தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

22 Aug 2026, 8:59 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

ஐரோப்பியக் காட்டுத்தீ : குண்டுகள் வெடிக்கும் அபாயம்

ஐரோப்பா முழுவதும் பற்றி எரியும் காட்டுத் தீ, முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது புதைக்கப்பட்டு, பூமிக்கு அடியில் மறைந்திருக்கும் துருப்பிடித்த குண்டுகள் மற்றும் கண்ணி வெடிகள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. கடுமையான வெப்பத்தின் காரணமாக சில குண்டுகள் வெடித்துள்ளன. பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இத்தகைய குண்டு வெடிப்புகள் பதிவாகியுள்ளன. காட்டுத்தீ பரவி வரும் பகுதியில் புதைந்துள்ள வெடிகுண்டுகளைக் கருத்தில் கொண்டு அவசரக்கால சேவைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

75 நாடுகளுக்கு விசா தடை : ரத்து செய்த அமெ. நீதிமன்றம்

அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேற விரும்பும் ஆப்கானிஸ்தான், பிரேசில், எகிப்து, ஈரான், ஈராக், நைஜீரியா, சோமாலியா உட்பட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விசா தடையை அமெரிக்க நீதிமன்ற நீதிபதி ரத்து செய்துள்ளார். இது டிரம்பின் இனவெறி பிரச்சார நடவடிக்கைகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொள்கை சட்டத்திற்குப் புறம்பானது. வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ இந்த நடவடிக்கையை எடுத்ததன் மூலம் தனது சட்டப்பூர்வ அதிகாரத்தை மீறிவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தகுதியான விண்ணப்பத்தாரரை நாட்டின் அடிப்படையில் நிராகரிப்பது தவறு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா - கனடா வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வி

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து, சனிக்கிழமை முதல் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகளை எதிர்த்து கனடாவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று கனடா பிரதமர் மார்க் கர்னி தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை கனடா நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

உக்ரைன் தாக்குதலில் ரஷ்ய குழந்தைகள் கொலை

ரஷ்யாவின் கிராஸ்னோடார் பிராந்தியத்தில் சனிக்கிழமை உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட 3 நபர்கள் கொலையாகியுள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை அந்நகர ஆளுநர் வெனியாமின் கொன்றாத்யேவ் உறுதிசெய்துள்ளார். இத்தாக்குதலில் வீடுகள் உள்ளிட்ட பொதுமக்களின் சொத்துக்களும் மக்கள் பயன்படுத்தும் அரசு பொதுத்துறை நிறுவனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளது. கருங்கடல் மற்றும் அஸோவ் கடல் பகுதிக்கு மேல் பறந்த 457 உக்ரைனின் டிரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

துருக்கி ஜனாதிபதிக்கு எதிராக இஸ்ரேல்

இனப்படுகொலை குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை ரெட் நோட்டீஸ் மூலம் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக துருக்கி அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, துருக்கி ஜனாதிபதி எர்டோகனை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அநாகரீகமாக விமர்சித்துள்ளது. சிரியாவின் விமானப் படைத்தளம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் அமெரிக்காவின் இவ்விரு நட்பு நாடுகளான நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது இந்த மோதல்கள் எழுந்துள்ளன.

அமெரிக்கா தனது ராணுவத் தோல்விகளை மறைக்க பொருளாதாரப் போர் நடத்துகிறது : ஈரான் குற்றச்சாட்டு

