தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாடு

9 Jul 2026, 9:44 pm
விளையாடு

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா

2ஆவது காலிறுதியில் ஸ்பெயின்-பெல்ஜியம் இன்று பலப்பரீட்சை

23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வெள்ளியன்று நள்ளிரவில் நடைபெறும் 2ஆவது காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் - பெல்ஜியம் அணிகள் (ஜூலை 11 அதிகாலை) மோதுகின்றன. இந்த ஆட்டம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இரு அணிகளும் சரிசம பலத்தில் இருந்தாலும், ஆட்டத்திறனில் ஸ்பெயின் சற்று பலமாக இருப்பதால் அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு 15% கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெயின் - பெல்ஜியம்

நேரம் : நள்ளிரவு 12:30 மணி இடம் : லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா சேனல் : ஜீ 5 (ZEE 5), யுனைட்8 (தொலைக்காட்சி)

‘அர்ஜெண்டினாவின் வெற்றி சரியானதுதான்’ நடுவர்கள் மீது பழி சுமத்துவது தவறு - பிபா நடுவர் குழுத் தலைவர் கொலினா

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் - அவுட் 16 சுற்றில், நடப்பு சாம்பியன் அர்ஜெண்டி னா 3-2 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன் னேறியது. 78ஆவது நிமிடம் வரை 2-0 என்ற கோல் கணக்கில் பின்தங்கி இருந்த அர்ஜெண்டினா, கடைசி 14 நிமிடங்களில் 3 கோலடித்து அபார வெற்றி பெற்றது. ஆனால் நடுவரின் (பிரான்சுவா லெடெக்சியர்) ஆதரவால் தான் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்றது என எகிப்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹோசாம் ஹசன் குற்றம்சாட்டினார். இந்நிலையில், எகிப்து பயிற்சியா ளரின் குற்றச்சாட்டை சர்வதேச கால் பந்து சம்மேளன (பிபா) நடுவர் குழுத் தலைவர் கொலினா மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகை யில், “பிரான்ஸ் நாட்டு நடுவர் பிரான் சுவா லெடெக்சியர் எடுத்த முடிவுகளு க்கு முழு ஆதரவு தெரிவிக்கிறோம். குறு கிய காலத்தில் பல போட்டிகள் நடக்கும் போது சில தவறுகள் நடக்கலாம். ஆனால் நடுவர்களின் நேர்மையை யாரும் கேள்வி கேட்க முடியாது. பிபா நடுவர் துறையை, பிபா தலைவர் ஜியானி இன்பான்டினோவால் கூட கட்டுப்படுத்தவோ, மாற்றவோ முடி யாது. முஸ்தபா ஜிகோவின் (எகிப்து) கோல் ரத்து செய்யப்பட்டது முற்றிலும் சரியான முடிவு. ஆதாரமற்ற குற்றச் சாட்டுகள் நடுவர்கள் மற்றும் அவர் களின் குடும்பத்தினருக்கு அச்சுறுத் தல்களை ஏற்படுத்தும். இதுபோன்ற வீண் பழிகளை கால்பந்து விளை யாட்டில் அனுமதிக்க முடியாது” என அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்த மக்களின் உணர்வுப்பூர்வமான குடும்ப மறுசந்திப்பாக மாறிய உலகக்கோப்பை!

23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து என்பது வெறும் விளையாட்டுத் திருவிழா மட்டுமல்லாது, அது உலகெங்கும் சிதறி வாழும் புலம்பெயர்ந்த சமூகங் களின் குடும்ப மறுசந்திப்பாக மாறியுள்ளது. இதற்கு ஹைத்தி நாடு ஒரு எடுத்துக்காட்டு. அமெரிக்காவின் பிலடெல்பியாவின் புகழ் பெற்ற லிங்கன் பைனான்சியல் பீல்ட் மைதா னத்தில் அண்மையில் நடைபெற்ற போட்டியின் போது, அங்கு கூடிய ஆயிரக்கணக்கான ஹைத்தி நாட்டு மக்களுக்கு அது வெறும் 90 நிமிடப் போட்டியாக இருக்கவில்லை; மாறாக அவர்கள் மீண்டும் தங்களது சொந்த மண்ணிற்குள் நுழைந்தது போன்ற தொரு பரவசத்தை ஏற்படுத்தியது. மைதானத்திற்கு வெளியே உள்ள உணவு லாரிகளில் ஹைத்தி நாட்டின் பாரம்பரிய உணவுகளான ‘கிரியோட்’ (Griot - பன்றி இறைச்சி உணவு) மற்றும் பேட்டீஸ்கள் (பப்ஸ்) சூடாக விற்கப்பட்டன. இதனை உலக நாடுகளின் ரசிகர்கள் ஆச்சர்ய மாக கண்டும், உண்டும் மகிழ்ந்தனர். குடும்பம் குடும்பமாக வந்திருந்த மக்கள் தங்களை நீலம் மற்றும் சிவப்பு நிற ஹைத்தி தேசியக் கொடிகளால் போர்த்தியிருந்தனர். இதில் மிக நெகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், ஹைத்தியில் ஒருபோதும் வாழ்ந்திராத, அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த சிறு குழந்தைகள் கூட தங்களின் தேசிய கீதமான ‘லா டெசலினியன்’ பாடலின் ஒவ்வொரு வார்த்தையையும் பிழையின்றி, நெஞ்சுருகப் பாடி மைதானத்தையே அதிர வைத்தனர்.

