தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

yesterday
தீக்கதிர்  உலக செய்திகள்

கொலம்பியா தேர்தல் : வலதுசாரி வெற்றி

கொலம்பியா ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் ஆதவாளரான தீவிர வலதுசாரியும் கோடீஸ்வர வழக்கறிஞருமான, அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா வெற்றி பெற்றுள்ளார். முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் 99.99 சதவிகிதவாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், 49.66 சதவிகித வாக்குகளையும் முற்போக்கு வேட்பாளரான செபெடாவை 48.7 சதவிகித வாக்குகளையும் பெற்றனர். இருவருக்கும் இடையே 25,0,830 வாக்குகள் மட்டுமே வித்தியாசமாகும். எஸ்ப்ரியெல்லா அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நெருங்கிய கூட்டணியை உருவாக்கவும், சீனாவுடனான பொருளாதார உறவுகளைக் குறைக்கவும் தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1000 த்தை கடந்த எபோலா பாதிப்பு

காங்கோ நாட்டில் எபோலா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ளதாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காங்கோ சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 254 பேர் இத்தொற்றால் மரணமடைந்துள்ளனர். தற்போது தனிமைப்படுத்தப்பட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் 365 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 100 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்புகள் அதிகரிக்கும் நிலையில், கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிரிக்க மருத்துவமனைகள் எதிர்கொள்ளும் பெரும் சவால்

ஆப்பிரிக்க மருத்துவமனைகளில் ‘ஹாலோதேன்’ (Halothane) என்ற மலிவான மயக்க மருந்தின் இருப்பு 2027-க்குள் முழுமையாக தீரவுள்ளது. இது குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் நிலையில் அங்குள்ள மருத்துவமனைகள் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளன. உலகிலேயே கடைசியாக ஹாலோதேன் தயாரித்து வந்த இந்திய நிறுவனம் 2023-இல் மூடப்பட்டது. இதற்கு மாற்றாக உள்ள ‘செவோபுளுரேன்’ (Sevoflurane) என்ற புதிய மருந்து, ஹாலோதேனை விட 7 முதல் 10 மடங்கு வரை விலை அதிகம் என்பதால் ஆப்பிரிக்க மருத்துவமனைகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.

இலங்கையில் டெங்கு பரவல் : 44,000 மக்கள் பாதிப்பு

இலங்கையில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டெங்கு காய்ச்சல் மிக மோசமாகப் பரவி வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 44,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால் அங்குள்ள அரசு மருத்துவமனைகள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. திட்டமிடப்படாத நகரமயமாக்கல் மற்றும் கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட ‘தித்வா’ (Ditwah) புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆகியவை இந்த ஆண்டு நோய்த்தொற்று மோசமடையக் காரணம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர்களை ஏமாற்றிய நிறுவனம்

சிங்கப்பூரில் குளிரூட்டி பராமரிப்புச் சேவை நிறுவனமான ‘கேபிஏ இன்ஜினியரிங்’ நிறுவனம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இரண்டு மாதம் ஊதியம் தரவில்லை. இது தொடர்பாக இந்தியா மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திங்கள்கிழமையன்று அந்நாட்டின் மனிதவள அமைச்சகத்திற்கு புகார் கொடுக்க சென்றுள்ளனர். ஊதியப் பிரச்சனை தொடர்பாக நிறுவனத்திடமும் தங்களது மேலதிகாரிகளிடமும் முறையிட்ட போதிலும் ஊதியத்தை தரவில்லை எனவும் ஊதியம் வழங்காமல் தனது நிறுவனத்தை மூடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் அமைதிப் பேச்சுவார்த்தையை சீர்குலைக்க டிரம்ப் முயற்சி!

