உலக முட்டை தினம்
10 Oct 2026, 3:11 am
<p><strong>உலக முட்டை தினம்</strong></p><p>நாமக்கல், அக்.9-உலக முட்டை தினத்தையொட்டி, நாமக்கல்லில்10 ஆயிரம் கோழி முட்டைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.நாமக்கல் மாவட்டத்தில் முட்டை உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் தினமும் பல லட்சக்கணக்கான முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக முட்டை தினம்ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2 ஆவது வெள்ளிக் கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நாமக்கல்லில், உலக முட்டை தினத்தையொட்டி நாமக்கல் பூங்கா சாலையில் கோவையை சேர்ந்த தனியார் பவுல்ட்ரி நிறுவனம் சார்பில் 10 ஆயிரம் கோழி முட்டைகளை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கினர். புரோட்டின், நோய் எதிர்ப்பு சக்தி, எலும்பு உறுதி, ஞாபக சக்தி அதிகரிக்க தினமும் ஒரு முட்டை சாப்பிட வேண்டும், முட்டை சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பதை வலியுறுத்துவதற்காக பொதுமக்களுக்கு இலவசமாக முட்டைகளை வழங்கினோம் என தனியார் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.</p>
