தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

17 Jul 2026, 7:52 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

மீண்டும் தீவிரமடையும் எபோலா : 2,100-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 2,100 ஐ கடந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வரலாற்றில் மிக வேகமாகப் பரவும் எபோலா தொற்றுநோயாக இது கருதப்படுகிறது. குறிப்பாக நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், நோய்த்தொற்றின் பரவல் வேகத்தை ஒப்பிடும்போது, மீட்புப் பணிகள் தொய்வாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் அதானோம் கவலை தெரிவித்துள்ளார்.

230 கோடி மக்கள் பசியுடன் உறங்குகிறார்கள்’

உலகம் முழுவதும் சுமார் 230 கோடி மக்கள் ஒவ்வொரு இரவும் பசியுடன் உறங்குவதாக ஐ.நா துணைப் பொதுச்செயலாளர் அமினா முகமது தெரிவித்துள்ளார். மேலும் உலகெங்கிலும் பத்தில் ஒருவர் இன்றும் வறுமையில் வாழ்வதாகவும், 200 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான குடிநீர் வசதியின்றி தவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். புவிசார் அரசியல் பதற்றங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை, கால நிலை மாற்றம், உணவுப் பாதுகாப்புச் சிக்கல்கள் மற்றும் அதிகரித்து வரும் சமத்துவமின்மை போன்றவை நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் பெரும் தடையாக உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் : எரிசக்தி முகமை எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்து மீண்டும் அதிகரிக்கப்படாவிட்டால், அது உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று எரிசக்தி முகமை எச்சரித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் வரலாற்றிலேயே மிக மோசமான எரிசக்தித் தடையை ஏற்படுத்தியுள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பே சீனா ஒரு பில்லியன் பேரலகளுக்கும் மேலாக எண்ணெய்யைச் சேமித்து வைத்திருந்தது. மேலும் மின்சார வாகனங்கள் மற்றும் பொதுப்போக்கு வரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சீனா தனது எண்ணெய் நுகர்வைக் குறைத்து பெரும் நெருக்கடியை தவிர்த்துள்ளது.

காசா மருத்துவருக்கு ஆதரவாக பிரான்ஸ் மருத்துவர்கள் போராட்டம்

காசா மருத்துவருக்கு ஆதரவாக பிரான்ஸ் மருத்துவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். 2024 டிசம்பர் மாதம் முதல் இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காசாவின் கமால் அத்வான் மருத்துவ மனை இயக்குநர் டாக்டர் ஹுசாம் அபு சஃபியாவை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, பிரான்ஸ் தலை நகர் பாரிஸில் அந்நாட்டு மருத்துவர்கள், தொழிற்சங்கத்தினர் மற்றும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தை நல நிபுணரான டாக்டர் அபு சஃபியா, இஸ்ரேல் ராணுவத்தினரால் சிறையில் கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் காட்டுத் தீ : மோசமடையும் நிலைமை

ஸ்பெயினில் ஜூலை 15 அன்று காட்டுத்தீ ஏற்பட்டது. கடும் வெப்ப அலையின் காரணமாக இந்தத் தீ மிக வேகமாகப் பரவி வருகிறது. சுமார் 40°C வெப்பம், மிகக்குறைந்த ஈரப்பதம் மற்றும் திசை மாறி வீசும் காற்று போன்றவற்றால் தீயின் போக்கை கணிக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த ஆண்டு ஸ்பெயினில் மட்டும் சுமார் 4,00,000 ஹெக்டேர் நிலம் காட்டுத்தீயால் அழிந்துள்ளது. அடிக்கடி நிகழும் வெப்ப அலைகள், நீண்ட கால வறட்சி மற்றும் மாறிவரும் காலநிலை மாற்றங்கள் ஆகியவை ஐரோப்பாவில், குறிப்பாக தெற்கு ஐரோப்பாவில் காட்டுத்தீ அபாயத்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் வரி விதிப்பு அடாவடி: உலக வர்த்தக அமைப்பில் முறையிட பிரேசில் முடிவு