டெஹ்ரான்,ஆக.22-அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈரான் மீது புதிய பொருளாதாரப் போர் துவங்க உள்ளதாக மிரட்டல் விடுத்திருந்தார்.இது ஒரு “பொருளாதார பயங்கரவாதம்” என்று விமர்சித்துள்ள ஈரான், அமெரிக்க அரசின் மனிதநேயமற்ற,சட்டவிரோத மற்றும் ஆதிக்க தன்மையைத் தான் இந்த போக்கு காட்டுகிறது என கடுமையாக சாடியுள்ளது.ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் “ஒவ்வொரு ஈரான் குடிமகனின் அடிப்படை மனித உரிமைகளையும்குறிவைக்கின்றன. இவை பொருளாதார பயங்கரவாதம் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம். இந்தத்தடைகளுக்கு உத்தரவு போடுகின்ற மற்றும் அதனை நடைமுறைப் படுத்துபவர்கள் இத்தகைய கொடூரமான குற்றங்களை செய்தவர்களேஆவார்கள். அவர்கள் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கஈரான் மீது அமெரிக்கா எடுத்த ராணுவ நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளன. இதைத் தொடர்ந்து, ஈரான் மீதுபொருளாதாரப் போர் மற்றும் அந்நாட்டை தனிமைப் படுத்த வேண்டும் என டிரம்ப் அழைப்பு விடுத்தார். எந்தவொருநாட்டிற்கும் எதிராக நடத்தப்படாத மிகப்பெரிய பொருளாதார நடவடிக்கையை ஈரான் மீது தொடங்கப் போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.“ஈரானை தனிமைப்படுத்தவும் தோற்கடிக்கவும் உலகின் அனைத்து நாடுகளும் பிராந்தியத்தில் உள்ள நட்புநாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து நிற்க வேண்டும்” என்றும் டிரம்ப் கேட்டுக் கொண்டார். “ஈரானுக்கு நிதிநிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், விமான நிலையங்கள் அல்லது அரசு அமைப்புகள் மூலம் எந்தவொருஉதவியையும் கொடுக்கக்கூடாது. அப்படி கொடுத்தால் உதவி அளிக்கும் நாடுகள் கடுமையான பொருளாதாரதடைகளை சந்திக்க நேரிடும்” என்றும் எச்சரித்தார்.

அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், அனைத்து நாடுகளும் ஈரானுடனான மீதமுள்ள அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் பொருளாதார அழிவை சந்திக்க நேரிடும் என்றும் தன் பங்கிற்கு மிரட்டல் விடுத்தார்.இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டாக ஈரான் மீது நடத்திய ராணுவத் தாக்குதலில் எந்தவொரு இலக்கையும் அடையத் தவறிய பிறகே அமெரிக்கா இந்தப் பொருளாதாரப் போரைக் கையில் எடுத்துள்ளது என்று ஈரானின் வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இது ஒரு தோல்வியடைந்த கொள்கை என்று குறிப்பிட்ட ஈரான் வெளியுறவு அமைச்சகம், இது மீண்டும் தோற்கும், ஈரானின் சுதந்திரம், கண்ணியம் மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஈரானிய மக்களின் உறுதியில் இது சிறிய மாற்றத்தைக் கூட ஏற்படுத்தாது என்றும் குறிப்பிட்டுள்ளது. ராணுவத் தாக்குதல் மற்றும் பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்தும் அமெரிக்காவின் இந்த மோசமான நடவடிக்கைகளுக்கு எதிராக ஐ.நா மற்றும் பிறநாடுகள் குரல் கொடுக்க வேண்டும் என்று ஈரான் கேட்டுக்கொண்டது. அமெரிக்காவின் இந்தப்போக்கு சர்வதேச விதிகள் மற்றும் அமைப்புகளின் நம்பகத்தன்மையைச் சீர்குலைப்பதாகக் குற்றம் சாட்டியது.

அமெரிக்காவின் பொருளாதாரப் போர் அச்சுறுத்தல்களும், எங்கள் நாட்டின் மீது விதித்துள்ள தடைகளும் “நிச்சயமாகத் தோற்கும்” என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

மேலும், டிரம்ப்பின் பொருளாதாரத் தோல்விகள் அமெரிக்காவில் தோல்வி யடைந்துள்ளன. அந்நாட்டின் கடன் வர

லாறு காணாத அளவுக்கு அதிகரித் துள்ளது. வட்டிச் செலவுகள் அதிகரித்துள்ளது. அந்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே எங்கள் மீது பொருளாதாரப் போரை நடத்துகிறார்கள். ஈரானில் அடைந்த ராணுவத் தோல்விகளில் இருந்துடிரம்ப் நிர்வாகம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தோல்வியடைந்த கொள்கைகளை மீண்டும் இரட்டிப்பாக அமலாக்குவது மேலும் அவர்களுக்கு தோல்வியையும் ஈரானியர்களின்பகையையுமே தரும்.ஈரானுக்கு எதிரான இந்த “பொருளாதார பயங்கரவாதம்” உலகப் பொருளாதாரத்தையும் அச்சுறுத்தும் என்று அராக்சி எச்சரித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.