தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

26 May 2026, 9:28 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

எபோலா தாக்கத்தால் காங்கோவில் 220 பேர் பலி

காங்கோவில் மிக வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்று காரணமாக, இதுவரை 220 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.தற்போதுவரை 101 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 900-க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் மரணம் உள்ளிட்ட பாதிப்பின் உண்மை நிலவரம் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காங்கோவின் அண்டை நாடான உகாண்டாவில் எபோலா பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

லெபனான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் உத்தரவு

ஹிஸ்புல்லா அமைப்பை அழிக்க வேண்டும் என்ற திட்டத்தை காரணமாக வைத்து லெபனான் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு மிரட்டல் விடுத்துள்ளார். இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே கடந்த ஏப்ரல் மாதம் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. தற்போதும் ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. ஆனால் ஹிஸ்புல்லா அமைப்பை அழிப்பதாக கூறி மக்கள் பகுதியில் குண்டுவீசுவது அந்நாட்டு நிலங்களை ஆக்கிரமிக்கும் வேலையையும் இஸ்ரேல் ராணுவம் செய்கிறது.

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் தென்கொரியா

அணுசக்தியால் இயங்கும் தனது சொந்த நீர்மூழ்கிக் கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க உள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டு பிற்பாதியில் முதல் கப்பல் அதிகாரப்பூர்வமாகப் பயன்பாட்டுக்கு வரும் என்று அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அன் கியூ-பேக் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். வடகொரியா உடனான மோதல் பின்னணியில் தனது ராணுவ பலத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு பல ஆண்டு முயற்சிக்கு பிறகு தற்போது அமெரிக்காவின் அனுமதியுடன் இந்த திட்டத்தில் தென்கொரியா இறங்கியுள்ளது.

தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷ்ய ராணுவம்

உக்ரைன் மீது 100-க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமையன்று, தூதரக அதிகாரிகள் உட்பட வெளிநாட்டு குடிமக்கள் அனைவரும் உக்ரைன் தலைநகர் கீவ்-விலிருந்து விரைவில் வெளியேறுமாறு ரஷ்யா எச்சரித்தது. ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், போலந்து ஆகிய நாடுகளின் தூதரக அதிகாரிகள் வெளியேறப் போவதில்லை என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன்-ரஷ்யப் போர் தொடரும் நிலையில் ரஷ்யா தற்போது தீவிர தாக்குதலில் இறங்கியுள்ளது.

காசா பிரச்சனை : இஸ்ரேலுக்கு கனடா கடும் கண்டனம்

காசாவிற்கு நிவாரணப்பொருட்கள் கொண்டு சென்ற உதவிக்கப்பலில் இருந்த சமூக ஆர்வலர்களை இஸ்ரேல் “மிக மோசமாக நடத்தியதை” கனடா பிரதமர் மார்க் கார்னி கடுமையாகக் கண்டித்துள்ளார். இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் உடனான தொலைபேசி உரையாடலின் போது அவர் இந்த கண்டனத்தை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சர்வதேசக் கடல் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் சமூக ஆர்வலர்களை கடத்தி அடித்து சித்ரவதை செய்ததுடன் பாலியல் வன்கொடுமைகளையும் செய்தது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதிகளுக்கு எதிராக சஹேல் நாடுகளின் அதிரடி தாக்குதல்கள்

பமாகோ, மே 26- மாலியின் தலைநகர் பமாகோ (Bamako) பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவிப்பதாக மேற்கத்திய ஊட கங்கள் தொடர்ந்து பரப்பி வரும் பிரச்சா ரம், உண்மைக்கு மாறானது என்பது தற்போதைய கள நிலவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. மாலியில் பிரான்ஸ் நாட்டின் ஆதிக் கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்ட அரசு, கடந்த 2020 இல் மக்கள் ஆதரவுடன் நடந்த ராணுவப் புரட்சியின் மூலம் கவிழ்க்கப்பட்டது. அதன் பின் அமைந்த புதிய ராணுவ அரசு, 2022 இல் பிரான்ஸ் ராணுவத்தை நாட்டிலிருந்து முழுமையாக வெளியேற்றியது. இதனால் ஆத்திரமடைந்த பிரான்ஸ், மாலியின் இறையாண்மை க்கு எதிராகச் செயல்படும் பயங்கரவா தக் குழுக்களுக்கு வான்வழியாக ஆயு தங்களை வழங்கி, ஒரு ‘நிழல் யுத்தத் தை’ (Proxy War) நடத்தி வருவதாக மாலி அரசு குற்றம் சாட்டி வருகிறது. அங் குள்ள பிரிவினைவாதிகளுக்கு உக்ரை னும் டிரோன் (Drone) பயிற்சிகளையும், உளவுத் தகவல்களையும் வழங்கி வருவதை ஒப்புக்கொண்டுள்ளது.

ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரம்

கடந்த மே 21 அன்று பிபிசி (BBC), தி கார்டியன், பிரான்சின் ‘லெ மாண்டே’ ஆகிய ஊடகங்கள், அல்-கொய்தாவு டன் தொடர்புடைய ‘ஜேஎன்ஐஎம்’ (JNIM) மற்றும் டிவாரெக் பயங்கரவாத அமை ப்புகள் இணைந்து மாலி தலைநகர் பமாகோவை முற்றுகையிட்டு அந்நக ருக்கு செல்லும் எரிபொருள், உணவு கள் அனைத்தையும் முடக்கி பொரு ளாதார முற்றுகையை செய்துள்ளதா கச் செய்திகளை வெளியிட்டன. ஆனால், உண்மை என்ன வென்றால் நிலப்பரப்பால் சூழப்பட்ட மாலி , எரிபொருளுக்கு அண்டை நாட்டுத் துறைமுகங்களையே நம்பி யுள்ளது. அண்டை நாடுகளின் துறைமுகங்களுக்கு எரிபொருட்கள் கொண்டு வரப்பட்டு அவை சாலை வழியாக மாலி கொண்டுவரப்படும். இந்த முக்கியச் சாலைகளில் எந்தப் பகுதியையும் பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. ஊடகங்கள் ‘முற்றுகை’ என்று செய்தி வெளியிட்ட அடுத்த நாளே, மாலி ராணுவம் மற்றும் ரஷ்யாவின் ‘ஆப்பி ரிக்கா கார்ப்ஸ்’ பாதுகாப்போடு 700 எரிபொருள் டாங்கர்கள் பாதுகாப்பாகத் தலைநகருக்குள் வந்தடைந்தன.

மக்கள் சந்திக்கும் சவால்கள்

பயங்கரவாதிகளால் சாலைகளைக் கைப்பற்ற முடியாவிட்டாலும், அவர்கள் அவ்வப்போது பொதுமக்களின் வாக னங்களை தாக்கி பின் தப்பித்துச் செல்லும் (Hit-and-run) கொரில்லா தாக்குதல்களை நடத்துகின்றனர். இதனால், அத்தியாவசியப் பொருட்களுக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்க வேண்டியுள்ளது. இதன் காரணமாகப் போக்குவரத்துச் செலவு அதிகரித்து, நாட்டின் வடக்குப் பகுதியில் அரிசி, மாவு, எண்ணெய் போன்ற பொ ருட்களின் விலை 25% முதல் 71% வரை உயர்ந்துள்ளது. தலைநகர் பமாகோவிலும் சில பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு மக்களிடையே சோர்வை ஏற் படுத்தியிருந்தாலும், இந்தத் தாக்குதல்க ளுக்குப் பின்னால் வெளிநாட்டுச் சக்தி கள் இருப்பதை மக்கள் உணர்ந்துள்ள தால், அந்நாட்டு ராணுவ கர்னல் அசிமி கொய்வ்டா தலைமையிலான ராணுவ அரசுக்குத் தங்களின் முழு ஆதரவைத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

எதிர்த் தாக்குதல்

பிரான்சின் அச்சுறுத்தலை எதிர் கொள்ள மாலி, நைஜர், புர்கினா பாசோ ஆகிய மூன்று அண்டை நாடுகளும் இணைந்து ‘சஹேல் நாடுகளின் கூட்டமைப்பு’ (AES) என்ற 15,000 வீரர்கள் உள்ள ராணுவக் கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டுப்படை பயங்கரவாதிகள் மீது எதிர்த் தாக்குதல்களை நடத்தி மேனகா நகரம், நைஜர் எல்லைப் பகுதியிலுள்ள லாபெசங்கா உள்ளிட்ட நகரங்களை மீட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.