முந்தய பக்கம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி - கருத்தரங்கம்

6 Jun 2026, 10:44 pm
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி - கருத்தரங்கம்
<p><strong>உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி - கருத்தரங்கம்</strong></p><p>தேனி, ஜூன் 6- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தேனி ஒன்றி யத்திற்கு உட்பட்ட ஸ்ரீரெங்கபுரம் எஸ்.ஆர்.ஜி. அரசு உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோ.லிஸி யம்மாள் தலைமை வகித்தார். ஆசிரியர் போ.பிச்சம்மாள் வரவேற்புரை நிகழ்த்தினார். உடற்கல்வி ஆசிரியர் சுதா லட்சுமி விழிப்புணர்வு பேரணியை ஒருங்கிணைத்தார். பேரணியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்தி, கிராமம் முழு வதும் விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வனச்சரக அலு வலர் முத்தன், வருநாடு மண்வளப் பாதுகாப்பு வனச்சர கர் குமார் மற்றும் கண்டமனூர் வனச்சரகர் சிவராமன் ஆகி யோர், வனப்பரப்பை அதிகரிப்பதன் அவசியம், சுற்றுச் சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் மரம் வளர்ப்ப தன் பயன்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். ஆசிரியர் சுருளிவேல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி னார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் உஸ்மான் அலி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram