மார்க்கம்பட்டியில் உலகத் தரத்தில் முருங்கை ஏற்றுமதி மண்டலம்! அமைச்சர் அர. சக்கரபாணி உறுதி
11 Apr 2026, 5:30 am
<p><strong>மார்க்கம்பட்டியில் உலகத் தரத்தில் முருங்கை ஏற்றுமதி மண்டலம்! அமைச்சர் அர. சக்கரபாணி உறுதி</strong></p><p>சின்னாளப்பட்டி, ஏப். 10 - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் 7-ஆவது முறையாக போட்டியிடும் அமைச்சர் அர. சக்கரபாணி மார்க்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>அப்போது, திமுக ஆட்சியில் தொகுதியில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகளை எடுத்துரைத்தார். திமுக மீண்டும் ஆட்சி அமைத்ததும், மார்க்கம்பட்டி ஊராட்சியில் 15 ஏக்கரில் உலகத்தரம் வாய்ந்த முருங்கை ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படும் என உறுதியளித்தார்.</p>
