தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

yesterday
தீக்கதிர்  உலக செய்திகள்

தீக்கதிர் உலக செய்திகள்

சமூக ஊடக தடை : புதிய மசோதா தாக்கல்

குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் வகையில் புதிய திருத்தப்பட்ட மசோதாவை பிரான்ஸ் தாக்கல் செய்துள்ளது. முன்னதாக தயாரிக்கப்பட்ட மசோதாவை பிரான்ஸ் நாடாளுமன்றம் ரத்து செய்தது. தீவிரமான தொழில்நுட்ப திருத்தம் பணிகளுக்குப் பிறகு, அரசு இந்தபுதிய வரைவு மசோதா குறித்து ஐரோப்பிய ஆணையத்திற்கு முறைப்படி அறிவிக்கிறது. இந்த புதிய வரைவு மசோதா ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்களுக்கு உட்பட்டு இருப்பதை உறுதிசெய்வதற்கு இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு முக்கியமான படியாகும் என அந்நாட்டு ஜனாதிபதி மக்ரோன் கூறியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய திட்டம் : இலங்கை அரசு நடவடிக்கை

மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்த, பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் 10 லட்சம் இலங்கை ரூபாய் வரை நிதியுதவி வழங்கும் புதிய திட்டத்தை இலங்கை அரசு செயல்படுத்த உள்ளது. இது ஒரு முன்னோடித் திட்டம் எனவும் செப்டம்பர் மாதம் மூன்றாம் வாரம் தொடங்கப்படும் எனவும்

அறிவிக்கப்பட்டுள்ளது. பிறகு 2027 முதல் இத்திட்டம் நாடு முழுவதும் விரிவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்

ளது. சிறப்புத் தேவைகளைக் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற சுகாதார வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதும், அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வீடுகளில் மாற்றங்களைச் செய்ய உதவியாக இருப்பதுமே இந்த

திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

சவூதி அரேபியா வேண்டுகோள் : கூட்டத்தை ஒத்திவைத்த ஈரான்

திங்கள்கிழமை ஓமனில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் வளைகுடா நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கு இடையேயான சந்திப்பு நடைபெற இருந்தது. இந்நிலையில் சவூதி அரேபியாவின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. சவூதி அரே

பியா மற்றும் ஏமனின் ஹவுதிகளுக்கு இடையில் தற்போது மோதல் தீவிரமடைந்து வருவதன் காரணமாகவே இக்

கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக வெளியாகும் தகவல் தவறானவை எனவும் ஈரான் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

சீனாவிடம் உதவி கேட்கும் நேபாளம்

நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் சீனாவுடனான முக்கிய வர்த்தகப் பாதையான ‘சியாப்ருபேசி-ரசுவாகதி’ சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது. இந்த சாலையை சீரமைக்க நேபாளம் சீனாவின் உதவியைக் கோரியுள்ளது. இரு நாட்டின் எல்லையையும் கடக்குமிடத்துடன் இந்த சாலை

இணைகின்றது. இது சுமார் 16 கி.மீ நீளமுடையது. ஏற்கெனவே இந்தச் சாலை, 6.5 பில்லியன் நேபாள ரூபாய் மதிப்பிலான சீன நிதி உதவித் திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட்டு வந்தது. அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் சாலையின் பெரும் பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டு, கடுமையாகச் சேதமடைந்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய வர்த்தகத் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாலியில் பயங்கரவாதிகளுக்கு உக்ரைன் பயிற்சி தருகிறது

மாலியில் அரசுப் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் பயங்கரவாத குழுக்களுக்கு பயிற்சி மற்றும் உதவிகளை வழங்க அந்நாட்டுக்கு ராணுவ நிபுணர்களை உக்ரைன் அனுப்பியுள்ளது என அமெரிக்க செய்தி நிறுவனம் ‘சிஎன்என்’ தெரிவித்துள்ளது. ‘அசாவாத் விடுதலை முன்னணி’ (FLA) என்ற துவாரெக் (Tuareg) பிரிவினைவாதக் குழுவுடன் உக்ரைன் ராணுவத்தின் 15 டிரோன் நிபுணர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் நேரடியாக போரில் பங்கேற்பதை விட, பயிற்சிகள்,உதவிகள் மற்றும் தொலைதூர வழிகாட்டல்களை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

தொழிற்சங்கங்களை முடக்க ரூ.16,280 கோடி செலவு செய்த கார்ப்பரேட்டுகள்

வாஷிங்டன்,செப்.14-அமெரிக்க தொழிலாளர்கள் அமைப்பாகத் திரள்வதையும் தொழிற்சங்கங்கள் அமைப்பதை தடுக்கவும் கடந்த ஆண்டு 16,280 கோடி ரூபாய் வரை ($1.7 பில்லியன்) கார்ப்பரேட் நிறுவனங்கள் செலவிட்டுள்ளதாக அதிர்ச்சிதரும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க தொழிலாளர் கொள்கை மையம் (EPI) , தொழிலாளர் துறை ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, ‘லேபர்லேப்’ (LaborLab) என்ற அமைப்புவெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் இந்த விவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

தொழிற்சங்கங்களைத் தடுக்கும்நுட்பங்களை வகுத்துத் தரும் சட்ட நிறுவனங்களுக்கு 14,365 கோடி ரூபாயும் சிறப்பு ஆலோசனைகளுக்காக மேலும்1,915 கோடி ரூபாயும் பெருநிறுவனங்கள் செலவிட்டுள்ளன. உண்மையில் இந்த எண்ணிக்கை குறைவானது தான். உண்மையான தொகை இதனை விட அதிகமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.அமெரிக்காவில் தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்களையும் செலவு தொகையையும் தொழிலாளர் துறைக்கு அளிக்கப்படும் அதிகாரப்பூர்வப் படிவங்களில் குறிப்பிட வேண்டும். ஆனால் 57 சதவீதமான தொழிற்சங்கஎதிர்ப்பு அமைப்புகள் தங்களது செலவுகளை குறிப்பிடாமல் மறைத்து விடுகின்றன.

1959-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட லேண்ட்ரம்-கிரிஃபின் (Landrum-Griffin) சட்டத்தின்படி, தொழிற்சங்கங்கள் தங்களின் சிறு செலவைக் கூட வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஆனால், பெருநிறுவனங்களுக்கும்அவர்களது ஆலோசகர்களுக்கும் இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் இல்லை. இப்படி பாரபட்சமான சட்டங்களே தொழிற்சங்கங்களுக்கு எதிராக செலவிடப்படும் உண்மை தொகை மறைக்கப்படுவதற்கு காரணம்.தொழிற்சங்க எதிர்ப்பு அமைப்புகள் முதலாளிகளுக்கு “ஆலோசனை” என்ற பெயரில் தொழிலாளர் சட்டங்களைமீறுவது குறித்தும், சட்ட மீறல்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளை எப்படி உடைக்கலாம் அல்லது தண்டனையின் அளவை குறைக்கலாம் என நுட்பமாக வழிகாட்டுகின்றன. இத்தகையமறைமுக ஆலோசனைக் கட்டணங்களும் கணக்கில் வருவதே இல்லை.

அமேசான் நிறுவனம் தொழிற்சங்கத்திற்கும் தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்கவும் 2025 இல் மட்டும் சுமார் 2,551 கோடி செலவு செய்து தொழிலாளர்களின் நலனுக்கு எதிராகஅதிகம் செலவு செய்த முதல் நிறுவனமாக உள்ளது. நியூயார்க்கின் ஸ்டேட்டன் தீவில் உள்ள தனது சேமிப்புக் கிடங்கு தொழிலாளர்களுக்கு எதிராககடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.தொழிற்சங்கங்களுக்கு எதிராக வழக்கு நடத்தியதன் மூலமாக ‘லிட்லர் மெண்டல்சன்’ நிறுவனம் ரூ.561 கோடிரூபாய், ஆக்லெட்ரீ-டீக்கின்ஸ் நிறுவனம் ரூ.659 கோடி , ஜாக்சன் லூயிஸ் நிறுவனம் ரூ.475 கோடியும் வருவாயாகஈட்டியுள்ளன.

தொழிற்சங்கங்கள் அமைக்கப்படுவதை தாமதப்படுத்த பெருநிறுவனங்கள் பயன்படுத்தும் தந்திரங்கள் என்ன? முதலாளிகள் தொழிற்சங்கத்தைமுடக்க எவ்வளவு பணம் செலவழிக்கிறார்கள்?, அந்தப் பணத்தைக் கொண்டு தொழிலாளர்களின் ஊதியத்தை எந்தளவுக்கு உயர்த்தியிருக்க முடியும்? முதலாளிகளின் வழக்குகளுக்கு எதிராக எப்படி தொழிலாளர்கள் திட்டம் வகுப்பது?என பெருநிறுவனங்களின் ஒடுக்குமுறையை எதிர்கொள்ள லேபர்லேப் அமைப்பு தனது இணையதளத்தில் (www.laborlab.us) தொழிலாளர்களுக்காகச் சிறப்பு வழிகட்டுதல்களையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.