தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

yesterday
தீக்கதிர்  உலக செய்திகள்

வங்கதேசத்தில் பெருமழை: ஆபத்தில் 12 லட்சம் அகதிகள்

வங்கதேசத்தில் பெய்து வரும் மழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 50 க்கும் மேற் பட்டோர் உயிரிழந்துள் ளனர். சுமார் 35,000 மக் கள் வீடுகளை விட்டு வெளியேறி அரசு நிவா ரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு படகுகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் நிலச் சரிவு ஏற்பட்டு, 15 பேர் உயிரிழந்தனர். மரங்கள் வெட்டப் பட்டு, செங்குத்தான மலைப்பகுதிகளில் தற்காலிகக் குடி யிருப்புகளில் வசிக்கும் சுமார் 12 லட்சம் அகதிகள், தற்போது பெரும் ஆபத்தில் உள்ளனர்.

உலகப் பொருளாதாரத்திற்கு பேரழிவு ஏற்படும் : குட்டரெஸ்

மேற்கு ஆசிய நாடுகளில் மீண்டும் அதிகரித் துள்ள போர் பதற்றங்கள் குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அதிகபட்ச பொறுமையைக் கடைப் பிடிக்க வேண்டும், பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் செயல் களைத் தவிர்க்க வேண்டும் , நிலைமையை உடனடியாகத் தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். போர் மீண்டும் முழுவீச்சில் தொடங்கினால், அது உலகப் பொருளாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பிரிட்டனில் கடும் வெப்ப அலை: 2,700-க்கும் மேற்பட்டோர் பலி

பிரிட்டனில் மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலைகளால் 2,700-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மே 21 முதல் 29 வரை 550 பேரும், ஜூன் 18 முதல் 28 வரை சுமார் 2,200 பேரும் வெப்பம் தொடர்பான கார ணங்களால் உயிரிழந் துள்ளனர். இந்த ஆண்டு இங்கிலாந்தில் மே மாதத்தில் வெப்பநிலை 35.1 டிகிரி செல்ஸியஸாகவும், ஜூன் மாதத்தில் 37.7 டிகிரி செல்ஸிய ஸாகவும் பதிவாகியுள்ளது. ஆண்டின் தொடக்கத்தி லேயே இவ்வளவு அதிக வெப்பநிலை நிலவியது மிகவும் அசாதாரணமான நிலை என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை 3 சதவீதத்துக்கும் மேல் உயர்வு

அமெரிக்கா மீண்டும் ஈரானைத் தாக்க துவங்கியுள்ளது. ஈரானும் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை திங்கள்கிழமையன்று 3 சதவிகிதம் வரை உயர்ந்துள் ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் 2.67 டாலர்கள் உயர்ந்து பேரல் ஒன்றுக்கு 78.68 டாலராக வர்த்தகமா னது. மேற்கு டெக்சாஸ் இடை நிலை கச்சா எண்ணெய் (WTI crude) 2.48 டாலர்கள் உயர்ந்து, பேரல் ஒன்றுக்கு 73.89 டாலராக வர்த்தகமானது (3.47 சதவிகிதம் உயர்வு). குழாய் வழித்தடங்களை அதிகரிப்பதன் மூலம், 2028-ஆம் ஆண்டிற்குள் மேற்கு ஆசிய பகுதியில் இருந்து ஏற்றுமதி யாகும் கச்சா எண்ணெய்யில் 60 சதவீதத்துக்கும் மேல் ஹோர்முஸ் நீரிணையை சார்ந்திராமல் பெற முடியும்.

கத்தாரின் தந்தை கலீஃபா அல் தானி காலமானார்

கத்தாரின் தந்தை அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவர் பாலஸ்தீன மக்களின் மீது அதீத அக்கறை கொண்டிருந்த அரபு உலகத் தலைவர்க ளில் ஒருவராக அறி யப்பட்டவர். 2006-ஆம் ஆண்டு பாலஸ் தீனத் தேர்தலுக்குப் பிறகு இஸ்ரேல் காசா மீது கடுமையான தடைகளை விதித்தி ருந்தது. மேற்கு நாடுகளும், பிற அரபு நாடுகளும் காசா வைத் தனிமைப்படுத்தியிருந்த நிலையில், 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காசாவிற்குப் பயணம் மேற் கொண்டுஅந்த தடைகளை உடைத்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.