விளையாட்டு
8 Oct 2026, 9:11 pm

விளையாட்டு

உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப் கோவையைச் சேர்ந்த அமுதினிக்கு தங்கம் 6 பதக்கங்களை வென்று தமிழ்நாடு வீரர் - வீராங்கனைகள் கலக்கல்

தில்லி தல்கதோரா மைதானத்தில் நடைபெற்ற உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப் (ஐயூகேஎல் - IUKL - உடற்பயிற்சிசார்ந்த விளையாட்டு - பளுதூக்குதல் வகை) போட்டியில், கோயம்புத்தூரைச் சேர்ந்த அமுதினி வசந்தி இந்திய அணிக்காக ஒரு வரலாற்றுச்சாதனையைப் படைத்துள்ளார். டபுள் ஆர்ம் லாங் சைக்கிள் (DALC) ரிலே பிரிவில் அவர் தங்கப் பதக்கத்தைக்கைப்பற்றியுள்ளார்.

ரஷ்யா, உஸ்பெகிஸ்தான் மற்றும் மங்கோலியா உள்ளிட்ட முன்னணி நாடுகளின் அணிகள் பங்கேற்ற இந்தச் சவாலான ரிலே போட்டியில், ஆந்திரா மற்றும் தில்லியைச்சேர்ந்த சக அணி வீரர்களுடன் இணைந்து இந்திய அணிக்காகப் போட்டியிட்ட அமுதினி, ஆஸ்திரேலியா அணியைவீழ்த்தி தங்கம் வென்று அசத்தியுள்ளார். இரண்டு 16 கி.கி கெட்டில்பெல் எடைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தி (Two 16kg kettlebells) அவர் இந்த வெற்றியைப் பெற்று தந்துள்ளார். கோவையிலேயே தங்கி தீவிர பயிற்சி பெற்றுள்ள அமுதினி, உலக சாம்பியன்ஷிப்தங்கப் பதக்கம் வென்றவரும் தனது பயிற்சியாளருமான கெளதம் சண்முகம் அவர்களின் நேரடி வழிகாட்டுதலின்கீழ் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

தமிழ்நாடு 6 பதக்கம்

இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழகக் குழுவினர் மொத்தம் 3 தங்கப் பதக்கங்களையும், 3 வெள்ளிப்

பதக்கங்களையும் கைப்பற்றினர்.

கெளதம் சண்முகம் (ஆண் - 73 கி.கி தங்கம்)ஷாலினி கிருஷ்ணமூர்த்தி (சீனியர் - பெண் - சைக்கிள் - தங்கம்)வந்தனா ராஜ் (பெண் - சைக்கிள் - தங்கம்)அமுதினி வசந்தி (பெண்- 85+ கி.கி - வெள்ளி)ரூபா ஆர் (சீனியர் - பெண்– மிலிட்டரி ஸ்நாட்ச் - வெள்ளி)ஐஸ்வர்யா சம்பத்குமார் (சீனியர் - பெண் - சைக்கிள் - வெள்ளி)

ஆர்டிக் ஓபன் பேட்மிண்டன் காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து

26ஆவது ஆர்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்து நாட்டின் தலைநகர் வான்டா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில்வெள்ளியன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் ரிக்கோ ஆகியோர் மோதினர்.

தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-15,21-15 என்ற நேர் செட் கணக்கில் அபாரவெற்றிப் பெற்று, காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். வெள்ளியன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் முதல்நிலை வீராங்கனையான தாய்லாந்தின் ரட்சனோக்கை, இந்தியாவின் பி.வி.சிந்து (தரவரிசை - 6) எதிர்கொள்கிறார்.

தருண் அதிர்ச்சி தோல்வி

வெள்ளியன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் தருண் மண்ணேபள்ளி - பிரான்சின் போபாவை எதிர்கொண்டார். போபாவ் அதிரடிக்கு பெயர் பெற்றவர். தரவரிசையில் 2ஆவது இடத்திலும் உள்ளார். எனினும் தரவரிசையில் இல்லாத தருண் மண்ணேபள்ளி வெற்றிக்காக கடுமையாக போராடி 14-21, 19-21 என்றசெட் கணக்கில் தோல்வியடைந்தார். பிரான்சின் போபாவ் காலிறுதிக்கு முன்னேறினார்.