உலக தென்னை தின விழா
2 Sept 2026, 10:36 pm
<p><strong>உலக தென்னை தின விழா</strong></p><p>கோவை, செப்.2-தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உலக தென்னை தின விழா புதனன்று நடைபெற்றது.கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் புதனன்று உலக தென்னை தின விழா நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் செயல் துணைவேந்தர் மு.இரவீந்திரன் தலைமை வகித்தார். அப்போது, தென்னையின் பல்வேறு ரகங்கள், வறட்சி மேலாண்மை, நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாடு, ஊடுபயிர் சாகுபடி, மதிப்புக்கூட்டுதல் உள்ளிட்ட துறைகளில் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அவர் விளக்கினார்.</p><p>தென்னை வளர்ச்சி வாரிய இயக்குநர் இள அறவாழி, தென்னை வளர்ச்சியில் வாரியத்தின் பங்கு குறித்து சிறப்புரையாற்றினார். கோவை தோட்டக்கலை துணை இயக்குநர் பி.சித்தார்தன், தோட்டக்கலைக் கல்லூரி முதன்மையர் க.வெங்கடேசன் மற்றும் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநர் ஏ.சோமசுந்தரம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 500 தென்னை விவசாயிகள், விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.</p>
