தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அறிவியல் கதிர் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

2 Aug 2026, 1:38 am
அறிவியல் கதிர் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

உலகில் பாதி பனிப்பாறைகள் 2100ல் காணாமல் போய்விடும்

மனிதகுலம் பாரிஸ் காலநிலை உடன்படிக்கையின்படி புவி வெப்ப உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குள்கட்டுப்படுத்தினாலும், வரும் 2100-ஆம் ஆண்டுக்குள் உலகில் உள்ள பாதி பனிப்பாறைகள் உருகிவிடும் என்றுபுதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. முன்பு நினைத்திருந்ததைவிட புவி வெப்ப உயர்வு பனிப்பாறைகளை மிகவேகமாக உருகச் செய்கிறது. வரும் 30 ஆண்டுகளுக்குள் இந்த பேரழிவில் பாதி நிகழ்ந்துவிடும் அபாயம் உள்ளது.இப்போதுள்ள 2.7 டிகிரி வெப்ப உயர்வு தொடர்ந்தால், பனிப்பாறைகளில் 68% வரை உருகிவிடும்.புகழ்பெற்ற ‘சயன்ஸ்’ (Science) இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கையின்படி, நூற்றாண்டின்முடிவதற்குள் மத்திய ஐரோப்பா, மேற்கு கனடா மற்றும் அமெரிக்காவில் பனிப்பாறைகளே இல்லாத நிலைஏற்படும். இது உலகளவில் கடல்நீர் மட்டம் உயர்வதற்குக் வழிவகுப்பதோடு, 2 பில்லியன் மக்களின் நீர்ததேவையைப் பாதித்து, வெள்ளம் போன்ற பேரிடர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும். புவி வெப்பம் 1.5டிகிரிக்குள் கட்டுப்படுத்தப்பட்டால் கடல்நீர் மட்டம் 90 மி.மீ வரை உயரும்; ஆனால் 2.7 டிகிரி தொடர்ந்தால் 150 மி.மீவரை உயரும். கடந்த இருபதாண்டுகளில் பனிப்பாறைகள் உருகும் வேகம் இரு மடங்காக அதிகரித்துள்ளது.விரைவில் உருகி அழியும் பனிப்பாறைகளில் பெரும்பாலானவை சிறியவையாகும். சிறிய பனிப்பாறைகள்கடல்நீர் மட்ட உயர்விற்கு குறைவான பங்களிப்பைச் செய்தாலும், அவை மாற்றங்களுக்கு எளிதில் உட்படுபவைஎன்பதால் அவற்றின் பாதிப்பு அதிகமாக இருக்கும். உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்குஅடிப்படை நீர் ஆதாரமாகச் சிறிய பனிப்பாறைகளே விளங்குகின்றன. குறிப்பாக, இந்தியாவின் உயிர் நாடியாகஇமயமலைப் பனிப்பாறைகள் திகழ்கின்றன. மனிதனால் உயரும் பூமியின் வெப்பத்தினால் பனிப்பாறைகள்அதிவேகத்தில் உருகுகின்றன.இயற்கையை அழிக்கும் வேட்டைக்காரனாக இல்லாமல், சூழலைக் காக்கும் பாதுகாவலனாக மனிதன் மாறினால்மட்டுமே புவி வெப்பத்தால் பனிப்பாறைகள் உருகி உலகை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். விரைவில்மனிதகுலம் இதற்கான விழிப்புணர்வைப் பெற்று தீவிர நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இல்லாவிட்டால்எதிர்கால சந்ததியினர் குடிநீருக்காகவும் விவசாயத்திற்காகவும் மிகப்பெரிய மனிதப் பேரழிவைச் சந்திக்கநேரிடும்.

பெரிய பறவைகள் எங்கே போயின?