பிரேசிலியா, ஜூலை 17- பிரேசில் நாட்டுப் பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்துள் ளது. இதற்கு பிரேசில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் முன்னாள் ஜனாதிபதி போல்சானரோவின் குடும்பம் பிரேசிலுக்கு துரோகம் செய்கிறது. அமெ ரிக்காவுடன் இணைந்து நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு தீங்கு விளை விக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டி யுள்ளார். அமெரிக்கா விதித்துள்ள வரிக்குப் பதிலடியாக தனது ‘பொருளாதாரப் பரஸ்பர சட்டத்தை’ (Economic Reciprocity Law) உடனடியாகச் செயல் படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. அதேபோல, அமெரிக்காவின் இந்த தவறான அணுகுமுறையை உலக வர்த்தக அமைப்பின் (WTO) சர்ச்சைக ளைத் தீர்க்கும் பிரிவிடம் கொண்டு செல்லவும் பிரேசில் முடிவு செய்துள் ளது. ஜூலை 16 அன்று பிரேசில் ஜனாதி பதி அலுவலகம் வெளியிட்ட அதிகா ரப்பூர்வ அறிக்கையில், அமெரிக்கா வின் இந்த நடவடிக்கை இரு நாட்டு உறவுகளில் ஒரு வருந்தத்தக்க மைல்கல்” என்று கண்டனம் தெரிவிக் கப்பட்டுள்ளது. “எந்தவிதமான நியாய மான காரணமும் இன்றி பிரேசில் மீது இத்தகைய ஒருதலைப்பட்சமான நட வடிக்கைகளை அமெரிக்கா மேற் கொண்டுள்ளது. இது எங்களது தேசிய இறையாண்மையைப் பாதிக்கும் செயல் என்றும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பிரேசிலின் பதில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலு வலகம் (USTR), ‘பிரிவு 301’ இன் கீழ் மேற்கொண்ட விசாரணையில், பிரேசி லின் ‘பிக்ஸ்’ (Pix) டிஜிட்டல் பணப்பரி வர்த்தனை முறை, டிஜிட்டல் தளங்களுக் கான ஒழுங்குமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் கொள்கைகள் போன்றவை அமெரிக்க வர்த்தகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டி யிருந்தது. இக்குற்றச்சாட்டுகளைத் திட்ட வட்டமாக மறுத்துள்ள பிரேசில் அரசு, “நாங்கள் அமெரிக்கா எழுப்பிய சந்தே கங்களுக்குப் போதிய ஆதாரங்களுடன் விளக்கமளித்துள்ளோம். டிஜிட்டல் தளங்களை ஒழுங்குபடுத்துவது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாங்கள் உறு தியாக உள்ளோம் என குறிப்பிட் டுள்ளது. மேலும் அமேசான் காடுகள் அழிக் கப்படுவதை கட்டுப்படுத்த 2023 முதல் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2025 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய் யப்பட்ட பொருட்களில் 76% வரி விலக்கு பெற்றிருந்ததையும், அமெரிக்கப் பொ ருட்களுக்கான சராசரி வரி விகிதம் வெறும் 3.1% மட்டுமே என்பதையும் பிரேசில் அரசு சுட்டிக்காட்டியுள்ளது. உள்நாட்டு அரசியலும் விமர்சனமும் மேலும் தற்போதைய வர்த்தக நெருக்கடிக்கு முன்னால் ஜனாதிபதி போல்சானரோவின் குடும்பத்தினர் உடந்தையாக இருந்ததாக லூலா அரசு குற்றம் சாட்டியுள்ளது. செனட்டர் ஃபிளாவியோ போல்சானரோ மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எட்வர்டோ போல்சானரோ ஆகியோர் தங்களது அரசியல் லாபத்திற்காக அமெ ரிக்காவிடம் பிரேசிலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என தூண்டியுள்ளனர் என பிரேசில் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரிகளால் பாதிக்கப்பட்ட அந்நாட்டின் தொழில்துறைகளைப் பாதுகாக்க ‘பிரேசிலின் இறையாண்மைத் திட்டம்’ (Sovereign Brazil Plan) மூலம் அரசு நடவடிக்கை எடுக்கும். வர்த்தகத் தடைகள் மற்றும் அழுத்தங்களுக்கு அடி பணியாமல், தனது நாட்டின் இறை யாண்மையைப் பாதுகாப்பதில் உறுதி யாக இருப்பதாக பிரேசில் அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.