உலக ஓட்டுநர் தினம்: “சாலை விதிகளை கடைபிடிப்போம்” உறுதிமொழி
1 Jun 2026, 11:43 pm

உலக ஓட்டுநர் தினம்: “சாலை விதிகளை கடைபிடிப்போம்” உறுதிமொழி

சேலம், ஜூன் 1- உலக ஓட்டுநர் தினத்தை முன் னிட்டு, தமிழ்நாடு முழுவதும் சிஐ டியு சார்பில் “சாலை விதிகளை கடைபிடிப்போம்” என்று உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற் றது.

உலகம் முழுவதும் ஜூன் 1 ஆம் தேதி ஓட்டுநர் தினமாக கொண் டாடப்பட்டு வருகிறது.

அதன்ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் இந்திய தொழிற்சங்க மையத்தினர் (சிஐடியு) சாலை விதிகளை கடை பிடிப்போம், விபத்து இல்லாத போக்குவரத்தை தொடர்வோம்.

பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என உறுதிமொழி ஏற்றனர்.

மேலும், ஒன்றிய, மாநில அரசுகள் 8 மணி நேர வேலை வெளி மாநிலங்க ளுக்கு செல்லும் ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பை உத்திரவாதப்ப டுத்த வேண்டும். பொது போக்கு வரத்தை பலப்படுத்தவும், வாழ்வா தாரத்தை பாதுகாக்கவும் குறைந் தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை அரசுகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைககை வலியுறுத்தினர்.

சேலம் புதிய பேருந்து நிலையத் தில் தமிழ்நாடு அரசு போக்குவ ரத்துக் கழக ஊழியர் சங்கம், சேலம் மாவட்ட சாலை போக்குவரத்து மோட்டார் தொழிலாளர் சங்கம் மற் றும் சேலம் மாவட்ட ஆட்டோ தொழி லாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்க ளில் சார்பில் நடைபெற்ற உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கு, சாலை போக்குவரத்து மோட்டார் தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன் தலைமை வகித்தார்.

இதில், சாலை போக்கு வரத்து சங்க பொதுச் செயலாளர் பி.முருகேசன், ஆட்டோ தொழிலா ளர் சங்க செயலாளர் உதயகுமார், பொருளாளர் மகாதேவன், சாலைப்போக்குவரத்து சங்க உதவி தலைவர் மூர்த்தி, மாது டூரிஸ்ட் வேன் ஓட்டுநர் சங்க நிர் வாகி வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு ஈரோடு மாவட்ட சாலைப் போக்குவரத்து சங்கம் தெப்பக்கு ளம் கிளை ஸ்டேண்ட்டில் ஓட்டுநர் தினம் உறுதிமொழி ஏற்பு மற்றும் ஓட்டுநர்கள், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நிகழ்விற்கு மாவட்ட பொதுச்செயலாளர் பெ. கனகராஜ் தலைமை ஏற்றார்.

இதில், ஈரோடு மாவட்ட சிஐடியு ஸ்தாபக பொதுச்செயலாளர் ப.மாரிமுத்து, சிஐடியு மாவட்டப் பொருளாளர் வி.சுரேஷ்பாபு, பிஎஸ்என்எல் ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி சி. பரமசிவம், மருந்து விற்பனை பிர திநிதிகள் சங்க நிர்வாகி எஸ்.நாராய ணசாமி, சுமைப் பணி சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார், ஆட்டோ சங்க பொதுச் செயலாளர் கண்மணி (எ) சேக் தாவூத், சாலைப் போக்குவ ரத்து சங்கத் துணைத் தலைவர் சதா சிவம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் நாமக்கல் மாவட்டம், எலச்சி பாளையத்தில் நாமக்கல் மாவட்ட மோட்டார் இன்ஜினியரிங் தொழி லாளர் சங்கம் சிஐடியு சார்பில் உறு திமொழி எடுத்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச் சிக்கு மாவட்ட துணைத் தலைவர் ஏ.எம்.சி.முனியப்பன் தலைமை வகித்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன் வரவேற் புரையாற்றினார். சங்க மாவட்டச் செயலாளர் சு.சுரேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பள்ளிபாளையம் ஆவத்திபாளையத்தில் நடை பெற்ற நிகழ்விற்கு, இன்ஜினியரிங் சங்க மாவட்டத் தலைவர் எம். ஆனந்தன் தலைமை வகித்தார்.

இதேபோன்று விட்டம்பாளையத் தில் மாவட்டக் குழு உறுப்பினர் மோகன்ராஜ் தலைமையிலும், திருச்செங்கோட்டில் மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.கந்த சாமி தலைமையில், கொக்கராயன் பேட்டையில் மாவட்ட துணைத் தலைவர் ஆனந்தராஜ் தலைமையி லும் கொண்டாடப்பட்டது.

மாவட்டம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் கொண் டாடப்பட்டது குறிப்பிட்டதக்கது.