பெர்ன், ஜூன் 22 - ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஜூன் 18 அன்று போர் நிறுத்த த்தை தொடர்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை நடை பெற்றுக் கொண்டிருந்த போதே, “லெப னானில் உள்ள தனது ஆதரவு அமைப்பு களை ஈரான் உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில், கடந்த வாரம் நாங்கள் தாக்கியதை விட மிகக் கடுமையான தாக்குதலை ஈரான் மீது நடத்துவோம்!” என்று டிரம்ப் தனது ட்ரூத் தளத்தில் மிரட்டல் விடுத்தார். இதனால் அமெரிக்காவுடன் நடந்து வந்த பேச்சுவார்த்தையிலிருந்து ஈரான் தூதுக்குழு ஞாயிற்றுக்கிழமை வெளி யேறியது. ஈரான் குழுவினர் அமெரிக்கத் தரப்பிடம் நேரடியாகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாகவும், டிரம்ப்பின் மிரட்டலுக்கு “சரியான பதிலடி கொடுப்பதற்கான சூழ்நிலைகளை ஆராய்ந்து வருவதாகவும்” ஈரான் அரசின் ‘பிரஸ் டிவி’ தெரிவித்தது. ஈரானின் ராணுவமும் பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளது; அவர்கள் (அமெரிக்கா) பேசும் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட் டும், ஆனால் செயலில் காட்டுபவர்கள் நாங்கள் தான்,” என்று ஈரான் நாடாளு மன்ற சபாநாயகரும், தூதுக்குழுவின் தலைவருமான முகமது பாகர் காலிபாப் எச்சரித்தார். டிரம்பின் மிரட்டல் ஒருபுறம் இருந்தா லும், ஈரானின் எண்ணெய் மற்றும் அதன் தயாரிப்புகளின் ஏற்றுமதிக்கான தற்கா லிக பொருளாதாரத் தடை விலக்கு தொடர்பான வரைவு பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும், லெபனானில் போர் முடியும் வரை புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிற பிரிவுகள் அமல்படுத்தப்படாது என ஈரான் தூதுக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

பசியால் வாடும் மக்களுக்கு உணவை தராமல் போர் நடத்துகின்றனர் உலகத்தலைவர்களை கடுமையாக விமர்சித்த போப்

ரோம்,ஜூன் 22- உலகத் தலைவர்கள் பசியால் வாடுபவர்களுக்கு உணவ ளிப்பதற்குப் பதிலாக, போர்களை “வளர்த்து” (ஊட்டி) வருகிறார் கள் என்று போப் லியோ கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் உலகளவில் தரப்படும் முன்னுரிமை விஷயங்கள் மோசமாக மாறியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். ரோமில் உள்ள உலக உணவுத் திட்டத்தின் தலைமைய கத்திற்குச் சென்ற போப், மக்களுக்கு உணவளிப்பதை விட, போர்களுக்கு மிக எளிதாக தீனி போடப்படுகிறது என்று விமர்சித்தார். மேலும் இது உலக நாடுகளிடம் செயல்பாட்டு ரீதியாக உள்ள குறைபாடுகளை மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் தார்மீக முன்னுரிமைகளில் உள்ள அடிப்படை சம நிலையின்மையையும் பிரதிபலிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். உலக நாடுகள் ராணுவம், பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்நாட்டு உறுதித்தன்மை ஆகியவற்றிற்குத் தங்களது பணத்தை அதிகளவில் ஒதுக்குகின்றன. இதே சூழலில் சர்வதேச அளவில் கொடுக்கப்படும் முன்னுரிமைகளில் உலகில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகள் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்படுகிறது. உணவு பெறுவது என்பது ஒவ்வொரு மனிதனின் கண்ணி யத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு அடிப்படை மனித உரிமை.பசியைப் போக்குவது தேவையுடையவர்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், புவிசார் அரசியல் உறுதி யின்மைக்கான அடிப்படைக் காரணங்களையும் சரிசெய்கி றது. உணவுப் பாதுகாப்பு என்பது உலகளாவிய மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பின் மிக முக்கியமான அங்கம் என்றும் போப் லியோ கூறியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.