இந்தியப் பொருட்களுக்கு அடுத்தடுத்து தடை விதிக்கும் உலக நாடுகள் ‘மவுன குருவாக’ வேடிக்கை பார்க்கும் பிரதமர் மோடி
2 Jun 2026, 8:30 pm

இந்தியப் பொருட்களுக்கு அடுத்தடுத்து தடை விதிக்கும் உலக நாடுகள் ‘மவுன குருவாக’ வேடிக்கை பார்க்கும் பிரதமர் மோடி

புதுதில்லி உலகின் முக்கிய ஏற்றுமதி நாடாக இந்தியா உள்ளது. சுத்திகரிக்கப் பட்ட பெட்ரோலியப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், ரத்தினங்கள், ஆப ரணங்கள், பொறியியல் பொருட்கள், மென் பொருள், அரிசி, மசாலாப் பொருட்கள், மாம் பழங்கள், தேயிலை, கடல் உணவுப் பொ ருட்கள், நறுமணப் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்கிறது.

குறிப்பாக, சர்வதேசச் சந்தைகளில் தரக்கட்டுப்பாடுகள், தொழில் நுட்பக் காரணங்களால் சில தடைகளையும் சவால்களையும் எதிர்கொண்டாலும், ஒட்டு மொத்த உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியாவின் பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

இத்தகைய சூழலில், குறை பாடுகளை சுட்டிக்காட்டி கடந்த 10 நாட்களில் இந்தியப் பொருட்களுக்கு உலக நாடுகள் அடுத்தடுத்து தடைவிதித்து வருகின்றன.

மாம்பழம் - ஜப்பான் ஜப்பானின் யோகோகாமா தாவர பாதுகாப்பு சங்கம் இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய மறுத்துள்ளது.

இதுதொடர்பாக அச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”வேப்பர் ஹீட் ட்ரீட்மெண்ட்’ (Vapor heat treatment - நீராவி வெப்ப செயல்முறை) செயல்முறை மூலம் மாம்பழங்களை ஆய்வு செய்கிறோம்.

இது மாம்பழங்களை பூச்சிகள், அவற்றின் முட்டைகளிலிருந்து பாதுகாப்பதற்காகப் பயன் படுத்தப்படும் ஒரு செயல்முறையாகும்.

மாம் பழங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சூடான காற்று உள்ள அறையில் வைக்கப்படுகின்றன. இது பழத்திற்குள் இருக்கும் பூச்சிகள் மற்றும் புழுக்களை அழிக்கிறது.

ஆனால் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, மாம்பழங்களின் பதப்படுத்தும் செயல்முறை யில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன.

ஜப்பானிய அதிகாரிகள் முற்றிலும் திருப்தி அடையும் வரை இந்தியாவிலிருந்து மாம் பழங்கள் இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப்படும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

அரிசி - சீனா இந்தியா பாசுமதி அல்லாத அரிசி, உடைந்த அரிசி (குருணை) வகைகளை சீனா வுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்கிறது.

சோனா மசூரி, பொன்னி, ஐஆர்64 போன்ற வகைகள் சீனாவின் உணவகங்கள், உணவு பதப்படுத்துதலுக்காக அனுப்பப்படுகின்றன.

ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து சென்னை துறைமுகம் வழியாக கொள்கலன்கள் மூலம் சீனாவிற்கு அரிசி ஏற்றுமதி செய்யப் படுகிறது. இ

ந்நிலையில், இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட அரிசி ஏற்றுமதி கொள் கலன்கள் பொதிகளில் மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் இருப்பதாகக் கூறி சீனா இந்திய அரிசிப் பொருட்களுக்கு தடைவித்துள்ளது. இந்தியாவில் வணிக ரீதியாக மரபணு மாற்றப் பட்ட உணவுப் பயிர்களை விளைவிக்க அனுமதி யில்லை என்றாலும், சீனாவின் இந்த தடை கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மசாலா - ஹாங்காங், சிங்கப்பூர் அதே போல இந்தியாவின் பிரபல மசாலா நிறுவனங்களான எம்டிஎச் (MDH - தலைமை யிடம் புதுதில்லி), எவரெஸ்ட் (Everest தலை மையிடம் மகாராஷ்டிரா) ஆகிய நிறுவ னங்களின் சில தயாரிப்புகளில் அனுமதிக்கப் பட்ட அளவை விட அதிகமாக ‘எத்திலீன் ஆக்சைடு’ என்ற பூச்சிக்கொல்லி ரசாயனம் கலந்து இருப்பதாகக் கூறி ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகள் மீண்டும் தடை விதித்துள்ளன.

