உலகக்கோப்பை கால்பந்தின் புதிய சரித்திரம் பல்வேறு சாதனைகளைத் தகர்த்தெறிந்த 23ஆவது சீசன் குரூப் சுற்று
1 Jul 2026, 11:47 pm

உலகக்கோப்பை கால்பந்தின் புதிய சரித்திரம் பல்வேறு சாதனைகளைத் தகர்த்தெறிந்த 23ஆவது சீசன் குரூப் சுற்று

23ஆவது சீசன் கால்பந்து தொடரின் லீக் சுற்றில், அதாவது முதல் 17 நாட்களிலேயே கால்பந்து உலகம் கண்டிராத பல புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள் ளன. ஆப்பிரிக்கா குரூப் சுற்றுகளின் முடிவில் 32 அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன (ஐரோப்பா - 13, ஆப்பி ரிக்கா - 9, தென் அமெரிக்கா - 5, வட அமெரிக்கா - 3, ஆசியா - 2). இதில் உலகக்கோப்பை வர லாற்றிலேயே முதன்முறையாக ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த 9 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி புதிய சாதனை படைத் துள்ளன. 215 கோல்கள், மெஸ்ஸி குரூப் சுற்றில் மட்டும் மொத்தம் 215 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன (சரா சரியாக ஒரு போட்டிக்கு 3 கோல்கள்). பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய அணிகள் தலா 10 கோல்களு டன் முதலிடத்தில் உள்ளன. அதே போல உலகக்கோப்பையில் தொடர்ந்து 7 போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை மெஸ்ஸி (அர்ஜெண் டினா கேப்டன்) படைத்துள்ளார்.மேலும், உலகக்கோப்பை வரலாற் றில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டி யலில் 19 கோல்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். அதோடு, உலகக் கோப்பையில் ஹாட்ரிக் கோல் அடித்த மிக வயதான வீரர் (38 வயது 357 நாட்கள்) என்ற பெருமையும் மெஸ்ஸி யிடம் தான் உள்ளது. 46 லட்சம் ரசிகர்கள் குரூப் சுற்றின் 72 போட்டிகளை மைதா னத்தில் நேரில் காண 46,44,549 (4.6 மில்லியன்)ரசிகர்கள் திரண்டு வந்துள்ளனர். இது 1994 அமெரிக்க உலகக்கோப்பை யின் மொத்த சாதனையான 35 லட்சத்தை குரூப் சுற்றிலேயே முறி யடித்துள்ளது. மைதானங்களின் இருக்கைகள் 99.7% நிரம்பின. குறிப் பாக, ஜூன் 25 அன்று ஒரே நாளில் மட்டும் 4,26,834 ரசிகர்கள் மைதானத் திற்கு வந்து புதிய சாதனை படைத் தனர். அதே போல உலகெங்கிலும் உள்ள ‘FIFA Fan Festivals’ எனப்படும் பொதுக் கொண்டாட்ட மையங்களில் 55 லட்சம் (5.5 மில்லியன்) ரசிகர்கள் கூடிப் போட்டிகளைக் கொண்டாடியுள்ளனர். 23ஆவது சீசன் உலகக் கோப்பை கால்பந்து தொட ரின் லீக் சுற்று முடிவில் மொத்தம் 1,774 கோல் முயற்சிகள் (Shot s) மேற்கொள் ளப்பட்டன. இதில் பெல்ஜியம் அதிக பட்சமாக 73 கோல் முயற்சிகளைச் செய்தது. அதே போல இந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற 48 அணிகளில் 47 அணிகள் கோல் அடித்துள்ளன. பனாமா மட்டுமே ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை அடிக்கப்பட்ட மொத்த கோல்களின் எண்ணிக்கை 2,935-ஐ (நாக் அவுட் சேர்க்கவில்லை) எட்டி யுள்ளது. கனடா

• கத்தாருக்கு எதிரான போட்டியில் கனடா 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. உலகக்கோப்பை வர லாற்றில் வடஅமெரிக்கா கண்டத் தைச் சேர்ந்த ஒரு அணி 4 கோல் ்களுக்கு மேல் அடிப்பது இதுவே முதல்முறையாகும்.

• குராசோ அணியின் தலைமை பயிற்சி யாளர் டிக் அட்விகாட், தனது 78 வயது 271 நாட்களில் அணியை வழிநடத்தி, உலகக்கோப்பை வர லாற்றிலேயே மிக வயதான பயிற்சி யாளர் என்ற சாதனையைப் படைத் தார்.

• மொரோக்கோவின் இஸ்மாயில் சைபாரி உலகக்கோப்பையின் தொடர்ச்சியான 3 போட்டிகளில் கோலடித்த முதல் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அதே போல உலகக்கோப்பை போட்டி ஒன்றில் 5 கோல்களை அடித்த முதல் ஆப்பிரிக்க அணி என்ற சாதனையை செனகல் அணி படைத்தது.

• இந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற 1,248 வீரர்களில், 354 பேர் ஏற்கெனவே உலகக்கோப்பையில் விளையாடியவர்கள்.894 வீரர்கள் முதன்முறையாக களமிறங்கி யுள்ளனர். 1,248 வீரர்களில் 999 பேர் குறைந்தது ஒரு போட்டியிலாவது விளையாடினர். இதில் 687 பேர் மாற்று வீரர்களாக களம் புகுந்த னர். அணிகள் சராசரியாக ஒரு போட்டிக்கு 4.77 வீரர்களை மாற்றாகப் பயன்படுத்தின. ஈராக், மெக்சிகோ மற்றும் நார்வே ஆகிய மூன்று அணிகள் தங்களின் ஸ்கு வாடில் இருந்த 25 வீரர்களைப் போட்டிகளில் பயன்படுத்தி, தங்க ளது முழு அணியையும் களமிறக் கின.

• குரூப் சுற்றில் மொத்தம் 68,162 பாஸ்கள் செய்யப்பட்டன (போட்டி க்கு சராசரியாக 946.7). ஸ்பெயின் அணி அதிகப்பட்சமாக 2,191 பாஸ் களைச் செய்தது, அதில் 2,013 வெற்றிகரமானவை. மொத்தம் 2,359 வெற்றிகரமான கிராஸ்கள் செய்யப்பட்டன. இதில் கனடா அணி 117 கிராஸ்களுடன் முதலிடத்தில் உள்ளது.