தீக்கதிர் உலக செய்திகள்
15 Jun 2026, 9:42 pm

எய்ட்ஸ் தொடர்பான மரணங்கள் : 9.5 சதவிகிதம் சரிவு

2025 இல் எய்ட்ஸ் தொடர்பான நோய்களால் உலகளவில் சுமார் 5,70,000 பேர் உயிரி ழந்துள்ளனர். 2024 உடன் ஒப்பிடுகையில் இது 9.5 சதவிகிதம் குறைவாகும் என ஐநா எய்ட்ஸ் அமைப்பு வருடாந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தற்போது உலகெங்கிலும் 4 கோடியே 9 லட்சம் மக்கள் எச்ஐவி உடன் வாழ்ந்து வருகின்றனர். 2010 உடன் ஒப்பிடுகையில் எய்ட்ஸ் தொடர்பான மரணங்கள் 57 சதவீதம் குறைந்துள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகள் இருப்பினும் எய்ட்ஸ் தொற்றை கட்டுப்படுத்த நிர்ணயிக்கப்பட்ட ஐ.நா அவையின் சுகாதார இலக்குகளை அடைவதற்கு தற்போதைய முன்னேற்ற வேகம் போதுமானதாக இல்லை என்று அவ்வமைப்பு எச்சரித்துள்ளது.

வாக்கு மறு எண்ணிக்கை : வலதுசாரி வேட்பாளர் நிராகரிப்பு

பெரு ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி மற்றும் வலதுசாரி வேட்பாளர்களுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் 1,600-க்கும் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வாக்கு மறுஎண்ணிக்கை செய்ய இடதுசாரி வேட்பாளர் சான்செஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த கோரிக்கையை கூட்டாக வலியுறுத்த வேண்டும் என வலதுசாரி வேட்பா ளர் புஜிமோரிக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அவர் மறு எண்ணிக்கைக்கு ஆதரவு தர மறுத்து விட்டார். வாக்குகள் மறைக்கப் பட்டுள்ளது பற்றி சான்செஸ் தரப்பு குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொலம்பியாவில் 18 லட்சம் பேர் வறுமையிலிருந்து மீட்பு

5.39 கோடி மக்கள் தொகை கொண்டுள்ள கொலம்பியாவில் 18 லட்சம் மக்கள் கடுமையான வறுமை யில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 இல் அந்நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை 1 கோடியே 62 லட்சத்து 40 ஆயிரமாக இருந்தது. 2025-இல் 1 கோடியே 44 லட்சத்து 50 ஆயிரம் ஆக குறைக்கப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியத்தை உயர்த்தி வருமான ஏற்றத்தாழ்வை குறைத்தது இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. வறுமை குறைந்திருந்தாலும், மாநிலங்களுக்கு இடையி லான வேறுபாடுகள் இன்னும் தொடர்கின்றன. நகரங்களை விட கிராமப்புறங்களில் வறுமை 1.6 மடங்கு அதிகமாகவே உள்ளது.

நெருங்கிய உறவினர்கள் திருமணம் : சுவீடன் அரசு தடை

நெருங்கிய உறவினர்கள் மற்றும் மாமன்-மச்சான் உறவு முறையிலான (Cousin marriages) திருமணங்களைத் தடை செய்துள்ளது ஸ்வீடன் நாடாளுமன்றம். இந்த புதிய சட்டத்தின்படி, நெருங்கிய உறவினர்களுக்கு இடையிலான திருமணங்களுக்கு நிபந்தனையற்ற தடை விதிக்கப்படுகிறது. வெளிநாடு களில் நடக்கும் இதுபோன்ற உறவுமுறைத் திருமணங்களும், விதியின்படி, இனி சுவீடனில் அங்கீகரிக்கப் படாது. ஆணவப்படுகொலைகள், அது சார்ந்த ஒடுக்குமுறைகள், வன்முறைகள் மற்றும் பிற அச்சுறுத்தல்க ளைத் தடுப்பதே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம் என கூறப்பட்டுள்ளது.இந்த புதிய சட்டம் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இனப் படுகொலைக்கு உதவும் கூகுள் : சுந்தர் பிச்சைக்கு எதிர்ப்பு

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு எதிர்ப்பு தெரிவித்து 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். ஜூன் 14 அன்று, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியும் ஸ்டான்போர்ட் முன்னாள் மாணவருமான சுந்தர் பிச்சை தனது உரையை ஆற்றத் தொடங்கிய போது பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தி கோசம் எழுப்பியபடி மாணவர்கள் வெளியேறினர். இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு உதவி செய்து வரும் கூகுள் நிறுவனத்தை கண்டித்து இந்த வெளிநடப்பை அவர்கள் செய்துள்ளனர்.

உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக பிரான்சில் 20,000 மக்கள் போராட்டம்

ஜெனீவா, ஜூன் 15- பிரான்சில் ஜி-7 உச்சி மாநாடு நடை பெற உள்ளது. இந்நிலையில் மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உலக அரசியலி லும் நாடுகளின் மீதும் ஜி-7 நாடுகள் ஆதிக்கம் செலுத்துகிற போக்கையும் கண்டித்து 20,000 க்கும் அதிகமான மக்கள் ஜெனீவா நகரத்தில் பெரும் போ ராட்டம் நடத்தியுள்ளனர்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் என 7 நாடுகள் அங்கம் வகிக்கும் இக்கூட்ட ணியானது உலக கோடீஸ்வரர்களுக்கான கூட்டணி. இவர்களால் வளரும் நாடுக ளுக்கோ, ஏழை எளிய மக்களுக்கோ எந்த நன்மையும் இல்லை. இவர்கள் எடுக்கும் முடிவுகள் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் உள்ள பெரும் கோடீஸ் வரர்களுக்கு ஆதரவாகவும் ஏழை மக்களை பாதிக்கக்கூடியவையாக மட்டுமே இருக்கும் என பல ஆண்டுகளாக தொடர்ந்து கூறப்பட்டுள்ளது.

இக்கூட்டமைப்பின் உச்சி மாநாடு பிரான்ஸ் நாட்டில் ஜூன் 15-17 வரை ஜெனீ வாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் ஞாயிற்றுக்கிழமையன்று சுமார் 20,000 மக்கள் பங்கேற்ற அமைதிப் பேரணி ஜெனீவா நகரில் நடைபெற்றுள் ளது. அப்பேரணியில் வன்முறையும் உரு வாக்கப்பட்டது. அந்த வன்முறையில் ஐ.நா அவை யின் அலுவலகத்தின் ஜன்னல்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. போராட்டக் காரர்கள் மீது காவல்துறை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகவே ஜி7 கூட்டங்களின் போது இத்தகைய போராட்டங் கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஜெனீ வா பேரணியில் பங்கேற்றவர்கள் அதிகா ரமும், பொருளாதார பலமும் கொண்ட ஒரு சில நாடுகள், கார்ப்பரேட் நிறுவனங்களிட மே குவிந்திருப்பதன் அடையாளமாக விளங்கும் ஜி7 மாநாட்டிற்கு எதிராகவே தாங்கள் போராடுகிறோம். இந்நாடுகளின் செயல்பாடுகள் பெண்களை ஒடுக்கும் வகையில் உள்ளன. மேலும் அவை சமத்துவமின்மைக்கே வழிவகுக்கின்றன என கூறியுள்ளனர்.

இந்த மாநாட்டில் ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) பங்கேற்கிறது. மேற்கு ஆசியா மற்றும் உக்ரைனில் நடந்து வரும் போர்கள் இந்த மாநாட்டின் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என கூறப்படுகிறது.