முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

20 Mar 2026, 2:55 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

உலக மகிழ்ச்சி அறிக்கை 2026:  இந்தியா 116-வது இடம்

ஐநா ஆதரவுடன் வெளியிடப்பட்ட 2026-ஆம் ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கை பல முக்கியத் தகவல்களைத் தந்துள்ளது. இதன்படி, பின்லாந்து நாடு தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மொத்தம் 147 நாடுகள் இடம்பெற்ற இந்தப் பட்டியலில் இந்தியா 116-வது இடத்தையே பெற்றுள்ளது. அதிகப்படியான சமூக ஊடகப் பயன்பாடு இளைஞர்களின் மனநலத்தையும் நல்வாழ்வையும் பல நாடுகளில் கடுமையாகப் பாதித்து வருவதாக இந்த  அறிக்கை எச்சரிக்கிறது. மார்ச் 18, 2026 அன்று வெளி யான இந்த ஆய்வின்படி, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மனித உறவுகளில் விரிசலை ஏற்படுத்தி மகிழ்ச்சிக் குறியீட்டைக் குறைப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மகிழ்ச்சியான வாழ்க்கை முறைக்கும், ஆரோக்கியமான சமூகத்திற்கும் சமூக ஊடகப் பயன்பாட்டில் கட்டுப்பாடு அவசியம் என்பதை இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன.

சீனாவிற்கான புதிய இந்தியத் தூதராக விக்ரம் கே.துரைசாமி

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சீனாவிற்கான இந்தியாவின் புதிய தூதரை நிய மித்துள்ளது. தற்போது பிரிட்டன் இந்திய உயர் ஆணையராகப் பணியாற்றி வரும் விக்ரம் கே. துரைசாமி, சீனா வின் அடுத்த இந்தியத் தூதராகப் பொ றுப்பேற்க உள்ளார். இதற்கான அதி காரப்பூர்வ அறிவிப்பை வெளியுற வுத்துறை அமைச்சகம் மார்ச் 19 அன்று வெளியிட்டது. இந்தியா மற்றும் சீனா இடையிலான  பாதுகாப்பு முக்கி யத்துவம் வாய்ந்த விவகாரங்கள் நீடித்து வரும் வேளையில், இந்த நியமனம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram