சென்னை விரைவு செய்திகள்
8 Mar 2026, 3:42 pm

ஜிப்மரில் உலக குளோகோமா தின விழிப்புணர்வு நடைபயணம்

புதுச்சேரி, மார்ச் 8- உலக குளோகோமா தினத்தை முன்னிட்டு புதுச் சேரி ஜிப்மர் மருத்துவமனை யின் கண் மருத்துவத் துறை சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியை மருத்துவக் கண்காணிப் பாளர் டாக்டர் சகா வினோத் குமார் தொடங்கி வைத்தார். ஜிப்மர் நுழைவாயிலில் தொடங்கி கதிர்காமம் வழி யாகச் சென்ற இந்த நடை பயணத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். கண் அழுத்த நோய் (குளோகோமா) காரண மாக இந்தியாவில் ஆண்டு தோறும் 1.2 லட்சம் பேர் நிரந்தரப் பார்வை இழப்பைச் சந்திக்கின்றனர். கண் நரம்புகள் பாதிக்கப் படுவதால் ஏற்படும் இந் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 40 வயதிற்கு மேற்பட்டோர் முறையான கண் பரி சோதனை செய்து கொள் வதன் மூலம் இந்நோயி லிருந்து பார்வையைப் பாது காக்கலாம் என அறி வுறுத்தப்பட்டது.

பிரியாணி கடை நடத்திய வங்கதேசத்தினர் 2 பேர் கைது

மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை சென்னை, மார்ச் 8- வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவி, சென்னையில் பிரியாணி கடை நடத்தி வந்த 2 பேரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வெளிநாடு செல்லும் பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் கடந்த 6ஆம் தேதி சோதனை செய்தனர். அப்போது முகமது ஆருண் (44) என்பவர் போலி இந்திய பாஸ்போர்ட் மூலம் வங்க தேசம் செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது ஆருண், கடந்த 1999ஆம் ஆண்டு திரிபுராவின் ஸ்ரீமந்துபுர் எல்லை வழியாக, சட்டவிரோதமாக வங்கதேசத்துக்கு பலமுறை சென்று வந்துள்ளார். 2022இல் தனது வங்கதேச பாஸ்போர்ட் மூலம் முறையாக இந்தியா வந்த இவர், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். பின்னர், சொந்தமாக பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார். தனது வங்கதேச குடியுரிமையை மறைத்து, போலியாக இந்திய ஆதார் மற்றும் பான் அட்டையைப் பெற்ற அவர், அதன் மூலம் இந்திய பாஸ்போர்ட்டும் பெற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. வங்கதேசத்திலிருந்து இவரது உறவினரான வலியுல்லா (40) என்பவரும் கடந்த 2025இல் திரிபுரா எல்லை வழியாக, சட்டவிரோதமாக இந்தி யாவிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் சென்னைக்கு வந்த அவர், முகமது ஆருணின் பிரியாணி கடையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். ‘பாபுல் உசேன்’ என்ற பெயரில் அவர் போலியாக ஆதார் அட்டை பெற்றதும் கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து 2 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

78 வட மாநிலத்தை சேர்ந்த கொத்தடிமைகள் மீட்பு

திருவள்ளூர், மார்ச் 8- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த அய நல்லூர் கிராமத்தில் எம்.கே.எஸ், செங்கல் சூளை தொழில கம் இயங்கி வருகிறது. கும்மிடிப்பூண்டி தபால் தெருவை சேர்ந்த குப்பன் என்ப வருக்கு சொந்தமான இந்த செங்கல் சூலையில் வேலை செய்ய கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பிகார் மாநி லத்தைச் சேர்ந்த 78 பேர் கொத்தடிமைகளாக அழைத்து வரப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பொன்னேரி வருவாய் கோட்டாட்சி யர் ரவிச்சந்திரனுக்கு கிடைத்த தகவலின் பேரில், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ்குமார் முன்னிலையில் கும்மிடிப்பூண்டி காவல்துறையினர், கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 78 பேரையும் மீட்டு ரெட்டம் பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கொண்டு சென்று தங்க வைத்தனர்.

கடலூரில் சர்வதேச மகளிர் தின விளையாட்டுப் போட்டி

கடலூர், மார்ச் 8- சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடலூர் அண்ணா விளை யாட்டு மைதானத்தில் பெண்களுக் கான சிறப்பு விளையாட்டுப் போட்டி கள் இன்று நடைபெற்றன. இந்திய விளையாட்டு ஆணையம், ‘கேலோ இந்தியா’ மற்றும் ‘மை பாரத்’ ஆகியவற்றுடன் இணைந்து இப்போட்டிகளை நடத்தியது. இதில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீராங்கனை கள் உற்சாகத்துடன் கலந்துகொண்ட னர். வெற்றி பெற்றவர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு களுடன் சான்றிதழ்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ் குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் கேலோ இந்தியா ஒருங்கிணைப்பா ளர் ராமச்சந்திரன், மகாலட்சுமி மற்றும் நேரு யுவகேந்திரா பிரதிநிதி கள் பங்கேற்று வீராங்கனைகளை வாழ்த்தினர். பங்கேற்ற அனைவருக் கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்க ப்பட்டன. பெண்களின் விளை யாட்டுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் இவ்விழா சிறப்பாக அமைந்தது.

நீரிழிவு நோயை தடுக்க மரபணுசார் வாழ்வியல் ஆலோசனை

சென்னை,மார்ச் 8- சென்னையில் உள்ள டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம், மரபணு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தனிநபருக் கான வாழ்க்கை முறை ஆலோசனைகளை வழங்கும் ‘மரபணுசார்ந்த வாழ்வியல் ஆலோசனை மையத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது. இது வழக்கமான பொதுவான சிகிச்சை முறையிலிருந்து மாறி, ஒவ்வொருவரின் மரபணு அமைப்புக்கு ஏற்ப சிகிச்சையைத் தீர்மானிக்கும் ‘துல்லிய மருத்துவ’ முறைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒருவருக்கு டைப்-2 நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எவ்வளவு உள்ளன என்பதை முன்கூட்டியே கண்டறிய முடியும் என்று மையத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஆர். எம். அஞ்சனா கூறினார். மரபணு அறிவியலின் உதவியுடன் நோய்கள் வருவதற்கு முன்பே அவற்றைக் கணித்து, அதற்கேற்ப இலக்கு நிர்ணயிக் கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்வது இப்போது சாத்தியமாகியுள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளை எதிர்கொள்ள இத்தகைய முன்கூட்டியே கணிக்கும் முறை கள் மிகவும் அவசியமானவை என்று ஆலோச கர் டாக்டர் கீதா தர்மட்டி தெரிவித்தார்.

விளையாட்டு வீரர்களை உதாசீனப்படுத்தும் புதுச்சேரி அரசுக்கு சிபிஎம் கடும் கண்டனம்

புதுச்சேரி, மார்ச் 8 விளையாட்டு வீரர்களை உதா சீனப்படுத்தும் புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசின் போக்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் புதுச்சேரி நகரக் கமிட்டி செயலாளர் ஜோதிபாசு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் கால அரசியல் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், விளையாட்டு வீரர்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில் 2025-ஆம் ஆண்டிற்கு மட்டும் சாதனை படைத்த சில வீரர்களுக்கு ஊக்கத்தொகை யும் பாராட்டும் வழங்குவதாக அரசு அறி வித்துள்ளது. இச்செயல் விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் திறமையை ஊக்கப்படுத்துவதற்கு மாறாக, விளை யாட்டுத் துறையைச் சீரழிக்கும் செய லாகும். இது மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற குறுகிய மனப் பான்மையோடு மேற்கொள்ளப்பட்ட நட வடிக்கையாகவே தெரிகிறது. முக்கிய கோரிக்கைகள் நிலுவைத் தொகை: 2004-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை தேசிய, தென்னிந்திய மற்றும் சர்வதேச அளவில் சாதனை புரிந்து பதக்கம் வென்ற அனைத்து வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கும் வழங் கப்பட வேண்டிய ரொக்கப் பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகைகளை எவ்வித நிலுவையு மின்றி முழுமையாக வழங்க வேண்டும். இட ஒதுக்கீடு: அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான 5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு முறையாகவும் உறுதி யாகவும் பின்பற்ற வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகள்: வீரர்கள் தொடர்ந்து பயிற்சி பெறவும், போட்டிகளில் பங்கேற்கவும் தேவையான சீருடை, விளை யாட்டுத் தளவாடங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அரசு செய்து தர வேண்டும். நிதி ஒதுக்கீடு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டும் நிதி ஒதுக்காமல், நிலுவையில் உள்ள 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்குத் தேவை யான 10 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். போராட்ட எச்சரிக்கை புதுச்சேரியின் எதிர்காலத் தலைமுறை யினரின் விளையாட்டு ஆர்வத்தைச் சிதைக்கும் வகையில் அரசு செயல்படு வதைக் கைவிட வேண்டும். மாறாக, பாஜக கூட்டணி அரசு இதேபோன்று தொடர்ந்து செயல்படுமானால், பாதிக்கப்பட்ட விளை யாட்டு வீரர்களையும் இளைஞர்களையும் ஒருங்கிணைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரியில் மாபெரும் போராட்டங் களை முன்னெடுக்கும் என ஜோதிபாசு எச்சரித்துள்ளார்.