உலகக்கோப்பைக்கு இடையே அமெரிக்கா அடாவடி அர்ஜெண்டினா கால்பந்து கூட்டமைப்பு மீது எப்.பி.ஐ பணமோசடி விசாரணை

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா கால் பந்து கூட்டமைப்பு மீது அமெரிக்கா வின் உளவு அமைப்பான எப்.பி.ஐ (FBI) பணமோசடி விசாரணையைத் தொடங்கியுள்ளது பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினா கால்பந்து கூட்ட மைப்பின் தலைவரான கிளாடியோ டாப்பியா தலைமையிலான அணி நிர்வாகம், அமெரிக்க நிதி அமைப்பு கள் மூலமாகப் பல நூறு மில்லியன் டாலர்களை முறைகேடாகப் பரிமாற் றம் செய்துள்ளது தொடர்பாக எப்.பி.ஐ விசாரணையை தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகா ணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் ‘டூர் பிராட் என்டர் எல்எல்சி’ (Tour ProdEnter LLC) என்ற நிறுவனம் மூல மாக இந்த நிதி பரிமாற்றங்கள் நடந்து ள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் அர்ஜெண்டினா நாடா ளுமன்ற உறுப்பினர் ஜேவியர் பரோனி மற்றும் அவரது மனைவி எரிகா ஜில் லெட் ஆகியோருக்குச் சொந்தமான இந்த நிறுவனம், சிட்டி பேங்க், பேங்க் ஆப் அமெரிக்கா, ஜேபி மார்கன் உள் ளிட்ட முன்னணி அமெரிக்க வங்கிக் கணக்குகள் மூலம் சுமார் 260 மில்லியன் டாலர் (2,171 கோடி ரூபாய்) பணத்தைக் கையாண்டுள்ளது. இதில் எவ்வித பொருளாதார ஆதார மும் இல்லாத 57 மில்லியன் டாலர் (ரூ. 475 கோடி) நிதி, பல்வேறு போலி நிறுவனங்களுக்குப் பிரித்து வழங்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்தே எப்.பி.ஐ விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினா கால்பந்து தலை வர் கிளாடியோ டாப்பியாவிற்கு இந்த உலகக்கோப்பை காலம் கடுமை யான சோதனையாக மாறியுள்ளது. உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பே ஊழல் புகார்கள், உள் நாட்டு லீக் போட்டிகளில் செய்த குளறு படிகள் எனப் பல விமர்சனங்களை அவர் சந்தித்து வந்தார். உலகக்கோப்பை காலிறுதி ஆட்டங்களில் அர்ஜெண்டினா விளை யாட உள்ள சூழலில், பணமோசடி பெயரில் வீரர்களுக்கும், அணி நிர்வாகத் திற்கும் குடைச்சல் கொடுக்கும் வகை யில் அமைந்துள்ள அமெரிக்காவின் இந்த எப்.பி.ஐ விசாரணைக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் கிளம்பி யுள்ளன.

இங்கிலாந்து - மெக்சிகோ போட்டி உலக சாதனை

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடு களில் தற்போது விறுவிறுப்பாக நடை பெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர், அமெரிக்கத் தொலைக்காட்சி வரலாற்றில் புதிய ஒளிபரப்புச் சாதனைகளைப் படைத்து வருகிறது. அமெரிக்க அணி விளையாடாத போட்டிகளின் வரிசையில், மெக்சிகோ மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நாக் அவுட் - 16 போட்டி, அமெரிக்க வரலாற்றி லேயே மிக அதிகமாகப் பார்க்கப்பட்ட போட்டியாக மாறி அசாத்திய சாத னை படைத்துள்ளது. உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை அமெரிக்காவில் ஆங்கில மொழியில் வர்ணனை செய்யும் உரிமையைப் பெற்றுள்ள பிர பல ‘போக்ஸ்’ (FOX) தொலைக் காட்சி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அதில்,”கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மெக்சிகோ - இங்கிலாந்து இடையி லான விறுவிறுப்பான போட்டியை அமெரிக்காவில் மட்டும் சராசரியாக 21.7 மில்லியன் (2.17 கோடி) பார்வை யாளர்கள் நேரலையில் கண்டு ரசித்துள் ளனர். குறிப்பாக, ஞாயிறு இரவு 10:15 மணி முதல் 10:30 மணி வரை யிலான ஆட்டத்தின் உச்சக்கட்ட பரபரப்பான 15 நிமிடங்களில், பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 25.7 மில்லியனைக் (2.57 கோடி) கடந்து புதிய உச்சத்தைத் தொட்டது” என அதில் கூறப் பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, 2022 கத்தார் உலகக்கோப்பையின் இறு திப்போட்டி (அர்ஜெண்டினா - பிரான்ஸ்) திகழ்ந்தது. மெஸ்ஸியின் அர்ஜெ ண்டினா அணி மகுடம் சூடிய அந்த இறுதிப்போட்டியை 16.7 மில்லியன் மக்கள் பார்த்ததே சாதனையாக இருந்தது. தற்பொழுது அதனை மெக்சிகோ - இங்கிலாந்து ஆட்டம் (21.7 மில்லியன்) மிக எளிதாக முறியடித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.