உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரி கண்டுபிடிப்பு 26 டிகிரி செல்சியஸ் வெப்பம்
21 Jun 2026, 9:14 pm

உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரி கண்டுபிடிப்பு 26 டிகிரி செல்சியஸ் வெப்பம்

தென்கிழக்கு ஐரோப்பா நாடான அல்பேனியாவில் உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செக் குடி யரசு நாட்டைச் சேர்ந்த குகை ஆராய்ச்சி யாளர்கள், அல்பேனியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ‘அட்மாஸ்’ என்ற 330 அடி ஆழமான பாதாளப் பள்ளத்தாக்கின் அடிவாரத்தில் உள்ள குகைக்குள் ஏரி யைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த விசித்திர மான நீல நிற வெப்ப ஏரிக்கு, தங்களது ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்த தொண்டு நிறுவனத்தின் நினைவாக ‘லேக் நியூட்ரான்’ (Lake Neuron) என்று பெய ரிட்டுள்ளனர். நவீன லிடார் ஸ்கேனர்கள் மூலம் இந்த ஏரியின் அளவு தற்போது அதிகாரப்பூர்வ மாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 460 அடி நீளமும் (138 மீட்டர்), 138 அடி அகலமும் (42 மீட்டர்) கொண்டது. இந்த ஏரி சுமார் 25 அடி ஆழம் கொண்டது.

இதில் கனிமங்கள் நிறைந்த 2.94 லட்சம் கன அடி (சுமார் 8,335 கன மீட்டர்) வெது வெதுப்பான நீர் உள்ளது. நிலத்தடி புவி வெப்ப ஆற்றல் காரணமாக இந்த ஏரியின் நீர் எப்போதும் 79° பார்ன்ஹிட் (26 டிகிரி செல்சியஸ்) வெப்பத்துடனே காணப்படு கிறது. குறிப்பாக இந்த ஏரி நீரில் ஹைட்ரஜன் சல்பைடு வாயு நிறைந்துள்ளது.

இந்த வாயு காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் கலக்கும்போது ‘சல்பூரிக் அமிலம்’ உரு வாகி, அங்கிருக்கும் சுண்ணாம்புப் பாறை களை மெதுவாகக் கரைத்து இந்த பிரம்மாண்ட நிலத்தடி ஏரியை உருவாக்கி யுள்ளது என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் புவி வெப்பமயமாதல் கார ணமாக வெப்ப ஏரி உருவாகிறதா? என்ற சந்தேகமும் உள்ளதாக ஆராய்ச்சியா ளர்கள் கூறியுள்ளனர்.