணமாக அமெரிக்க மக்களிடையே டிரம்ப் மீதுஅதிருப்திஎழுந்துள்ளது. இத்தேர்தலில் தனதுபெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்ளக்குடியரசுக் கட்சி போராடிவருகிறது. இந்நிலையில் அக்கட்சியினரின்ஆட்சியை தக்க வைக்க கடந்த ஜூலைமாதம் முதல் அக்கட்சியின் அமைப்புகளுக்கு எலான் மஸ்க்சு மார் 2,627 கோடிரூபாய் வரை புதிதாக நிதி வழங்கியுள்ளார். ஜனாதிபதி தேர்தலின் போது டிரம்ப்புக்கு ஆதரவாக பல நூறுகோடிகள் செலவு செய்தது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியா - ஏமன் பேச்சுவார்த்தைக்கு உதவும் ஈரான்

சவுதி அரேபியா-ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி அமைப்புக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு உதவ தயாராக இருப்பதாக ஈரானின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல்களும் போரும் நீடிப்பதை ஈரான் விரும்பவில்லை. இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையை எளிதாக்க எங்களின் நல்லுறவையும் மத்தியஸ்த உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாக நாங்கள்பலமுறை வெளிப்படுத்தியுள்ளோம். தற்போதைய சூழ்நிலையானது பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரானுக்கு சீனா, ரஷ்யா உதவுவதாக நான் நம்பவில்லை- டிரம்ப்

சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஈரானுக்கு உதவி செய்வதாகத் தான் நம்பவில்லை என்றும், ஈரானுக்கு உதவினால் அந்தஇரு நாடுகளுக்கும் “மிகப்பெரிய இழப்பு ஏற்படும்” என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் தனது ‘ட்ரூத்சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “ஈரானுக்குச் சீனாவும்ரஷ்யாவும் உதவி செய்வதாகஎன் எதிரிகளும் விமர்சகர்களும்கூறுவதைப் பார்த்தேன். ஒருவேளை அவர்கள் உதவினால் கூட அது மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும்; ஆனால் அவர்கள் ஈரானுக்கு உதவுவதாக நான் சிறிதும் நம்பவில்லை. உதவி செய்வதன் மூலம்அவர்கள் இழப்பதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. மேலும் அப்படி அவர்கள் உதவினால், அதை நாங்கள் மிகவிரைவாகக் கண்டறிந்து விடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆயுத கப்பல் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைனின் மைக்கோலைவ் துறைமுக நகருக்கு ராணுவத் தளவாடங்கள் மற்றும் இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இத்தாக்குதலை ரஷ்ய பாது

காப்பு அமைச்சகம் உறுதிசெய்துள்ளது. ஆயுத கப்பல் மீது மட்டுமல்லாமல் உக்ரைனின் ராணுவத்தலங்கள், ஏவுகணைகள் மற்றும் நீண்ட தூரம்பறக்கும் ஆளில்லா விமானங்கள் தயாரிக்கும் இடம்; உக்ரைன் ராணுவத்திற்குத் ஆயுதங்கள் எடுத்துச் செல்லும் ரயில் பெட்டிகளைப் பழுதுபார்க்கும் மையம் உள்ளிட்ட சில தளவாட மையங்களையும் குண்டு வீசி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.