விழுப்புரம் மற்றும் செஞ்சி பகுதிகளில் குற்றச் சம்பவங்கள்

செஞ்சி,மார்ச் 8- பெரும்புகை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன் வீட்டில் மர்ம நபர்கள் கதவை உடைத்து 19 பவுன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். போலீசார் தடயங்களைச் சேகரித்து விசா ரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம்: பானாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவ சாயி ரவி (46) போதையில் நிலைதடுமாறிக் குட்டையில் விழுந்து உயிரிழந்தார். திருட்டு: ஆனாங்கூர் பகுதியில் சேனாதிபதி என்பவரது நிலத்தில் இருந்த மின்மாற்றியில் காப்பர் கம்பி மற்றும் ஆயிலை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள் ளனர்.

பி.எஸ்.என்.எல் சிறப்பு முகாம்

புதுச்சேரி,மார்ச் 8- புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல் சிறப்பு முகாம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். புதுச்சேரி முதன்மை பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:- பி.எஸ்.என்.எல். சிறப்பு மேளா விற்பனை முகாம் இன்று திங்கட்கிழமை மார்ச் 9-ந் தேதி முதல் வியாழக்கிழமை வரை 4 நாட்கள் நடக்கிறது. மேட்டுப்பாளையம், ஆனந்தா இன் அருகில், நாவற்குளம் அன்னை நகர், பாகூர் கொம்யூன் பஞ்சா யத்து அலுவலகம் எதிரில், திருவண்டார் கோவில், வில்லி யனூர், கரியமாணிக்கம், ராஜீவ் காந்தி ஆஸ்பிடல் அருகில், சங்கர வித்யாலயா பள்ளி எதிரில் வில்லியனூர், ஆரியபாளை யம், மடுகரை, திருக்கனூர், கோட்டகுப்பம் இந்தியன் பேங்க் அருகில், லாஸ்பேட் ராஜுவ் பார்க் எதிரில்,, அரும்பார்த்த புரம் ரெயில்வே கேட் அருகில், கரிகலாம்பாக்கம், வில்லி யனூர் மற்றும் ரங்கபிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் ஆகிய இடங்களில் இச்சிறப்பு முகாம் நடை பெறுகிறது. முகாமில் சலுகை விலையில் புதிய சிம் கார்டு கள், புதிய இணைப்புகளும் வழங்கப்படும். இவ்வாறு அச்செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

குட்டையில் விழுந்தவர் உயிரிழப்பு

விழுப்புரம்,மார்ச். 8- விழுப்புரம் அருகே பானாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி வயது-46, இவர் விவசாயி,இவர், சம்பத்தனறு மாலை, குடி போதையில் வீட்டின் பின்புறம் நடந்து சென்றபோது நிலை தடுமாறி அப்பகுதியில் உள்ள குட்டையில் விழுந்து விட்டார், உடனடியாக அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.