தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழகத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் மகிழ்ச்சியும் ஏமாற்றமும்!

3 Dec 2025, 2:59 pm
தமிழகத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் மகிழ்ச்சியும் ஏமாற்றமும்!
<p><strong>தமிழகத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் மகிழ்ச்சியும் ஏமாற்றமும்</strong></p> <p>சென்னை, டிச. 3 - தமிழகத்தில் உலக மாற்றுத்திற னாளிகள் தினம் கொண்டாடப்பட்ட இந்தச் சிறப்புமிக்க நாளில் (டிச.3), தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட ஒரு &nbsp;முக்கியமான நடவடிக்கை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் அதே வேளை யில், வேறு பல கோரிக்கைகள் நிறை வேற்றப்படாதது ஏமாற்றம் அளிப்ப தாக &nbsp;தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கூறியுள்ளது. இதுதொடர்பாக, சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பா. ஜான்சி ராணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நியமன உறுப்பினர்கள்: &nbsp; ஒரு வரலாற்று அறிவிப்பு தமிழகத்தில் உலக மாற்றுத் &nbsp;திறனாளிகள் தினம் கொண்டாடப் படும் இந்தச் சிறப்புமிக்க நாளில் (டிச.3), தமிழ்நாடு அரசால் எடுக்கப் பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்படுவதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டு, இன்றைய தினம் சுமார் 3000க்கும் மேற்பட்டோர் நிய மன உறுப்பினர்களாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இது மாற்றுத்திறனாளிகளின் பிரதி நிதித்துவத்தையும், அவர்களுக்கான ஜனநாயக உரிமையையும் உறுதிசெய்வதில் ஒரு முக்கியமான முன்னேற்றம் என்பதில் ஐயமில்லை. சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் அவர்கள் கலந்துகொண்டு இந்த நிய மன உறுப்பினர்களைப் பாராட்டி யதுடன், அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்களையும் தெரி வித்துள்ளார் என்பது சிறப்பானது. &nbsp;மேலும், தமிழகத்தில் மாற்றுத்திறனாளி நல வாரியம் புதிதாக அமைக்கப்பட்டு அறிவிக்கப் பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. கசப்பாக ஆக்கிய குளறுபடிகள் ஆயினும், இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ஒரு சில கசப்பான உண்மைகளையும் சுட்டிக்காட்ட வேண்டிய கடமை ஏற்பட்டுள்ளது. நியமன உறுப்பினர் தேர்வில் பல மாவட்டங்களில், திறமையான, பொருத்தமான மாற்றுத் திறனாளி களின் விண்ணப்பங்கள் நிராக ரிக்கப்பட்டு, மாற்றுத் திறனாளிகளின் இன்றைய கோரிக்கைகள் குறித்து எதுவும் தெரியாத சிலர் ஆங்காங்கே நியமன உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு இருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்தத் தேர்வுகளில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மாற்றுத்திற னாளி நல அதிகாரிகள், சில மாற்றுத் திறனாளி அமைப்பைச் சார்ந்த வர்கள் இணைந்து நியமன உறுப்பி னர் தேர்வில் குளறுபடிகளில் ஈடுபட்டி ருப்பதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. எனவே, பொருத்தமற்ற, தகுதியற்ற நபர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தால், அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் நியமன உறுப்பினர்கள் தேர்வை மறுபரி சீலனை செய்வது உகந்ததாக இருக்கும். நிறைவேறாத எதிர்பார்ப்பு உதவித்தொகை உயர்வு சமூகத்தின் அடிமட்டத்தில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு, கவுரவமான வாழ்க்கைக்கு அடிப் படையாக இருப்பது மாதாந்திர பரா மரிப்பு உதவித்தொகை மட்டுமே ஆகும். இதை நம்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக் கான மாற்றுத் திறனாளிகளும் அவர்களின் குடும்பங்களும், இன்று தமிழக முதல்வர் அவர்களின் மூலம் உதவித்தொகை உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான மாற்றுத் திற னாளிகளின் முக்கியக் கோரிக்கை யான உதவித்தொகை உயர்வு குறித்து எதுவும் அறிவிக்கப்படாதது, மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த நாள் ஒருபுறம் மகிழ்ச்சியும், மறுபுறம் ஏமாற்றமும் அளிக்கும் நாளாக அமைந்துவிட்டது என்பதைத் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். எனவே, இந்த நியமன அறிவிப்பால் ஏற்பட்ட மகிழ்ச்சி யை முழுமைப்படுத்தவும், சமூகத்தில் பின்தங்கியுள்ள மாற்றுத்திறனாளி களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தமிழக அரசு உட னடியாக உதவித்தொகை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு பா. ஜான்சி ராணி குறிப்பிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.