இயற்கையுடன் நெருக்கமாக இணைந்து வாழும் ஆதிவாசி மக்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள், தங்களைச் சுற்றிவாழும் வன உயிரினங்களில் நிகழும் மாற்றங்களைச் சிறு வயதிலிருந்தே அடையாளம் காண்கின்றனர்.அறிவியல் பூர்வமாக ஆவணப்படுத்தப்பட்ட வன உயிரினங்களின் மாற்றங்களைப் புரிந்துகொள்ள இந்த ஆய்வுஉதவுகிறது. ஸ்பெயின் பார்சலோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பழங்கால தாவர ஆராய்ச்சியாளர்அல்வாரோ பெர்னாண்டஸ் லமேசாரேஸ் தலைமையிலான ஆய்வுக் குழுவினர், பொலிவியா நாட்டின் அமேசான்காடுகளில் கள ஆய்வுகளை மேற்கொண்டபோது பெரிய பறவைகளின் எண்ணிக்கை சுருங்கும் போக்கைமுதல்முறையாகக் கண்டறிந்தனர்.காலநிலை மாற்றத்தின் தாக்கத்திற்கான உள்ளூர் அடையாளம் காட்டிகள் என்ற திட்டத்தின் (LICCI) விரிவானஆய்வின் கீழ், மூன்று கண்டங்களைச் சேர்ந்த பத்து இடங்களில் 1,434 பேரிடம் கள ஆய்வுகள் நடத்தப்பட்டு, 283இனங்கள் பற்றிய அறிக்கைகள் பெறப்பட்டன. இந்த ஆய்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியைத் தரும்வகையில்உள்ளன. ஆய்வு நடைபெற்ற இடங்களில் பறவைகளின் சராசரி உடல் நிறை என்பது, சில ஆண்டுகளுக்கு முன்புஇருந்ததை விட இன்று சுமார் 70% குறைந்துவிட்டது. பொலிவியாவின் மழைக்காடுகள் முதல் செனகலின்புல்வெளி நிலங்கள் மற்றும் மங்கோலியாவின் பாலைவனங்கள் வரை அனைத்து இடங்களிலும் இந்தப் போக்குகாணப்படுகிறது.பெரிய பறவைகள் மெதுவாக இனப்பெருக்கம் செய்வது, அதிக இறைச்சிக்காக மனிதர்களால்வேட்டையாடப்படுவது மற்றும் நிலங்களின் பயன்பாடு மாறுவதால் பரந்த வாழிடங்களை இழப்பது போன்றகாரணங்களால் அவை அழிந்து வருகின்றன. பழங்குடி மக்களின் பாரம்பரிய அறிவும் நவீன அறிவியலும்இணைந்து செயல்படுவது இயற்கையின் சிக்கலான புதிர்களுக்குத் தெளிவான தீர்வுகளை வழங்கும் என்பதற்குஇந்த ஆய்வு ஒரு சிறந்த சான்றாகும். இந்த கூட்டு முயற்சி வருங்காலத்தில் பல சுற்றுச்சூழல் சீரழிவுகளைத்தடுக்கப் பெரிதும் உதவும். மேலும், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதில் பாரம்பரிய அறிவு எத்தகைய அரியபங்காற்றுகிறது என்பதையும் இந்நவீன ஆய்வுகள் உலகிற்கு உணர்த்துகின்றன.

பாரம்பரிய இதயக் கோளாறை முன்கூட்டியே கண்டறிய உதவும் இரத்தப் பரிசோதனை

மரபணு ரீதியாக ஒருவருக்கு ஏற்படக்கூடிய பொதுவான இதயக் கோளாறை ஒரு எளிய இரத்தப் பரிசோதனை மூலம் அறியும் புதிய வழியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகளவில் மில்லியன் கணக்கானவர்களைப் பாதிக்கும் ‘ஹைப்பர்ட்ரோஃபிக் கார்டியோ மியோபதி’ (HCM) என்ற இதயத் தசைச் சுவர்கள் இயல்பிற்கு மாறாகத் தடிமனாவதன் மூலம் இதயம் இரத்தத்தை பம்ப் செய்வது கடினமாகிறது. இது தலைமுறை தலைமுறையாக வாரிசுகளுக்குக் கடத்தப்படும் மரபணுக் கோளாறாகும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு அறிகுறி எதுவும் தெரியாது; வேறு சிலருக்கு மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு போன்ற ஆபத்தான சிக்கல்கள் ஏற்படும்.

இந்த ஆபத்தை முன்கூட்டியே கண்டறிய ஹார்வர்ட் மற்றும் ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர் புதிய முறையைக் கண்டுபிடித்துள்ளனர். இக்குழுவினர் நோயாளிகளின் இரத்தத்தில் ‘என்-டெர்மினல் ப்ரோ-பி-டைப் நேட்ரியுரெட்டிக் பெப்டைடு’ (NT-Pro-BNP) என்ற புரதத்தின் அளவைக் கணக்கிட்டனர். இதயத்தின் இயல்பான பம்ப்பிங் செயல்பாட்டின் போது வெளியிடப்படும் இந்தப் புரதம், இதயம் கடினமாக செயல்படும்போது அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது. இது இதயத்தில் இரத்த ஓட்டம் குறைவதையும், இதயத் தாளக் கோளாறுகளையும் (அரித்மியா) சுட்டிக்காட்டும் முக்கிய அறிகுறியாகும்.

சரியான நோயாளிகளுக்குச் சரியான சிகிச்சையைத் சரியான நேரத்தில் அளிக்க இந்தப் பரிசோதனை பெரிதும் உதவும் என்று ஆய்வின் தலைவர் பேராசிரியர் கரோலின் ஹோ தெரிவித்துள்ளார். இதன் மூலம் அதிக ஆபத்தில் இருப்பவர்களை முன்கூட்டியே கண்டறிந்து உயிர் காக்கும் சிகிச்சைகளை வழங்கவும், குறைந்த ஆபத்தில் இருப்பவர்கள் தேவையில்லாத சிகிச்சைகளைத் தவிர்க்கவும் இயலும். பிரிட்டிஷ் இதய அறக்கட்டளையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கண்டுபிடிப்பு, மரபணு மாற்றத்தால் உண்டாகும் இதய நோய்களைத் தடுக்கும் ஆய்வுகளில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. மருத்துவ வரலாற்றில் இதுவொரு மைல்கல்லாக அமைவதுடன், எண்ணற்ற மனிதர்களின் உயிரைக் காக்கப் பேருதவியாகவும் இருக்கும்.

கேரளக் கடலோரத்தில் புதிய மீன் இனம் கண்டுபிடிப்பு

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR-CMFRI) விஞ்ஞானிகள் கேரளக் கடலோரத்தில் ‘சைட்டோப்சிஸ் இண்டிகா’ (Cyttopsix indica) எனப்படும் புதிய மீன் இனத்தைக் கண்டறிந்துள்ளனர். கிழக்கு லட்சத்தீவு கடலில் 350 முதல் 500 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த ரோஜா-வெள்ளி கலந்த இளஞ்சிவப்பு நிற மீன், இந்தியாவின் அந்தி மண்டலங்களின் (Twilight zones) ரகசியங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதன் டி.என்.ஏ (DNA) பரிசோதனை மூலம், அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் உள்ள இதன் மிக நெருங்கிய உறவு மீன்களிலிருந்து இது 4.6% முதல் 11% வரை மரபணு மாறுபாடு கொண்டது என்பது தெரியவந்துள்ளது.

வங்காள விரிகுடாவில் நிலநடுக்க அதிர்வுகளுக்கான அறிவியல் காரணம்

வங்காள விரிகுடா பகுதி ஒரு நிலநடுக்க அபாயப் பகுதியாக (Seismic hotspot) மாறி வருவதாக ஐஐடி காரக்பூர் ஆய்வு எச்சரிக்கிறது. கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிகளிலிருந்து வரும் அதிகப்படியான வண்டல் சுமைகளும், நகரும் டெக்டோனிக் தட்டுகளும் இணைந்து கடலுக்கு அடியில் உள்ள பழங்கால வெடிப்புகளை மீண்டும் தீவிரப்படுத்துகின்றன. இதனால் இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் டெக்டோனிக் தகடுகளுக்குள்ளான நிலநடுக்கங்கள் ஏற்படும் ஆபத்து அதிகரித்து வருகிறது.

