நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் உலக விவசாயிகள் தின விழா
14 May 2026, 9:05 pm
<p><strong>நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் உலக விவசாயிகள் தின விழா</strong></p><p>சின்னாளப்பட்டி, மே 14- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் உலக விவசாயிகள் தினத்தை முன்னிட்டு பிகேஎப், வைகை சமூக நல அமைப்பு மற்றும் தமிழக நதிகள் பாதுகாப்பு குழு இணைந்து விவசாயி களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக நதிகள் பாதுகாப்பு குழு மாநில இயக்குநர் அண்ணா துரை தலைமை தாங்கினார். நிலக் கோட்டை பூக்கடை சங்க பொறுப்பாளர் செல்வராஜ் வரவேற்றார். சிலுக்குவார்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூக்கடை சந்திரன் முன்னிலை வகித்தார். உலக விவசாயிகள் தினத்தை முன் னிட்டு, நிலக்கோட்டை பூ மார்க்கெட் விவ சாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். பூக்களை பாதுகாக்க குளிர்சாதன கிடங்கு அமைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு சார்பில் நறுமண பூச்செண்டு தொழிற் சாலை தொடங்க வேண்டும். உரத் தட்டுப் பாடு இன்றி உரங்களை வழங்க வேண்டும். இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைபொருள் உற்பத்தி செய்யும் விவ சாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன. நிகழ்ச்சியில் கூட்டமைப்பு பொருளா ளர் இளங்கோ, முத்துக்காமன்பட்டி பொறுப்பாளர் அன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
