உலக குருதி கொடையாளர் தின ரத்ததான முகாம்
8 Jul 2026, 10:45 pm
<p><strong>உலக குருதி கொடையாளர் தின ரத்ததான முகாம்</strong> </p><p>ராணிப்பேட்டை, ஜூலை 8 – உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன் செவ்வாயன்று (ஜூலை 7) தொடங்கி வைத்தார். ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்தும், அதன் மூலம் உயிர்களைக் காப்பதில் கொடையாளர்களின் பங்களிப்பு குறித்தும் அவர் இம்முகாமில் எடுத்துரைத்தார். இந்நிகழ்வின் போது இணை இயக்குநர் சுகாதார சேவைகள் மரு.நிவேதிதா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு. செந்தில்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. உஷா நந்தினி, இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மரு. சந்தியா வதனா, தொற்று நோயியல் நிபுணர் மரு.விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.</p>