பூமியின் வளிமண்டலத்தில் புதிய வகை ஓசோன் துளை கண்டுபிடிப்பு

பூமியின் வளிமண்டலத்தில் வெப்பமண்டலப் பகுதிக்கு மேலே ஆண்டு முழுவதும் நிலைத்திருக்கக்கூடிய புதிய வகை ஓசோன் துளை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அண்டார்டிகா பகுதியில் காணப்படும் பருவ கால ஓசோன் துளையைப் போலன்றி, இந்தத் புதிய துளை பூமியின் அனைத்துப் பகுதிகளையும் பாதிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இது மனித நடவடிக்கைகளால் வெளியிடப்படும் ரசாயனங்களால் உருவாகியுள்ளதா அல்லது இயற்கையான மாற்றமா என்பது குறித்து தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டறியப்பட்ட 50 புதிய விண்கற்கள்

விண்வெளி ஆராய்ச்சியில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விண்வெளியில் இதுவரை கண்டறியப்படாத 50 புதிய விண்கற்களை விஞ்ஞானிகள் வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளனர். இந்த அதிநவீன செயற்கை நுண்ணறிவு முறை விண்வெளிப் புகைப்படங்களை மிகத் துல்லியமாக அலசி ஆராய்ந்து விண்கற்களைத் துல்லியமாக அடையாளம் காண உதவுகிறது. எதிர்காலத்தில் பூமியை நோக்கி வரக்கூடிய விண்கற்களை முன்கூட்டியே எச்சரிக்க இந்தத் தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என்று வானியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

விண்வெளியில் இருந்து நைல் நதியின் அழகிய படத்தைப் பகிர்ந்துள்ள நாசா விண்வெளி வீரர்

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஆப்பிரிக் காவின் நைல் நதியின் புகைப்படங்களை நாசா விண்வெளி வீரர் ஜெசிகா மீர் (Jessica Meir) எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார். “உங்கள் வாரத்தைத் தொடங்க அன்னை இயற்கையின் ஒரு துளி பூமி கலை, இன்று வலிமைமிக்க நைல் நதியைக் கொண்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆற்றின் தனித்துவமான வடிவங்களையும் அழகையும் காட்டும் இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பயனர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. நைல் நதி உலகின் மிக நீண்ட நதியாகும்.

செவ்வாய் கிரகத்தில் சேதமடைந்த நாசாவின் கியூரியாசிட்டி ரோவர்

செவ்வாய் கிரகத்தில் 2012-ஆம் ஆண்டு தரிறங்கிய நாசாவின் ‘கியூரியாசிட்டி’ ரோவர், கரடுமுரடான நிலப்பரப்புகள் மற்றும் கூழாங்கற்கள் காரணமாக தனது சக்கரங்களில் விரிசல்களும் சேதங்களும் ஏற்பட்டுள்ளதைக் காட்டியுள்ளது. கடுமையான செவ்வாய் குளிர்காலங்கள் மற்றும் புயல்களைத் தாண்டி ரோவர் இதுவரை 32 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்துள்ளது. சேதங்கள் இருப்பினும், ரோவர் தொடர்ந்து முழுமையாகச் செயல்பட்டு செவ்வாய் கிரகத்தின் சூழலை ஆராய்ந்து வருகிறது.

அமெரிக்க அறிவியல் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய 5 இந்திய வம்சாவளி மாணவர்கள்

அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் மிகப்பெரிய அறிவியல் போட்டிகளில் ஒன்றான 2026 ஆம் ஆண்டுக்கான ‘3M இளம் விஞ்ஞானி சவால்’ போட்டியில், அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் புதுமையான திட்டங்களை முன்வைத்து ஐந்து இந்திய வம்சாவளி மாணவர்கள் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர். ஆயிஷா ஆசிப், ராஜி தோஷி, அரிகா குண்டு, ஷார்வி மகாஜன் மற்றும் நபஸ்ரீ சைத்ரா ஆகியோர் இதில் இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்வாகியுள்ளனர். இவர்களில் வெற்றியாளருக்கு $25,000 பரிசுத்தொகையுடன் ‘அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானி’ என்ற பட்டமும் வழங்கப்படும். இறுதிப் போட்டி அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.