கோப்பை வெல்லும் அணிக்கு தங்கப்பதக்கம், மோதிரத்துடன் ரூ.491 கோடி
18 Jul 2026, 9:31 pm

கோப்பை வெல்லும் அணிக்கு தங்கப்பதக்கம், மோதிரத்துடன் ரூ.491 கோடி

23ஆவது சீசன் உலகக்கோப்பை தொடரின் மொத்த பரிசுத்தொகை பல்வேறு குளறுபடிகளுடன் அறிவிக்கப்பட்டது. முதலில் ரூ. 6,999 கோடியாக அறி விக்கப்பட்டு இருந்தது. பின் ரூ.8,387 கோடியாக அதிகரிக்கப்பட்டது. இதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

ரூ.8,387 கோடி போட்டியில் வெளிப்படுத்தும் திறமை, செயல் திறன் அல்லாத பிரிவு என இரு வகைகளாக பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, போட்டி யின் வெற்றி, தோல்வி, வீரர்கள் செயல்பாட்டுக்கு என ரூ.6,767.81 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தவிர போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்காக ரூ. 1,617.36 கோடி வழங்கப்படும்.

சாம்பியன் - கோப்பை, பதக்கம், தங்க மோதிரத்துடன் ரூ. 491 கோடி 2ஆவது இடம் - பதக்கம் - ரூ.327 கோடி 3ஆவது இடம் - ரூ.289 கோடி (அடிக்கடி குளறுபடி - முதலில் ரூ.280 கோடி) 4ஆவது இடம் - ரூ. 270 கோடி (முதலில் - ரூ.269 கோடி) 5 முதல் 8 வரை - ரூ. 193 கோடி 9 முதல் 16 வரை - ரூ. 154 கோடி 17 முதல் 32 வரை - ரூ. 116 கோடி 33 முதல் 48 வரை - ரூ. 97 கோடி

மெஸ்ஸிக்கு தங்க காலணி?

கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்க ளில் ஒருவரும், அர்ஜெண்டினா கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி, கோல் டன் பூட் (Golden Boot) என அழைக்கப் படும் தங்க காலணி விருது பந்தயத்தில் முன்னிலையில் உள்ளார். மெஸ்ஸியுடன் பிரான்ஸ் நட்சத்திர வீரர் மாப்பே 8 கோல்க ளுடன் முதலிடத்தில் இருந்தாலும், மெஸ்ஸி தற்போது 4 கோல் உதவிகளு டன் (Assists) முன்னிலையில் உள்ளார். மாப்பே 3 கோல் உதவிகளைப் பெற்றுள் ளார். இறுதிப் போட்டியில் கோலடித்தாலும், கோலடிக்காவிட்டாலும் மெஸ்ஸிக்கு தான் தங்க காலணி என்பது உறுதியாகிவிட்டது. காரணம் பிரான்ஸ் அணி உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. அத னால் மாப்பேவுக்கு வாய்ப்பில்லை. அதே சமயம் இறுதிப்போட்டியில் விளையாடும் ஸ்பெயின் அணியில் மெஸ்ஸியை எதிர்த்து தங்க காலணிக்கு போட்டியிட யாரும் இல்லை. ஸ்பெயின் வீரர் ஒயார்சாபால் 5 கோல், 1 கோல் உதவியுடன் 7ஆவது இடத்தில் உள்ளார்.