ஜப்பான், சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் குறைபாடுகளை சுட்டிக்காட்டி இந்தியப் பொருட்களுக்கு தடை விதித்து இருப்பதால், மற்ற நாடுகள் இந்தியப் பொருட்களை சந்தேக எண்ணத்துடன் அல்லது தீவிர சோதனை செய்யும் வேலையில் இறங்கும் சூழல் உருவாகும் என ஏற்றுமதி சார்ந்த வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால், தன்னை விஸ்வகுரு என அழை த்துக் கொண்டு அடிக்கடி அரசு பயணம் என்ற பெயரில் உலக நாடுகளுக்கு பறக்கும் பிரதமர் மோடி இந்தியப் பொருட்கள் மீதான ஏற்றுமதி தடை தொடர்பாக வாய்திறக்காமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

‘மன் கி பாத்’ ஷூட்டிங்கில் மாம்பழ விவசாயிகளை பாராட்டிய மோடி தடை குறித்து பேசவில்லை

பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்ப்பதற்காக பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் ‘மன் கி பாத்’ என அழைக்கப்படும் வானொலி ஷூட்டிங் நிகழ்ச்சியில் பேசுவது வழக்கம். அதன்படி மே 31 அன்று நடைபெற்ற 134ஆவது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியின் போது பிரத மர் மோடி,”கோடைக்காலம் வந்தவுட னேயே, ஒவ்வொரு வீட்டிலும் விவாதத்தி ற்குரிய மற்றொரு தலைப்பு தொடங்கு கிறது. அதுதான் மாம்பழங்கள். இந்தியா வில் கோடைக் காலத்தில் மாம்பழங்களைப் பற்றிப் பேசாத வீடுகளே இருக்க முடி யாது” என்று கூறி மாம்பழங்களை விளை விப்பதற்காக இரவு பகலாக உழைக்கும் விவசாயிகளையும் அவர் பாராட்டினார். ஆனால் ஜப்பான் நாடு இந்திய மாம் பழங்களுக்கு விதித்த தடை தொடர்பாக ஒரு வார்த்தை பேசவில்லை.

புற்றுநோய் செல்களை உருவாக்கும் மசாலா பொருட்களுக்கு உள்நாட்டில் தடை விதித்துள்ளதா மோடி அரசு?

எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் கறி மசாலா, எம்.டி.எச் நிறுவனத்தின் சில கறி மசாலாக்க ளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ‘எத்திலீன் ஆக்சைடு’ என்ற ரசாயனம் கலந்திருப்பது ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்பு மையத்தின் ஆய்வில் கண்டறி யப்பட்டது. எத்திலீன் ஆக்சைடு என்பது பொதுவாக மருத்துவ உபகரணங்களை கிருமி நீக்கம் செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு பூச்சிக்கொல்லி வாயுவாகும். இது மனிதர்களுக்குப் புற்று நோயை உண்டாக்கக்கூடிய அபாயகரமான காரணியாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், உணவு களில் இதைப் பயன்படுத்த சர்வதேச அளவில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த ரசாயனக் கலப்பு கண்டறியப்பட்ட உடனேயே, சந்தையில் இருந்த எவரெஸ்ட் மீன் கறி மசாலாப் பொதிகளைத் திரும்பப் பெற சிங்கப்பூர் உணவு முகமை உத்தரவிட்டதுடன், அவற்றின் விற்பனைக்கும் தற்காலிகத் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, ஆஸ்திரே லியா, சில ஐரோப்பிய நாடுகளின் உணவுப் பாதுகாப்பு அமைப்புகளும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மசாலாப் பொருட்களின் தரம் குறித்துக் கூடுதல் கண்காணிப்பு, ஆய்வுகளை மேற்கொண்டன. ஆனால் இந்தியாவில் புற்றுநோய் செல்களை உருவாக்கும் மசாலாப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், தடை குறித்து தெளிவான எவ்வித அறிக்கைகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.